Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children               Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
புதையல் பெட்டகம் - 3
எஸ்.வி.என்.


வணக்கம் குழந்தைகளே,

உங்களில் ஒரு சாரார் ஆண்டுத்தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்திருப்பீர்கள், வேறொரு சாரார் ஆண்டுத் தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கி§றேன். கிரேக்கக் கடவுள் ஜீயசைப் பற்றிப் பார்த்தோம். நான் முன்பே சொன்னது போல கிரேக்கப் புராணங்கள் சமயத்தை மட்டும் போதிக்கவில்லை. கற்பனை வளம் மிக்க நல்ல இலக்கியங்களாகத் திகழ்ந்தன. பழம் பெரும் புராணங்கள் யாவையுமே நமக்கு இயற்கை நியதிகளை விளக்குவதாக அமைகின்றன.

சரி வாருங்கள் கதைக்குப் போவோம்.

ப்ரோமெத்தியஸும் அவன் மனிதனுக்குக் கொடுத்த பரிசும்.

கிரேக்கக் கடவுள் ஜீயஸ் மனிதனைப் படைக்கும் வேளை வந்தது. அந்த முக்கியமான வேலையை ப்ரோமேதியஸ் எப்பிமேத்தியஸ் என்ற இரு சகோதரர்களுக்குக் கொடுத்தார். அவரவர் படைக்கும் உயிரினங்கள் பூமியில் வாழத் தேவையான மிகச்சிறந்த பரிசு ஒன்றையும் அவர்களுக்குக் கொடுக்கும் படி ஜீயஸ் அவர்களுக்கு உத்தரவிட்டான். ப்ரோமேத்தேசியஸ் என்றால் முன்யோசனை என்று பொருள். இவன் ஒரு விஞ்ஞானி. எதையும் பல முறை யோசித்து செயல் படுபவன். விவேகத்துடன் செயல் படும் ஒரு தலை சிறந்த அறிவாளி. அவனது தம்பி எப்பிமேத்தியஸ் இதற்கு நேர்மாறானாவன். அவனது பெயரின் பொருளே” பின் யோசனை” என்பது தான். எந்த ஒரு செயலையும் வேக வேகமாகச் செய்து முடிப்பான். செயலைச் செய்து முடித்த பின்பே அதன் விளைவுகளைப் பற்றி யோசிப்பான்.

இதே வேளையில் தம்பி தான் படைத்த விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தான் கொடுக்க வேண்டிய பரிசுகளைக் கொடுத்தான். புலிக்குக் கூரிய நகங்களைக் கொடுத்தான். சிங்கத்திற்கு கர்ஜனையைப் பரிசாகக் கொடுத்தான். பறவைகளுக்கு இறக்கைகளைப் பரிசாகக் கொடுத்தான். ஆடு மாடுகளுக்குக் கொம்பைப் பரிசாகக் கொடுத்தான். சில விலங்குகளுக்கு வேகத்தைப் பரிசாகக் கொடுத்தான். சிலருக்கு வலிமையைப் பரிசாகக் கொடுத்தான். சிலருக்குத் தந்திரத்தையும் தைரியத்தையும் கொடுத்தான். சில மிருகங்களுக்கு விவேகத்தைக் கொடுத்தான். பலருக்குக் குளிரில் வாடாமல் இருக்கக் கம்பளி போன்ற தோலைக் கொடுத்தான். தன் செயல்பாடை எண்ணி எப்பிமேத்தியஸ் பெருமையாக மகிழந்திருந்த வேளையில் ப்ரோமேத்தேசியஸ் அவனை அணுகினான்.

“தம்பி நான் உருவாக்கிய மனிதன் உயிர் பெற்று விட்டான். வா நாம் இருவரும் சென்று அவனுக்கு ஒரு உயரிய பரிசைக் கொடுக்கலாம் என்று கூறினான்.

எப்பிமேத்தியஸ் தலை குனிந்தான், "அண்ணா, என்னை மன்னித்து விடு, நான் என்னிடம் இருந்த எல்லாத் தலை சிறந்த பரிசுகளையும் பறவைகளுக்கும் விலங்குகளுக்குமே கொடுத்து விட்டேன். நான் வேறு எதையும் யோசித்துப் பார்க்கவே இல்லை. என்னை மன்னித்து விடு” என்றான்.

தம்பியின் மேல் ப்ரோமேத்தேசியஸ் மிகுந்தக் கோபம் கொண்டான்.” இப்போது நான் படைத்த இந்த மனிதனுக்கு எதைப் பரிசாகத் தருவேண்? எல்லாவற்றிலும் உயர்ந்த ஒரு தலை சிறந்த பரிசைத் தான் நான் கொடுக்க விரும்புகிறேன் என்றபடித் தீவிரமாக யோசித்தான்

கடவுளர்கள் மட்டுமே பயன் படுத்திக் கொண்டிருக்கும் நெருப்பை மனிதனுக்குப் பரிசாகக் கொடுத்தால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது? அந்த எண்ணம் வந்தவுடன் அவன் உற்சாகமானான். ஆனால் கடவுளர்களிடமிருந்து எப்படி இந்த நெருப்பைப் பெறுவது?

“மனிதனே நீ இந்தத் தீயை வைத்துக் கொண்டு இந்த பூமியில் உயிர் வாழ்/ இதைக் கொண்டு உன் உணவை சமைத்துக் கொள். உனக்குத் தேவையான கருவிகளை உருவாக்கிக் கொள்/ இது உன்னை விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும்” என்றான்/

ப்ரோமேத்தேசியஸ் செய்த செயலை அறிந்த ஜீயஸ் மிகுந்த கோபம் கொண்டார். கடவுளர்களுக்கு மட்டுமே உரியதான நெருப்பைப் ப்ரோமேத்தேசியஸ் திருடி விட்டான். அது மட்டுமல்ல அதை மனிதனுக்குக் கொடுத்துவிட்டான். இதனால் மனிதன் கடவுளர்களை விட பலசாலியாகவும் திறமைசாலியாகவும் ஆகி விடுவான் அதனால் நான் ப்ரோமேத்தேசியஸுக்குத் தண்டனைக் கொடுத்தே ஆக வேண்டும்” என்று சீறினார்.

ஜீயஸின் வேலைக்காரர்களான வன்முறையும் பலமும் ப்ரோமேத்தேசியஸை பலவந்தமாகப் பிடித்து மலை உச்சியில் ஒரு பாறையில் சங்கிலியால் கட்டிப் போட்டனர். ஒரு வல்லூறு வந்து அவனுடைய ஈரலை தினம் தினம் தின்று சென்றது, ப்ரோமேத்தேசியசுக்கு தினம் ஒருகல்லீரல் முளைக்க தினம் அந்த வல்லூறு அவனைக் கொத்தி அவன் ஈரலைப் பிடிங்கிச் சென்றது. ப்ரோமேத்தேசியஸ் தினம் தினம் தன் உடலால் துன்பப் பட்டாலும் தன்னுடைய செயலை எண்ணி வருததப் படவில்லை. மனிதன் என்ற படைப்பை எண்ணி எண்ணி மகிழ்ந்தான்.

தொடரும்...

அத்தியாயம் 2 அத்தியாயம் 4

           


Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button