மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
அத்தியாயம் 1 - எஸ்.வி.என்
|
கதையைப் பற்றி இன்றைய கதை வருவது கிரேக்க இதிகாசங்களிலிருந்தும் புராணங்களிலிருந்தும் எடுக்கப்பட்டது. பழம் பெருமை வாய்ந்த இந்த புராணங்களை myth என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்த கதைகளை வெறும் கற்பனை சரக்கு என்று மட்டும் எடுத்துக் கொள்ளாதீர்கள். இயற்கையை அலசி ஆராய்ந்து அதில் நடக்கும் அதிசயங்களை மக்களுக்கு எளிய முறையில் விளக்குவது தான் இந்த புராணக்கதைகள். இவற்றில் பல உண்மைகள் ஒளிந்து இருக்கும். மனிதன் வாழ வேண்டிய வழி முறைகள் சொல்லப்பட்டிருக்கும். அது தான் இந்தப் புராணகதைகளின் சிறப்பு. கடவுள் மனித உருவில் வந்து மக்களுக்கு வழிகாட்டியாக இருந்தார் என்பது தான் இந்தப் புராணங்களின் சாரம் இந்தக் கதைகளைப் படிக்க படிக்க உலகம் முழுவதையும் கட்டிப் போகும் ஒரு மெல்லிய நூலை நாம் பார்க்க போகிறோம். சரி வாருங்கள் கதைக்குப் போவோம் அத்தீனாவின் பரிசு ரொம்ப ரொம்ப காலத்திற்கு முன் இந்த உலகம் மிகவும் இளமையாக இருந்த காலத்தில் மக்கள் சிறு சிறு கூட்டங்களாக அலைந்து கொண்டிருந்த காலத்தில் ஓலம்பஸ் மலை உச்சியில் வாழ்ந்து கொண்டிருந்த கடவுளர்களின் கடவுள் ஜுயஸ் பனி மூடிய மேகக் கூட்டங்கள் வழியாக தன்னுடைய குழந்தைகள் வாழ்வதற்கு சரியான இடத்தை பூமியில் தேடினார். அவ்ருக்கு மிகவும் பிடித்த இடங்களை மக்கள் வாழும் நகரமாக மாற்றினார் அப்படி மாற்றிய நகாரங்களுக்கு பெயர் இட வேண்டுமே? என்ன செய்வது தன்னை சுற்றி உள்ள மற்ற கடவுளர்களின் பெயரை வைத்தார்.அந்த அந்த நகரை அந்த கடவுளர்களின் பொறுப்பில் விட்டுவிடுவார் இதனால் ஒவ்வோரு முறையும் ஒரு இடத்திற்குப் பெயர் வைக்கும் போது இந்த கடவுளர்களுக்குள் போட்டி வரும். உங்கள் அக்கா தங்கையிடம் அப்பா வாங்கித் தரும் விளையாட்டு சாமானுக்காக சண்டை போடுவீர்களே அது போல இப்படித்தான் கடவுளர்களின் கடவுள் ஜூயஸ் பூமியில் ஒரு அழகான இடத்தைக் கண்டுபிடித்தார். அவருக்குத் தெரியும் இந்த இடத்தில் ஒரு நகரம் நிர்மாணிக்கப் பட்டால் அது இந்த பூமியிலேயே தலை சிறந்த மேன்மையான நகரமாக திகழும் என்று. புதிதாய் ஒரு நகரம் எழப் போகிறது என்று தெரிந்தவுடனேயே ஒலம்பஸ் மலையிலிருந்த மற்ற கடவுளர்கள் தங்களுக்குள் போட்டிப் போட ஆரம்பித்தனர். முக்கியமாக அறிவுற்கும் விவேகத்திற்கும் கடவுளான அத்தீனாவும் கடலுக்கும் நீர்நிலைகளுக்கும் கடவுளான போசிடன் என்பவருக்கும் கடுமையான போட்டி நிலவியது. இதில் அத்தீனா ஜீய்ஸ் கடவுளைன் மகள். போசிடனோ ஜூயஸின் தம்பி. ஜூயஸின் நிலமையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் போசிடன் ஜீயசைத் தேடி அவர் அரண்மனைக்குச் சென்றான் அண்ணா நீ நிர்மாணிக்கும் இந்த நகரம் அழகான கடற்கரையில் அமைந்து உள்ளது. அதனால் இது ஒரு நல்ல இயற்கைத் துரைமுகமாக வருங்காலத்தில் வளரும். வாணிபம் வளரும் அதனால் எதிர்காலத்தில் இந்த நகரம் சிறந்து விளங்கும் அதனால் கடல் கடவுளான நான் தான் இந்த நகரத்தின் தலைவனாக இருக்க வேண்டும் என்று சொன்னான். அத்தீனாவோ தன் தந்தையிடம் சென்று அப்பா ஒரு நகரம் சிறப்புற்று இருக்க வேண்டுமானால் அந்த நகர மக்கள் விவேகிகளாகவும் நகரை நிர்வகிக்கும் திறமைகள் இருப்பவர்களாகவும் இருக்க வேண்டும் அதனால் நானே இந்த புதிய நகரின் கடவுளாக இருக்க வேண்டும் என்று கேட்டாள் ஜூயஸுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை நீங்களே சொல்லுங்கள் ஒரு பக்கம் தம்பி இன்னோரு பக்கம் அருமை மகள் அவர் தான் என்ன