Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all


உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்




Tamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

Easiest and Best

மழலைகள்






Bookmark this page
அடம் பிடிக்கும் விருந்தாளி
வினைதீர்த்தான்



வெகுநாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்த புதியவன்

நான் பிறந்த சில வருடங்களுக்குப் பின்பு எனது தந்தையார் அன்றையச் சிறிய நகரமான சிங்கப்பூருக்கு ஜப்பானில் இருந்து வந்த ஒரு புதியவரைச் சந்தித்தார். அவரால் கவரப்பட்ட தந்தையார் எங்கள் வீட்டில் அவரை வந்து தங்கும்படி கேட்டுக் கொண்டார். உடனே ஒத்துக் கொண்டாவர் அன்றிலிருந்து எங்கள் வீட்டில் தங்க ஆரம்பித்தார்.

நான் வளர்ந்தபோது அவரது இருப்பைப் பற்றிக் கேள்வி கேட்பதில் எனது இளம் மனதில் ஒரு இடத்தை அவர் பிடித்துக் கொண்டார். எனது தாய் நன்மையின் வெற்றியையும் தீமைகளின் தோல்வியையும் சொல்லிக் கொடுத்தார். தந்தையார் கீழ்ப்படிந்து நடப்பதைக் கற்றுக் கொடுத்தார். ஆனால் புதியவரோ எனக்குக் கதைகள் சொன்னார். வீரச் செயல்கள் பற்றியும், புதிகளையும், விடுகதைகளையும் வேடிக்கை நிகழ்ச்சிகளையும் சொல்லி எனனைக் கட்டிப் போட்டார்.

அரசியலைப் பற்றியோ வரலாறு அல்லது விஞ்ஞானத்தைப் பற்றியோ எல்லாவற்றுக்கும் விடைகள் வைத்திருந்தார். நடந்தது, நிகழ்நதது ஏன் எதிர்காலம் பற்றியும் நிறையச் சொல்லுவார். என்னைச் சிரிக்கவும் சில சமயங்களில் அழவும் செய்வார். ஆனால் என் தந்தையார் கண்டு கொள்வதில்லை.

சில சமயங்களில் நாங்கள் அவாரைச், சரணடைய முந்திக் கொள்ளும் பொழுதுகளில் எனது தாயார் அமைதியையும் தணிமையையும் வேண்டி அடுக்களையில் புகுந்து கொள்வதுண்டு. அவரை வெளியேற்றக் கடவுளை வேண்டிக்கொள்வாரோ என்று நான் எண்ணியது உண்டு.

தந்தையார் வீட்டை அற மதிப்பீடுகள் சார்ந்து நிவிகிக்க முயன்றதுண்டு அனல் வீட்டுக்கு வந்தால் அவற்றைச் சட்டை செய்வதில்லை. நாங்கள் யாரும் மரியாதைக் குவைவான சொற்கள் உச்சரித்ததேயில்லை. அனல் எங்கள் நீண்டநாள் விருந்தாளி எனது தாயையும், தந்தையையும் எங்களயும் களங்கப்படுத்திய வார்த்தைகளைத் தாராளமாக உபயோகித்தார். எங்கள் தந்தை விரும்பாத குடியை எங்களுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். புகைப்பிடிப்பதை ஒரு நாகரிமாக மதிக்கத்தக்கதாக நினைக்க வைத்தார்.

எனது ஆரம்பகால எண்ணங்கள், உறவுகள் அவராலேயே வெகுவாகப் பாதிக்கப்பட்டிடுக்கின்றன. நாளாக நாளாக எனது பெற்றோரின் தார்மிகக் க்ருத்துக்கள் அவராலே எதிர்க்கப்பட்டன. ஆயின் அவர் மட்டும் வெளியேற்றப் படவே இல்லை.

எங்கள் நீண்டநாள் விருந்தாளி எங்களோடு தங்க ஆரம்பித்தது. 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் எங்கள் பெற்றோரின் வீட்டிற்கு நீங்கள் செல்ல நேர்ந்தால் அவர் தன்னுடைய இடத்தில் அமர்ந்து கொண்டு தன்னை யார் கேட்க வருவார்கள் என்று காத்திருப்பதைக் கானலாம்.

அவர் யார்?

நாங்கள் அவரை தொலைக்காட்சி பெட்டி என்போம்.

தற்போது அவருக்கு ஒரு துனைவியாகும் வந்துவட்டால் அவரை நாங்கள் கணிணி என்கிறோம்.

மழலைகள் ஆசிரியர் குழு



             




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants