-
முனிவர் கோபம்
- வைரா
பரீட்சித்து மன்னன் ஒரு நாள் வேட்டைக்குச் சென்றான். ஒரு புலியைத் துரத்திக்கொண்டு சென்றான். நீண்ட தூரம் ஓடிய புலி இவன் கண்ணிலிருந்து மறைந்துவிட்டது. புலியைத் தேடிய மன்னன் அங்கே தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரைப் பார்த்து இந்த வழியாகப் புலி ஒன்று வந்ததா? பார்த்தீர்களா? என்று கேட்டான். அந்த முனிவரோ தவத்தில் இருந்ததால் இந்த மன்னன் கேட்பது முனிவர் காதில் விழிவில்லை.
பலமுறை கேட்டான்; அவர் கண் விழிக்கவில்லை; பதிலும் சொல்லவில்லை.
மன்னன் பொறுமை இழந்தான்; கோபமுற்றான். அருகில் இறந்து கிடந்த ஒரு பாமபை எடுத்து, முனிவர் கழுத்தில் மாலையாகப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.
மன்னன் செய்த இந்தப் பாதகமான செயலை எதிரில் தவம் செய்துகொண்டிருந்த இன்னொரு முனிவர் பார்த்துவிட்டார். அவர் கடும் கோபம் கொண்டார்.
பாம்பும் மாலையாகப் போடப்பட்ட இந்த முனிவரின் மகன் சதசிருங்கர், அடுத்த காட்டில் தவம் செய்து கொண்டிருந்தா. அவரிடத்தில் சென்று மன்னன் செய்த அந்தச் செயலை எதிரில் பார்த்துக் கொண்டிருந்த அந்த முனிவர் சொன்னார்.
வெகுண்டெழுந்த சதசிருங்கர் வேகமாக ஒடிவந்து பார்த்தார். தந்தையின் கழுத்தில் இறந்துபோன பாம்பு மாலையாகக் கிடந்ததைப் பார்த்து மிகவும் கோபம் அடைந்து உடனே சாபம் கொடுத்தார்.
"இந்த செயலைச் செய்தவர் யாராக இருந்தாலும் அவர் இன்னும்7 நாட்களில் தட்சகன் என்ற பாம்பு கடித்து இறந்து போகட்டும்" என்று.
தவத்திலிருந்த தந்தை காதில் இச்சொற்கள் விழுந்தன. அவர் கண் விழித்தார், மகன் மூலம் நடந்தவற்றைத் தெரிந்துகொண்டார்.
மகனைக் கடிந்து கொண்டார். "இவ்வாறு சபித்துவிட்டாயே, மன்னன் இறந்துவிடுவானே. மன்னன் இல்லாமல் நாட்டு மக்கள் துன்பம் அடைவார்களே, அவன் மிகவும் நல்லவன் ஆயிற்றே, இப்படிச் செய்துவிட்டாயே மகனே" என்று தன் மகனிடம் கூறி வருத்தப்பட்டார். எப்படியாவது மன்னனை சாவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
சீடர்கள் மூலம் மன்னனுக்குச் செய்தி அனுப்பினார். தன் மகன் கொடுத்த சாபத்தைப் பற்றி மன்னனுக்கு விவரமாக எடுத்துக்கூறி சாவிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளச் சொல்லுங்கள் என்று.
செய்தியறிந்த மன்னனுக்கு மரண பயம் ஏற்பட்டுவிட்டது. மந்திரி முதலானவர்களை எல்லாம் அழைத்து, "இன்னும் 7 நாட்களுக்குள் நான் பாம்பு கடித்து இறந்துவிடுவேன் என்று சாபம் கொடுத்திருக்கிறார் சதசிருங்கர் முனிவர். எனவே 7 நாட்கள் வரை பாம்பு கடிக்காமல் பார்த்துக்கொண்டால் பிறகு மரணம் இல்லை. என்னை 7 நாட்கள் வரை பாம்பு கடிக்காமல் காப்பாற்றிக் கொள்வதற்கு என்ன வழி இருக்கிறது, ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்டான்.
மந்திரி நன்றாக சிந்தித்து ஒரு வழி சொன்னார். மந்திரி சொன்ன வழி சிறந்ததாகப் பட்டது. மற்றவர்கள் அனைவரும் மந்திரி சொன்ன வழியை செயல்படுத்தினார்கள்.
அதன்படி ஆழமான ஒரு நீர்நிலைக்கு நடுவே உயரமான ஒரு கமபத்தை நட்டு, அதன் உச்சியில் பரண் அமைத்து, தனக்கு மிகவும் நம்பிக்கையான சான்றோர்கள் சுற்றிலும் இருக்க, நடுவில் மன்னன் அமர்ந்திருந்தான்.
இருந்தாலும் மரண பயத்தில் மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான்.
அந்த வழியாக வந்த சுகமுனிவருக்கு விஷயம் தெரிந்து மரண பயத்தில் மன்னன் இருந்ததால் அவனை தெளிவிப்பதற்காக அம்மன்னனுக்கு பாகவதம் உபதேசிக்கலானார்.
(இந்த சுகமுனிவர் ஒரு நாள் ஆற்றங்கரை ஊரமாக நடந்து சென்றுகொண்டிருந்ததைக் கண்ட பெண்கள் நாணப்பட்டனர். ஆனாள் சுகர் நாணப்படவில்லை.)
இதை கண்ட பெண்கள் சுகமுனிவரின் தந்தை வியாசரிடம் கூறினார்கள், "தாங்கள் வேண்டுமானால் கூட சில நேரங்களில் மயக்கம், நாணம் அடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் உங்கள் மகன் முற்றும் துறந்த பூரண ஞானி" என்று சொன்னார்கள்)
அதனால் தான் வியாசர் பாகவதத்தைத் தன் மகனுக்கு உபதேசித்தார். அவர் இப்போது அந்த மன்னனுக்கு உபதேசித்தார். 7 நாட்கள் பாகவத்தை அம்மன்னனுக்கு உபதேசித்தார். உபதேசத்தை கேட்டுக்கொண்டிருந்த மன்னன் மனதில் நினைத்தான், "என்னைதான் பாதுகாப்பாக இருந்தாலும், நிச்சயமாகப் பாம்பு கடித்துவிடும். முனிவரின் சாபத்துக்கு வலிமை உண்டு" என்று. இதை மற்றவர்களிடம் கூறிக் கொண்டிருந்தான் மன்னன். அப்பாம்பு கடித்து இறந்துவிட்டால் உயிர்ப்பிக்க யாராவது இருந்தால் பிழைத்துக் கொள்ளலாமே, எனவே அப்படி யாராவது இருந்தால் உடனடியாக வரச் சொல்லுங்கள். தக்க சன்மானம் வழங்கிவிடலாம் என்று மந்திரியிடம் சொல்லிப் பறையறிவிப்பு செய்யச் சொன்னான். அரண்மனைக் காவலர்களும் மந்திரியின் அறிவிப்புப்படி உடனடியாக அறிவிப்புச் செய்தார்கள்.
ஒரு ஏழை பிராமணன் இந்தச் செய்தியைக் கேட்டான். மன்னன் கொடுக்கப்போகும் பொருளுக்கு ஆசைப்பட்டான். இறந்தவர்களை எழுப்புகின்ற மந்திரம் அவனுக்குத் தெரியும். எனவே மந்திரத்தைப் பயன்படுத்தி, மன்னன் இறந்துவிட்டால் உடனே எழுப்புவதற்காக நீர் நிலையின் கரையில் வந்து நின்றான்.
மன்னனோ உயரத்தில் இருக்கிறான். மேலே நாம் எப்படிச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான் அந்த ஏழை பிராமணன்.
அப்போது முனிவருடைய சாபத்திற்கு ஏற்ப அந்த மன்னனைக் கடிக்க வேண்டிய கடமை உடைய அந்தப் பாம்பும் அந்த இடத்தில் வந்து சேர்ந்தது. மேலே செல்வதற்காக மனித உருவில் நின்றது. பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பிராமணனைப் பார்த்து சந்தேகம் கொண்டது. சந்தேகத்தைப் போக்கிக் கொள்வதற்காக அவனிடம் பேச்சு கொடுத்தது.
"நீ யார்? ஏன் இங்கே நிற்கிறாய்?"
"நான் ஒரு ஏழை பிரமணன். பாம்பு கடித்து யாராவது இறந்துவிட்டால் அவர்களை நான் உடனே உயிர்பெற்று எழச்செய்வேன். பிறகு அவர்க்ள் கொடுக்கும் வெகுமதியைப் பெற்றுக்கொள்வேன்.
இப்போது இந்த நாட்டு மன்னன் இன்று மாலைக்குள் பாம்பு கடித்து இறந்துவிடப் போகிறானாம். இவ்வாறு இறந்துவிட்டால் உடனே அவனை எழுப்பித் தருவோருக்கு வெகுமதிகள் கொடுக்கப்படும் என்று பறை அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.
எனவே அந்த மன்னன் இறந்துவிட்ட உடனே எழுப்புவதற்காக நான் இங்கே வந்திருகிறேன். மேலே செல்வதற்கு வழி தெரியவில்லை. மேலே செல்வதற்கு உனக்கு வழி தெரிந்தால் சொல்" என்றான் அந்த பிராமணன்.
இதைக் கேட்ட மனித வடியில் இருந்த தட்சகன் எந்த அந்தப் பாம்பு பிராமணனைப் பார்த்துக் கேட்டது.
"பாம்பு கடித்து இறந்துவிட்டால் உன்னால் எழுப்ப முடியுமா?"
