மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 
இருமொழிப் புலவர்       ஆகிரா

 

உள்ளே

 இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management


வெளியே

தமிழிலக்கியம்
தமிழிதழ்கள்
தமிழ்மணம்
நிலாச்சாரல்
சுரதா.காம்
தேன்கூடு
தினமலர்
தினகரன்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services

அறிமுகம்

மழலைகளுக்காக முத்தான பல இனிய தமிழ்க் கவிதைகளை இயற்றி மழலைகள்.காம் தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வரும் திரு சுப்பராமன் அவர்கள் ஒரு தமிழ்-ஆங்கில இரு மொழிப் புலவர்.

1941ம் ஆண்டு காரைக்குடியில் திருமிகு என் ஆர் விச்வநாதன் இலக்குமிஅம்மாள் அவர்களுக்கு இரண்டாம் மகனாகப் பிறந்தவர் என் வி சுப்பராமன். கணிதத்தில் பட்டம் பெற்ற இவர் ஒரு இருமொழிக் கவிஞர், கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், பேச்சாளர், பயிற்சியாளர். இவருடைய தமிழ் ஆங்கிலக் கவிதைகள் பல கவிதை இதழ்களில் வெளியிடப் பட்டுள்ளன. 1996ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து "உலகக் கவிஞர்கள் அமைப்பு" வெளியிடும் "உலகக் கவிதைகள் (World Poetry) என்ற தொகுப்பில் இவரது ஆங்கிலக் கவிதைகள் இடம் பெற்று வருகின்றன.

இதுவரை இவர் ஆக்கிய நூல்கள்:

1998 Gift of Life ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு

1999 நிலவே நீ சொல் தமிழ்க் கவிதைத் தொகுப்பு

2000 Breeze ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு

2001 திருவள்ளுவர் ஆத்திசூடி தமிழினின்று ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு நூல்

2002 வள்ளுவர் குரல் Voice of Valluvar தமிழினின்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு நூல்

2005 சீ.ஆர்.ஆர். அட் தி பீக் (C.R.R. at the Peak) வாழ்க்கை வரலாற்று நூல் தமிழினின்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு

2006 முத்தமிழ் மலர்கள் இயல், இசை, நாடக நூல்

தற்பொழுது முனைவர் சேயோன் அவர்களது அமுத மொழிகள் என்ற திருக்குறள் விளக்க நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருகிறார். இதுவரை 1100 குறள்களும், அவற்றின் விளக்கங்களும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.விரைவில் இந்நூல் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு வெளிவர இருக்கிறது.

ஆண்டு 2000த்தில் இந்திய இளங்கவிஞர் மன்றம் (Young Poets Club of India) என்ற அமைப்பைத் துவக்கி, இளங்கவிஞர்

Young Poet

என்ற மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மலரும் ஆங்கிலக் கவிதை மலரை வெளியிட்டு வருகிறார். இதுவரை வெளியிடப்பட்ட இதழ்களில் 150 இளங்கவிஞர்கள் (25 வயதுக்குட்பட்ட கவிஞர்கள்) தம் 300க்கும் மேற்பட்ட ஆங்கிலக்கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

2004ஆம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டில் இவர் எழுதிய "திருவள்ளுவர் ஆத்திசூடி - An Innovative Concept in the world of Thiruvalluvam என்ற கட்டுரை வழங்கப்பட்டு, மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரிலும் இடம் பெற்றது.

2005ஆம் ஆண்டு அமெரிக்க வாஷிங்டன் நகரில் நடைபெற்ற உலகத் திருக்குறள் மாநாட்டில் வழங்குவதற்கு இவரது "Valluvam Inspired Mahatma Gandhi" என்ற கட்டுரை தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் வெளியிட்ட குறுந்தகட்டிலும் இடம் பெற்றது.

திரு சுப்பராமன் பல தமிழ், ஆங்கிலக் கவி அரங்கங்களில் பங்கேற்று, தமது கவிதைகளையும், கட்டுரைகளையும் வழங்கியிருக்கிறார்.

கல்கத்தா மைக்கேல் மதுசூதன் அகாதமி அவார்ட் 1997, சென்னை பெல்லோ ஆஃப் தி யுனைடெட் ரைடர்ச் அச்சோசியேசன் ஆஃப் இன்டியா 1998, சென்னை உலகத்திருக்குறள் வாழ்வியல் நெறிச்சங்கம் வழங்கிய திருக்குறள் ஞாயிறு 2007 ஆகிய விருதுகள் இவர் பெற்ற பல விருதுகளுள் அடங்கும்.

அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் திரு விக்ரமன் வெளியிடும் இலக்கியப் பீடம் என்ற இலக்கிய மாத வெளியீட்டின் பிப்ரவரி 2006 இதழில் இளங்கவிஞர் சுப்பராமன் என்ற தலைப்பில் இவரது நேர்காணல் வெளியிடப்பட்டது.

இலண்டனிலிருந்து வெளிவரும் மின்னணு இணையதள வார இதழான நிலாச் சாரல் இவருக்குத் தொழில் கவிதை என்ற தலைப்பில் 2006 பிப்ரவரி மாதத்தில் இவருடைய நேர்காணலை வெளியிட்டது.

ஜெயா டி.வி.. யில், காலை மலர் பகுதியில் இவரது நேர்காணல் ஒளி பரப்பப்பட்டது.

திரு என்.வி. சுப்பராமன் ஆயுள் காப்பீட்டுக் கழக துணை மண்டல மேலாளராக இருந்து 2001ஆம் ஆண்டு பணி நிறைவு செய்தவர். தற்பொழுது சென்னையில்

AARGEE CENTRE FOR OVERSEAS EDUCATION

என்ற ஆர்ஜீ வெளிநாட்டு உயர் கல்வி மையத்தின் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு திருமதி ரேணுகா என்ற மனைவியும், மூன்று புதல்வர்களும் இருக்கின்றனர்.

திரு சுப்பராமன் அவர்கள் முகவரி:
12 / 1045, ஜீவன் பீமா நகர்
சென்னை 600101
தொலைபேசி எண்: 044-26544950, 9840477552.

YOUR FEEDBACK FOR THIS ARTICLE

Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com