தாயென்று கும்பிடடி பாப்பா
- விஸ்வாமித்திரர்
ஆகிரா
கௌசிகன்
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுகலான்
என்பது வள்ளுவர் வாக்கு.
எவனொருவன் மற்ற எல்லா உயிர்கட்கும் மதிப்பளித்து, செம்மையான அன்பு செலுத்தி அற நெறி வழுவாது வாழுகிறானோ அவன்தான் அந்தணன் அல்லது பிராமணன் எனப்படுகிறான் என்பது இக்குறளின் பொருள். "பிராமண்யமாவது பிறப்பினாலா? ஒழுக்கத்தினாலா?" என்ற கேள்வியை தரும தேவதை பஞ்ச பாண்டவர்கள் ஐவரில் மூத்தவனான தரும புத்திரனிடம் கேட்பதற்கு அவன், "ஒழுக்கத்திற் சிறந்தவனே பிராமணன் ஆவான், எவ்வளவு உயர்ந்த குடியில் பிறந்திருந்தாலும் ஒழுக்கம் கெட்டவன் பிராமணன் ஆக மாட்டான்." என்று பதிலளித்ததாக மஹாபாரதக் கதையில் கூறப்படுகிறது.
பிராமணன் அல்லது அந்தணன் என்பவன் யார்? பிராமணன் ஒருவனுக்கு மகவாய்ப் பிறந்தவன் தான் பிராமணனா? என்ற கேள்விக்கு விஸ்வாமித்திரர் சரித்திரத்தில் விடை கிடைக்கிறது.
கௌசிகன் எனும் அரசன் ஒரு முறை தன் சேனை பரிவாரங்களுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மிகுந்த நேரம் காட்டில் மிருகங்களை வேட்டையாடிக் களைப்பும், பசியும், தாகமும் அடைந்த அரசனும் அவனது சேனையும் உணவும், தண்ணீரும், உணவருந்தி ஓய்வெடுக்க இடமும் தேடினர். அவர்களுக்கு அவ்வனத்தின் அருகிலிருந்த ஒரு ஆஸ்ரமம் தென்பட்டது. அதன் அருகில் சென்று பார்க்க அங்கே வசிஷ்டர் எனும் முனிவர் ஒருவர் இருப்பது தெரிந்தது.
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||
| Designed and maintained by AKR Consultants | |||||||