செய்வார்? அதிகாரத்தில் இருக்கும் அனைவரும் செய்வதைத் தான் அவர் செய்தார். அத்தீனாவிற்கும் போசிடனுக்கும் இடையில் ஒரு போட்டி அறிவித்தார். தன் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு திரிசூலத்ஹ்டை ஏந்தி கர்ஜிக்கும் குரலில் சொன்னார் “ போசிடனே கேள் , அத்தீனாவே கேள்” இந்த நகரம் உங்கள் பெயரில் இருக்க வேண்டுமானால் நீங்கள் நான் வைக்கும் போட்டியில் வெல்ல வேண்டும்” யார் இந்தப் போட்டியில் வெல்லுகிறீர்களோ அவர்களின் பெயரில் இந்த நகரம் அழைக்கப் படும். அவர்களே இந்த நகரத்தின் கடவுளாகவும் இருக்கலாம் என்றார் அத்தீனாவும் போசிடனும் அதற்கு சம்மதித்தனர் நான் நிர்மாணிக்கும் இந்த நகரில் வாழ்ப்போகும் மக்களுக்கு ஏற்ற உன்னதமான பரிசைத் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்குத்தான் இந்த நகரம் என்றார் ஜூயஸ் போட்டியைக் கேட்ட போசிடன் உடனே வீரத்துடன் எழுந்தான். தன்னுடைய ஆயுதத்தால் பூமியில் அழுத்தமாகத் தட்டினான். பூமி ஆடியது. அதிர்ந்தது. சிறியதாய் பூமி பிளந்து அதிலிருந்து ஒரு அருமையான குதிரை வெளியே வந்தது. சர்வ அலங்காரங்களுடன் கவ்சங்களுடனும் ஆய்தங்களுடன் போர்க் கோலத்தில் நின்ற அந்தக் குதிரையை ஜூய்ஸிடம் காட்டிய போசிடன் நகரத்தை என் பெயரில் நிர்மாணியுங்கள். இந்த குதிரை என் நகர மக்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும். இதுவே நான் என் நகர மக்களுக்குக் கொடுக்கும் பரிசு என்றான். அத்தீனா மெல்ல எழுந்தாள். தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சபையோரையும் தந்தையையும் தீர்க்கமாகப் பார்த்தாள். பின் மெல்லக் குனிந்து தரையை மென்மையாகத் தொட்டாள். பின் அசையாமல் அந்த இடத்திலேயே நின்றாள். சபையினர் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அங்கே இரு சிறு செடி முளைத்து மெதுவாய் வளர்ந்து மிகப் பெரிய மரமாய் நிமிடங்களில் வளர்ந்து தளிர் இலைகள் தந்தது. மேலும் உயர உய்ர வளர்ந்த அந்த மரம் இனிய பழங்களையும் கொடுத்தது. அது ஒரு பெரிய ஓலிவ மரமாக ஓங்கி வளர்ந்து நின்றது அத்தீனா தன் தந்தையைப் பார்த்து தந்தையே என் பரிசே பெரிது. போசிடன் கொடுத்த பரிசு மக்களுக்கு போரையும் நிம்மதி இனமையையும் தரும்..என் பரிசான ஒலிவ மரமோ என் மக்களுக்கு அமைதியையும் வளமையையும் தரும்.அதனால் நகரத்தில் மக்கள் ஆரோக்கியமாகவும் சுத்ந்திரமாகவும் ஆனந்தமாக்வும் இருப்பார்கள் எனவே என் பெயரில் நகரம் நிர்மாணிக்கப்படுவது தான் சரி என்றாள். கூடி இருந்த சபையினர் ஒரே மனதாக “ஆம் ஒரு நகரம் போர் காலத்தை விட அமைதியான நேரத்தில் தான் வளம் பெரும். அந்த நக்ரம் சக்தி வாய்ந்ததாக இருப்பதை விட சுதந்திரமாக இருப்பது தான் அத்ற்கு மேன்மை தரும் என்று அத்தீனாவின் பரிசை ஏற்றுக் கொண்டனர். ஜீய்ஸும் மன்ம் உவந்து அத்தீனா போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவித்தார். அத்தீனாவின் பெயரில் நிர்மாணிக்கப்பட்ட அந்த நகரமே இன்றுவரை ஏதென்ஸ் என்று அழைக்கப் படுகிறது. என்ன குழ்ந்தைகளே சமாதானப் புறாவின் படங்களை பார்த்திருப்பீர்கள் தானே? அந்தப் புறா வாயில் ஒலிவ இலையைக் கவ்வி இருப்பதன காரணம் இப்போது புரிக்றதா? எனக்கு இந்த கதையைப் படிக்கும் போது முருகணுக்கும் பிள்ளையாருக்கும் மாம்பழத்திற்காக போட்ட சண்டையும் அதனால் உருவான பழனி மலையும் நினைவிற்கு வந்தது. உங்களைச் சுற்றிப் பாருங்கள் எத்தனை இடங்கள் மாபெரும் மனிதர்களின் பெயர்க்ளைத் தாங்கி இருக்கிறது? அதற்குக் காரணம் தெரியுமா? உங்களுக்கு.
|
YOUR FEEDBACK FOR THIS STORY
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |