அக்னி! நீயா?
கவிஞர் வைரா
தவம் செய்வதற்கு ஏற்ற இடம் காடு. இயற்கைச் சூழ்நிலைகள் நிறைந்த காட்டில் தவம் செய்யும் முனிவர்கள் நாள் கணக்கில், வாரக் கணக்கில், வருடக் கணக்கில் தங்கள் நோக்கம் நிறைவேறும் வரையில் தவம் செய்வார்கள்.
வருடமோ, மாதமோ, வாரமோ, நாட்களோ, கணக்கில் வராது. நோக்கம் நிறைவேறுதல் மட்டும்தான் நோக்கமாக இருக்கும்.
மழைக்காலம், வெயில்காலம், பனிகாலம், குளிர்காலம், வசந்தகாலம் இதெல்லாம் தெரியாது. ஏன்? இரவும் பகலும் கூடத் தெரியாது மலைபோல அசையாமல் இருப்பார்கள்.
மனிவர்கள் உடல், விலங்குகளுக்குத் தினவு எடுக்கும்போது சொரிந்து கொள்ளும் இடமாகவும் பயன்படும். விலங்குகளும் உராய்ந்து கொள்ளாமல் இருந்தால் முனிவரின் உடலைச் சுற்றிக் கரையான்கள் புற்றுக் கட்டிவிடுவதும் உண்டு.
புற்றுக் கட்டும் அளவுக்குத் தவம் செய்பவர். மாமுனிகளாகப் போற்றி வண்ங்கத் தக்கவர்கள்.
பிருகு முனிவரின் மனைவி நிறைமாத கர்ப்பினி, இன்றைக்கோ நாளைக்கோ பிள்ளைப் பேறு என்று இருக்கும் நேரம். முனிவருக்கு அடுத்த காட்டிற்கும் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மனிவியிடம் சொன்னார், "நான் பக்கத்தில் உள்ள காட்டிற்குச் சொன்று வருகிறார். இன்று மாலையே திரும்பி வந்து விடுவேன். நான் திரும்பி வரும் வரை மிகவும் ஜாக்கிரதையாக இரு. நான் வளர்த்துக் கொண்டிருக்கிற இந்தத் தீயையும் அணையாமல் பார்த்துக் கொள். தீ அணையாமல் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். மிகவும் கவனமாக இரு" என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.
முனி பத்தினியும் யாகத் தீயை அணையாமல் வளர்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக ஒரு அரக்கன் வந்தான். இந்தப் பெண்ணின் அழகில் மயங்கினான். உயரமாக வளர்ந்து கொண்டிருக்கும் அக்னியைப் பார்த்துக் கேட்டான்.
அக்னி யோசித்தான். சொல்வதா வேண்டாமா என்று. இந்த அரக்கனை அழிப்பதற்கு இதுவே தக்க தருணம் என்று எண்ணியவனாய்ப் பதில் சொன்னான்.
"இவர் தான் பிருகு முனிவரின் மனைவி".
அரக்கன் சொன்னான், "இவள் என் மனைவி உலோமா. எனக்குத் தெரியாமல் பிருகு முனிவர் இவளைக் கவர்ந்து சொல்லப் போகிறேன்". என்று கர்ஜித்துக் கொண்டு அவளைத் துக்கிக் கொண்டு பறந்தான்.
அந்தப் பெண் அலறினான்.
இதனால் ஏற்ப்பட்ட அதிர்ச்சியால் பிரவசம் ஆகிவிட்டது. அழகான் ஆண் குழந்தை பிறந்துவிட்டது. அந்த அரக்கன் இந்தக் குழந்தையை கொன்று விடுவானோ என்று பயந்தாள் அந்த முனிபத்தினி.
இதற்கு மாறாக அந்தக் குழந்தை அந்த அரக்கனைக் கடும் கோபம் கொண்டு பார்த்தது, அவ்வளவுதான். அந்த அரக்கன் எரிந்து சாம்பலானான்.
அந்த அம்மையார் குழந்தையை எடுத்துகொண்டு ஆகிரமம் அடைந்தார்.
