மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 
பன்முகப் படைப்பாளி       அறிமுகம் - ஆகிரா

 

உள்ளே

 இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management


வெளியே

தமிழிலக்கியம்
தமிழிதழ்கள்
தமிழ்மணம்
நிலாச்சாரல்
சுரதா.காம்
தேன்கூடு
தினமலர்
தினகரன்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services

ஷைலஜா

அன்பு வாசகர்களே, மழலைகளின் எழுத்தாளர் திருமதி ஷைலஜா அவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இவரது இயற்பெயர் மைதிலி ஸ்ரீரங்கத்து மண்ணில் பிற்ந்து வளர்ந்த இவரது தந்தை ஒரு எழுத்தாளர். இவர் கணவருடனும் தன் இரு பெண்களுடனும் வசிப்பது பெங்களூரில்.

இவர் மகாகவி பாரதியின் பக்தை. அத்துடன் திருவரங்கநகர்மீது தீராக்காதல்கொண்ட திருவரங்கப்ரியா!

எப்பொழுதும் கலகலப்பாக நகைச்சுவை உணர்வுடன் விளங்கும் இவர் 3 முறை ராஜ் டி.வி.யில் நகைச்சுவை நாடகங்களில் பங்கேற்றுள்ளார். கோவை, திருச்சி, பெங்களூர் வானொலி நிலயங்களில் நிகழ்ச்சி நடத்தி, தனது படைப்புகளை வாசித்திருக்கிறார். விளம்பரப்படம், குறும்படங்களுக்குப் பின்னணிக் குரல் தருகிறார். சிஃபி தமிழ் இணைய தளத்தில் குரல் பதிவுகள் அளிக்கிறார். இணையதள வானொலி ஒலி எஃப் எம்மில் அறிவிப்பாளராய் பகுதி நேரங்களில் பணிபுரிகிறார். ஓவியம், சங்கீதம், ரங்கோலி முதலியவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் ஒரு சமையல் கலைப் பிரியர். புதிய சில கண்டுபிடிப்புகளைப் பத்திரிகைகளில் எழுதி உள்ளார்.

எழுத்துத் துறையில் ஆழ்ந்த பற்றுள்ள இவர் விகடன், தினமலர், கல்கி, அமுதசுரபி, கலைமகள் ஆகியவைகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுகளும், நாடகம் 2ல் நடித்து இரு முறை சிறந்த நடிகை விருதும் வாங்கி உள்ளார். பொதிகை தொலைக்காட்சி நடத்திய பொங்கல் சிறப்பு விமர்சனக் கவிதையில் சிறப்புப் பரிசும், இணையத்தில் மரத்தடி.காம், தமிழ் உலகம், முத்தமிழ், அன்புடன் குழுமங்கள் நடத்திய கதை கவிதைப் போட்டிகளில் பரிசுகளும் அடைந்துள்ளார். இவர் எழுதி, தினபூமி, தினச்சுடர், கலைமகள் இவைகளில் தொடர் நாவலும், ஒரு சிறுகதைத் தொகுப்பும் சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன. ஒரு மூறை திருச்சி எழுத்தாளர் சங்கம் அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக இவரது கதையினைத் தேர்ந்தெடுத்தது. இவரது 3 கதைகள் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

200 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 12 கவிதைகள், 10 கட்டுரைகள் இதுவரை பத்திரிகைகளில் பிரசுரமாகி உள்ளன.

நல்ல படைப்புகளை எழுதி அனைவரும் பயன் பெற வேண்டுமென்ற ஆர்வமுள்ளவர் இவர். வருங்காலத் தலைவர்களான மழலைகள் இவரது படைப்புகளைப் படித்து இன்புற்று, அவர்களும் இவர்போல் வாழ்வில் திறமையுடன் விளங்க எல்லாம் வல்ல இறைவன் அருளை வேண்டுகிறேன்.

ஆகிரா

நிலாச்சாரலில் வெளியான நேர்முகம்:

"ஆடியன்ஸ் எண்ணி மூன்றே பேர்தான்" - ஷைலஜாவுடன் நேர்முகம்

YOUR FEEDBACK FOR THIS ARTICLE

Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com