"ஆம், முடியும்"
"அப்படியானால் இதோ இந்த ஆலமரத்தை நான் கடித்துப் பட்டுப்போகச் செய்கிறேன். இதை நீ மீண்டும் தழைக்கச் செய் பார்க்கலாம்" என்று கூறிவிட்டு தட்சகன் ஆலமரத்தின் வேரைக் கடித்துவிட்டது. சிறிது நேரத்தில் ஆலமரம் பட்டுப்போய் விட்டது.
இதைக் கண்ட பிராமணன் "இந்த மரத்தை உடனடியாகத் துளிர்க்கச் செய்கிறேன் பார்" என்று கூறிக்கொண்டு தளிர்க்கச் செய்யும் மந்திரத்தை வாயால் முணுமுணுத்தான்.
சிறிது நேரத்திலேயே அந்த மரம் துளிர்ந்துப் பழைய படியே ஆகிவிட்டது. இதைக் கண்ட தட்சகன் என்ற அம்மனித வடிவப் பாம்பு மிகவும் அதிர்ச்சியடைந்தது. அது அந்த பிரமணனிடத்தில் பேசியது.
"மன்னனைக் கடிக்கப் போகிற தட்சகன் என்ற பாம்பு கொடிய விஷம் உள்ளது. மேலும் சாபத்தின் காரணமாகக் கடிக்கப்போகிறது. உடனே நீ உன் மந்திர சக்தியால் அவ்னை எழுப்பிவிட்டால் சாபத்திற்கும் மரியாதை யில்லாமல் போகும். கொடிய விஷம் உள்ள பாம்பு என்ற பெயருக்கும் மரியாதை யில்லாமல் போகும். மேலும் மன்னன் இறப்பது தலைவிதி, எனவே நீ சென்று அவனை எழுப்பக் கூடாது"
"இல்லை, இல்லை நான் எழுப்புவேன் எனக்குத் தேவை பணம். பணத்திற்காகத்தான் நான் மன்னனை எழுப்பப் போகிறேன்" என்றான் அந்தணன்.
"அப்படியா, பணத்திற்காகத் தானே எழுப்பப் போகிறாய், உனக்கு வேண்டிய பணத்தை நான் கொடுக்கிறேன்" என்று கூறக்கோண்டே மிகவும் உயர்ந்த தன் மாணிக்க மணியை அவனிடம் கொடுத்துவிட்டு அந்த் மனித வடிவப் பாம்பு "நீ இப்படியே திரும்பிப் போ. மன்னனை எழுப்பும் சக்தி என்னிடம் உள்ளது என்று நீ யாரிடமும் சொல்லிவிடாதே. நீ வழக்கம்போல் ஒரு சாதாரண மனிதனாகவே செல்" என்று கூறி அவனைப் பக்குவமாக அனுப்பிவிட்ட்டான் இந்தப் பாம்பு வடிவ மனிதன்.
இப்போது பாம்பு, மனித உருவோடு படிகள் வழியாக மேலே சென்று மன்னன் இருக்கும் இடத்தை அடைந்தது.
மன்னனைச் சூழ்ந்து கொண்டிருந்த சான்றோர்கள் எல்லாம் யாரோ ஒரு முனிவர் வருகிறார் மன்னனுக்கு நன்மை செய்யத்தான் வந்திருப்பார் என்று சொல்லிக் கொண்டே வழிவிட்டு மன்னனிடம் செல்லுமாறு செய்தார்கள்.
மன்னனிடம் சென்ற இந்த பாம்பு மனிதன் மன்னனுக்கு ஆசி கூறிவிட்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழக என்று சொல்லிவிட்டு ஒரு எலுமிச்சம் பழ்த்தைக் கையில் கொடுத்தது. மன்னன் தன் கைகளில் அந்தப் பழத்தை வாங்கினான். மூக்கில் வைத்து முகிர்ந்து பார்த்தான்.
அப்போது அந்தப் பழத்தின் வழியாக இந்த முனிவன் பாம்பாக மாறி மன்னனின் முகத்தில் எல்லாம் கடித்து முனுவரின் சாபத்தை நிறைவேற்றினான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் செயலைக் கண்டு அருகில் இருந்த சான்றோர்கள் எல்லாம் அதிர்ச்சி அடைந்தார்கள்.
என்னே விதியின் வலிமை என்று ஒவ்வொருவரும் தங்கள் ஆற்றாமையைப் பகிர்ந்து கொண்டனர்.
பாம்பும் மறைந்து போயிற்று. மன்னனும் இறந்து போய்விட்டான். இந்தச் செயலானது விதிப்படி நடந்தேறியது.
மன்னன் இறக்க வேண்டும், அதுவும் பாம்பு கடித்து இறக்கவேண்டும் என்பது விதி அந்த செயலை நிறைவேற்றப் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்பாகவே நடந்துகொண்டு வருகின்றன. எனவே விதியை யாராலும் வெல்ல முடியாது.
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||