பிருகு முனிவர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஒரு வித்தியாசமான சூழ்நிலையைக் கண்டு மனைவியிடம் விசாரிக்க, அவளும் நடந்ததைச் சொன்னாள்.
"அக்னிதான் காட்டிக் கொடுத்தான். அக்னி அரக்கனுக்கு பதில் சொல்லாமல் இருந்திருந்தால் இது போல் நட்ந்திருக்காது. அக்னி தான் இந்த நிகழ்ச்சிக்குக் காரணம் என்றாள். முனிபத்தினி. இதைக் கேட்டதும் வெகுண்டெமுந்த முனிவர், "அக்னி! நீயா காட்டிக் கொடுத்தாய்? அப்படிச் செய்யலாமா? என்றார்.
கொபத்தின் உச்சத்தில் நின்ற அவர் அக்னிக்கு ஒரு சாபம் கொடுத்தார்.
"நீ நீசனாகப் போ" என்று மிகவும் கோபமாக கூறிவிட்டு மேலும் விளக்கமாகச் சொன்னார், "இது வரை நீ உயர்ந்த பொருள்களாகிய நெய், யாக ஷமித்துக்குள் முதலியவற்றையே உணவாக உண்டு கொண்டு வந்தாய். இனிமேல் அப்படி இல்லை. தாழ்ந்த பொருள்களாகிய குப்பை கூளங்களையும் நீ உணவாகக் கொள்வாய். உனக்கு என்றிருந்த உயர்ந்த புனிதத் தன்மை குறையட்டும்" என்றார்.
சாபத்தைப் பெற்ற அக்னியால் முனிவரை எதிர்த்துப் பேச முடியவில்லை. அவன் கலைகளையெல்லாம் சுருட்டிக்கொண்டு இமய மலையில் ஒரு குகையில் சென்று ஒளிந்து கொண்டான்.
அடுத்த நிமிடத்தில் இருந்து உலகத்தில் அக்னியில்லாமல் போய்விட்டது.
உண்வு சமைக்க அடுப்பில் நெருப்பு எரியவில்லை. முனிவர்களின் யாக குண்டங்களில் எரிந்துகொண்டிருந்த தீ அணைத்துவிட்டது.
நெருப்பு இல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்களும் முனிவர்களும் துன்புற்றார்கள். நேராக அக்னியிடம் சென்று முறையிட்டார்கள்.
தங்களின் துன்பத்தைப் போக்கும்படி வேண்டினார்கள்.
"எனக்குக் கொடுக்கப்பட்ட சாபத்தை நீக்கினால் தான் நான் வெளியில் வருவேன். இல்லையேன்றால் நான் வெளியே வர மாட்டேன்" என்று கூறி முனிவர் சாபம் கொடுத்ததை விளக்கமாகச் சொல்லி வருந்தினான்.
இதை கேட்ட மக்களும், முனிவர்களும் பிருகு முனிவரிடம் வந்து தங்கள் துயரத்தை எடுத்துக் கூறி முறையிட்டார்கள்.
முனிவரே சாபத்தை நீக்க முடியாது என்றும் சாபத்தின் தன்மையை வேண்டுமானால் மாற்றுகிறேன் என்றும் கூறி சாபத்தின் தன்மையை மாற்றிக் கூறினார்.
"அக்னி இன்றிலிருந்து என் சாபப்படி தாழ்ந்த பொருட்களை உண்டாலும் உன் உயர்ந்த தன்மைக்குக் குறைவு வறாது. உன்னை அனைவரும் உயர்ந்தவனாகவே மதிப்பார்கள்".
அக்னி இதைக்கேட்டு மகிழ்ந்தான். குகையை விட்டு வேளியில் வந்தான். தன் கலைகளை வெளிப்படுத்தினான். மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள்.
ருணமென்னும் குள்றேறி நின்றார்.
வெகுளி கணமேயும் காத்தல் அரிதன்றோ?.







Your Feedback









