
குழந்தைகளே,
உங்கள் அன்பான இணைய அங்கிளான இந்த சுரேஷ் அங்கிளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்:
நான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துகொண்டிருப்பது,
சென்னையே!!!
இயல், இசை, நாடகம்: என் 10 வயதிலிருந்தே பல
மேடைகளில் பேச/பாட ஆரம்பித்தேன்.
பரிசுகள்: ஆங்கில பேச்சுப் போட்டிகள், எழுத்துப் போட்டிகள் இவற்றில் முதல் பரிசுகள்
பெற்றுள்ளேன்.
பாராட்டியவர்கள் : பலர்...
இசை: கர்நாடக சங்கீதத்தில் வாய்ப்பாட்டு கொஞ்ச காலம். பிறகு அதிகமும் கேள்வி
ஞானமே!!!
நடனம் ஓரளவு தெரியும், பள்ளியில் பங்கேற்றது உண்டு.
நாடகம்: எனக்கு ரொம்பப் பிடித்த ஒன்று. எல்லா வருடங்களும் படித்த பள்ளியில்
எனது நாடகம் நடந்தேறும். நடிகனாக வேண்டுமென்ற அன்றைய ஆசை தான் காரணம்!!!
தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், மலையாளம், கொஞ்சம் ஹிந்தி...கன்னடம்
தெலுங்கு..
கலைத்துறை அனுபவம்: ஐந்து கவிதைத் தொகுப்புகள் எழுதி வெளியிட்டுள்ளேன்.
குங்குமம், பெண்ணே நீ, மங்கையர் மலர், தமிழோசை நாளிதழ் இவைகளில் எனது
படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன...
இணைய தள இதழ்கள் பலவற்றில் எனது கவிதைகள் வெளிவந்து
கொண்டிருக்கின்றன..
படிப்பு: B.Com.
தொழில்: சென்னையிலுள்ள ஒரு பன்னாட்டு நிறுவனமொன்றில் Senior Executive -
ஆகப் பணியாற்றி வருகிறேன்.
பொதுநல சேவை: முதியோர் இல்லங்களிலும் அனாதை இல்லங்களிலும்
இருப்போர்களைச் சந்தித்து அவர்களோடு நேரத்தை செலவு செய்து மகிழ்வது.
பிடித்தது: கவிதையும் ஆன்மீகமும்
மனிதர்களில் அதிசயம்: தாயும் தந்தையும்
மறக்க முடியாதது: இறைவனின் கிருபைகள்
பார்த்து ரசிப்பது: மழலைகளின் புன்னகை, இயற்கை, கவிதை வரிகள்...
திருப்தி தருவது: ஞாயிறு மதிய உறக்கம் :-), கஜல் பாடல்கள், என் கவிதைகள்
பாராட்டு பெற்று என் பெயரை எல்லோரும் மறந்து போவது, எனக்கான உணவை
அடுத்தவனுக்குக் கொடுத்துப் பட்டினியோடு மகிழ்ந்திருப்பது...
பிடிக்காதது: எனது தவறுகள்
வேண்டுவது: உலக சமாதானம்
நன்றி
அன்புடன்
சுரேஷ் அங்கிள்
படைப்புகள்
மழலைகள்.காம் தளத்தில்:
மேகமே, மேகமே - கவிதை
ஞானத்துளிகள்
எதிர்பார்ப்பு - கவிதை
நானே நானா? - கவிதை
மகேஷும் கிரிக்கெட்டும் - சிறுகதை
கண்ணீர் நொடிகள் - கவிதை
சிந்தனை செய் மனமே - கவிதை