மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
புலவர் வைரா
|
|
இராஜசூய யாகம் தொடர்ச்சி
தருமன் கண்ணானிடம் கேட்டார், "பரந்தாமா, தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கிறது. அதோ தெரிகிறதே அந்த வீட்டில் குடிக்கத் தண்ணிர் கேட்கலாமா?" கண்ணன், "தாராளமாகக் கேட்கலாமே, வா கேட்கலாம்" என்று கூற இருவரும் அந்த வீட்டிற்குச் சென்று தண்ணீர் கேட்டனர். அந்த வீட்டுப் பெண்மணி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த அந்தப் பாத்திரம் தங்கத்தாலான சொம்பு. தண்ணிரைத் தங்கச் சொம்பில் தருகிறார்களே என்று வியப்பில் ஆழ்ந்தார் தருமன். தண்ணீரைக் குடித்தார். சொம்பை அந்தப் பெண்ணிடம் திருப்பிக் கொடுத்தார். அந்தப் பெண்ணோ அதை வாங்க மறுத்தாள். அவள் சொன்னாள், "எங்களுக்கெல்லாம் கொடுத்துத்தான் பழக்கம், திரும்ப வாங்கிப் பழக்கம் இல்லை." தருமன் சொன்னார், "தண்ணீர் கொடுத்ததே போதும், சொம்பு எனக்கு வேண்டாம்." "சொம்பு எனக்கும் வேண்டாம்" அந்தப் பெண் கூறினாள். "சொம்பை என்ன செய்வது?" என்று தருமன் கெட்டார். "வேண்டுமானால் எடுத்துச் செல்லுங்க்கள். வேண்டாமென்றால் எங்காவது வீசி எறிந்துவிட்டுச் செல்லுங்க்கள்" என்று அந்தப் பெண் சொன்னாள். இதைக் கேட்ட தருமனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அவர் மனதில் நினைத்தார், "ஒரு மன்னனாக இருந்துகொண்டு பரிசாகவும், தருமமாகவும் நான் செய்யும் ஒரு பெரிய செயலை இந்தச் சாதாரணப் பெண் செய்கிறாளே!" என்று. தருமன் இந்த நினைப்போடு கண்ணனைப் பார்த்தார். இந்த நினைப்போடு இருந்த தருமனின் பார்வையைக் கண்டு கொள்ளாத கண்ணன் மேலே செல்லலாம் என்று ஜாடை காட்டிவிட்டு நடந்தார். அவர் தருமனுக்குப் பின்னால் சென்று கொண்டுருந்தார். இருவரும் நீண்டதூரம் நடந்தனர். மாபலிச் சக்கரவர்த்தியின் அரண்மனையை நெருங்கினர். உள்ளே சென்றனர். மாபலிச் சக்கரவர்த்திக்குக் கண்ணனை முழுமையாகத் தெரியும். தருமனைக் கொஞ்சம் கூடத் தெரியாது. மாபலிச் சக்கரவர்த்தி கண்ணைனை, "வாருங்க்கள்! வாருங்க்கள்!" என்று வரவெற்றார். மாபலிச் சக்கரவர்த்தியின் வரவேற்பை ஏற்ற கண்ணன் அமர்ந்தார், தருமனையும் அமரச் சொன்னார். மாபலிச் சக்கரவர்த்தியிடம் தருமனைச் சுட்டிக்காட்டிக் கண்ணன் சொன்னார், "இவர்தான் தரும மகாராஜா, பாண்டவர்களில் மூத்தாவர். தரும சிந்தனை உள்ளவர். தின்மும் தண்ணிடம் வருபவர்க்கு நிறையப் பொன்னையும், பொருளையும் வாரி வாரிக் கொடுப்பார். எத்தனை பேர் வந்தாலும், இல்லை என்று சொல்வதே இல்லை". க்ண்ணனின் இந்தப் பேச்சை கேட்ட மாபலிச் சக்கரவர்த்தி கண்ணனிடம் கேட்டார், "இவர் பெயர்தான் தருமனா?" "ஆம்" "இவர்தான் பாண்டவர்களின் மூத்தவரா?" "ஆம்" "த்ன்னிடம் வருகின்ற மக்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவரா? "ஆம்" "அதிக அளவில்ல் மக்கள் வருவார்களா? "ஆம்" "எவ்வுளவு பேர் வந்தாலும் கொடுப்பாரா? "ஆம்" "கொடுக்கக் கொடுக்க மக்கள் வந்து கொண்டு இருக்கிறார்களா? கண்ணா, சற்று யோசித்து பதில் சொல்லுங்கள்" என்று கூறிவிட்டு மாபலி சொல்ல ஆரம்பித்தார், "ஒவ்வொருவருக்கும் அவர்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு தருமன் கொடுப்பதில்லை என்று இதிலிருந்து தெரிகிறது. கொடுக்கக் கொடுக்க வ்ந்துகொண்டே இருக்கிறார்கள் என்றால் அவ்வளவு ஏழைகள் இருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது அல்லவா? இவ்வளவு ஏழைகள் உள்ள இந்த நாட்டு ம்ன்னனைத் தான் தரும் சிந்தனை உள்ளவர் என்று தாங்கள் பாராட்டுகிறீர்கள், என்னால் இதை ஏற்றுக்கொள்ள இயலாது. என்னுடைய ஆட்சியில் எவ்வளவு வாரிக் கொடுத்தாலும் வாங்கிச் செல்ல யாரும் வர மாட்டார்கள். வறுமை என்பதே என் நாட்டில் கிடையாது, எல்லோரும் எல்லாச் செல்வங்களும் பெற்றிருக்கின்றனர். தருமன் ஆட்சியில் மக்கள் எந்தச் செல்வத்தையும் முழுமையாகப் பெற்றிருக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இப்படிப்பட்டவரை எனக்கு அறிமுகம் செய்ய வேண்டாம்". இதைக் கெட்ட தருமன் வெட்கப்பட்டுத் தலை குளித்தான். தன்னால் மட்டுமே இச்செயலைச் செய்ய முடியும் என்ற எண்ணம் அவனை விட்டு நீங்கியது. "நான்தான் பெரியவன் என்ற கர்வம் தோன்றும் போது அதை அடக்கும் விதமாக ஏதாவது ஒரு செயல் இறைவன் அருளால் நடக்கும்". புலவர் வை. ராஜேந்திரன் |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |