குரு தட்சிணை
கவிஞர் வைரா
குரு தட்சணை
குருகுலக் கல்வி முறையில் கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. சீடர்கள் குருவுக்குப் பணிவிடை செய்து கல்வி கற்றார்கள்.சீடர்கள் படித்துகொண்டே இருப்பார்கள். குரு ஒரு நாளில் படிப்பு முடிந்துவிட்டது என்று செல்வார். அன்று சீடர்கள், குருவிற்கு தட்சணை வழங்கிவிட்டு குருவின் ஆசி பெற்றுக்கொண்டு செல்வார்கள்.
சில நேரங்களில் குருவாக இருப்பவ்ர்கள் இந்த தட்சணை வேண்டாம் என்றும் சொல்வதும் உண்டு. சீடர்களும் வற்புறுத்தி அவர்களுக்குப் பிடித்தமான ஒரு பொருளைக் கொடுத்துவிட்டுச் செல்வதும் உண்டு.
உதங்கர் என்ற முனிவர் பதங்களை அனைய ஞானபயிலவ மகரிஷி என்ற முனிவரிடம் சென்று கல்வி பயின்று வந்தார். குருவின் இல்லத்திலேயே தங்கி, குருப்த்தினி கொடுக்கும் உணவை உண்டு, குரு பத்தினிக்கும் குருநாதருக்கும் தேவையான் பணிவிடைகளைச் செய்து, கல்வி பயின்று வந்தார்.
ஒரு நாள் குரு சொன்னார்.
குரு: உமக்கு படிப்பு முடித்துவிட்டது, நீ வீட்டிற்க்குச் செல். திருமணம் செயது கொண்டு இன்பமாக வாழ்.
உதங்கர்: சுவாமி தங்களுக்குத் தேவையான ஏதாவது பொருளைச் சொன்னால் நான் குரு தட்சணையாக அதைக் கொடுத்துவிட்டுச் செல்வேன்.
குரு: நான் பிரதிபலன் பார்க்காமல் சொல்லிக் கொடுத்துள்ளேன். எனக்கு எந்தப் பெருளும் தேவையில்லை.
உதங்கர்: குரு தட்சணை என்று ஏதாவது கொடுத்து விட்டுத்தான் செல்வேன். தாங்கள் தயவு செயது அதற்கு அனுமதிக்க வேண்டும்.
குரு: இல்லை இல்லை, எனக்கு எதவும் வேண்டாம். நீ சென்று வா. நீ திருமணம் செய்துகொண்டு சுகமாக வாழ்வாயாக.
உதங்கர்: தயவு செயது என் வேண்டுகோளை ஏற்றுகொள்ள வேண்டும். ஏதாவது ஒரு பொருளை என் அன்புக் காணிக்கையாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
குரு: சரி மேலும் மேலும் வறுபுறுத்துகிறாய். நீ சென்று என் பத்தினியாக இருக்கினற உன் தாயிடம் கேள். அவள் எது கேட்டாலும் அதை குரு தட்சணையாகக் கொடு.
உதங்கர்: மிக்க மகிழ்ச்சி சுவாமி. நான் இப்போதே சென்று என் தாயிடம் கேட்டுக்கொள்கிறேன். (என்று மிகவும் பணிவோடு கூறிவிட்டு, தாயைச் சந்தித்து, காலில் விழுந்து வணங்கினார் உதங்கர்.)
"தாயே! என் படிப்பு இன்றுடன் முடிந்துவிட்டதாக குருநாதர் தெரிவித்தார். நான் ஏதாவது குரு தட்சணை கொடுத்துவிட்டுத்தான் செல்ல வேண்டுமென்று விரும்புகிறேன். குருநாதரோ வேண்டாம் என்று சொல்கிறார். நான் மிகவும் வற்புறுத்திக் கெட்டுக் கொண்டேன். அதற்கு அவர் தங்களைக் கேட்கச் சொன்னார். தயவு செயது தாங்கள் ஏதாவது ஒரு பொருளை குரு தட்சணையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். தங்களுக்குப் பிடித்தமான ஒரு பொருளைச் சொல்லுங்கள் தாயே" என்று குருபத்தினியின் பாதம் பணிந்து கேட்டார்.
குருபத்தினி: நீ மிகவும் வற்புற்த்திக் கேட்பதால் சொல்கிறேன். பெளஷியந்த மகாராஜாவை உனக்குத் தெரியுமா? அவன் மனைவியின் காதுகளில் அணிந்து கொண்டு இருக்கும் கம்மல்கள் கிடைக்குமா? கிடைத்தால் கொண்டு வா. அதிகம் சிரமப்படாதே.
உதங்கர்: தாயே எனக்கு இப்போது தான் மிகவும் மகழ்ச்சியாக் இருக்கிறது. இதோ உடனே புறப்படுகிறேன். எட்டு நாட்களுக்குள் அவற்றைக் கொண்டுவந்து கொடுத்து விடுகிறேன். விடை கொடுங்கள் தாயே!
என்று கூறி புறப்பட்டார் உதங்கர்.
குருபத்தினி: சென்று வா வெற்றியுடன்.
(உதங்க முனிவர் பெலஷியந்த மகாராஜாவின் அரண்மனைக்குப் புறப்பட்டார். வழியில் மிகப்பெரிய காடு, அதைக் கடந்துதான் செல்ல வேண்டும். எனவே காட்டுக்குள் சென்றார். கொஞ்ச தூரம் சென்றதும் அந்தணன் ஒருவன் தடுத்தான். இது என்னுடைய காடு என்றான்.)
உதாங்கர்: சரி அதற்கென்ன இப்பொது? நான் என்னுடய காடு என்று சொல்லவில்லையே.
அந்தணன்: என் காட்டு வழியாகச் செல்ல உன்னை அனுமதிக்க மாட்டேன். வந்த வழியே திரும்பிப் போ.
உதங்கர்: நான் குருவின் வேலையாகப் போகிறேன் என்னைத் தடுக்காதே.
அந்தணன்: நீ போய்த்தான் ஆக வேண்டுமா?
உதங்கர்: ஆம், குருவின் காரியம், ஆகையால் போய்த்தான் ஆக வேண்டும்.
அந்தணன்: அப்படியானால் நான் சொல்லும் ஒரு செயலைச் செய்ய வேண்டும்.
உதங்கர்: என்ன செய்ய வேண்டும்? சீக்கிரம் சொல். உடனே செய்து விடுகிறேன்.
அந்தணன்: இதோ தெரிகிறதே இது என்ன?
உதங்கர்: சாணம்.
அந்தணன்: சாணம் என்று சொல்லாதே, பசுவின் சாணம் எனச் சொல். இப்போது நான் இந்தப் பசு இந்தச் சாணத்தை போட்டுவிட்டுச் செல்கிறது.
உதங்கர். இதை எடுத்து அப்பல் போட வேண்டுமா? போட்டுவிடுகிறேன்.
அந்தணன்: ஹ்..ஹ்...ஹ்... நீ விரும்பியதைச் செய்யாதே. நான் சொல்வதைச் செய். இந்தச் சாணம் முழுவதையும் உண்டுவிட வேண்டும்.
உதங்கர்: என்ன? சாணத்தைப் போய்...
அந்தணன்: குருதட்சணைக் காரியமாகச் செல்கிறாய், உனக்கு வெற்றி கிடைக்குமானால் இதை உண்டபின் தான் செல்ல வேண்டும்.
உதங்கர்; உண்டுவிட்டால் இந்தக் காட்டு வழியே போகலாமா?
அந்தணன்: தடை ஏதுமில்லை.
உதங்கர்: அப்படியானால் இதோ உடனே உண்டு விடுகிறேன்.
அந்தணன்: அது என்ன கொஞ்சம் மீதியாக வைத்துவிட்டாயே. கொஞ்சம் கூட மீதி வைக்கக் கூடாது. எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட வேண்டும்.
உதங்கர்: மொத்தத்தையும் சாப்பிட்டுவிட்டேன். இப்போது போகலாம் அல்லவா?
அந்தணன்: முழுவதையும் சாப்பிட்டு விட்டயா? அப்படியானால் போகலாம்.
(போக அனுமதி கிடைத்த உடனே மிக்க மகிழ்ச்சி அடைந்தார் உதங்கர்)
மனதுக்குள் நினைத்தார்:
(அப்பாடா, இவனால் கொஞ்ச நேரம் வீணாகி விட்டதே. சரி, இன்னும் கொஞ்சம் வேகமாகச் செல்ல வேண்டும்.)
என்று எண்ணிக்கொண்டே வேகமாக சென்றார்.
எட்டு நாட்கள் இடைவிடாமல் பயணம் செயது, எட்டம் நாள் காலை பௌஷியந்தனின் அரண்மனையை அடைந்தார்
முணிவரைக் கண்டதும் குருதட்சணை கொடுக்க நம்மிடம் உள்ள ஏதோ பொருளைக் கேட்டுப் பெற்றுக்கொண்டு செல்லத்தான் இந்த முனிவர் நம்மிடம் வருகிறார் என்பதை ஒருவாறு ஊகித்து அறிந்து கொண்டார். பௌஷியந்த மகாராஜா எந்தப் பொருளைக் கேட்டாலும் உடனே கொடுத்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். முனிவர் அருகில் வந்ததும் இரு கரம் கூப் வரவேற்றார் அந்த அரசர்.
மன்னன்: (உள்ளே அழைத்துச் சென்று, அமர ஆசனம் தந்து விசாரித்தாடு, குரு தட்சணை கொடுக்கப் பொருள் பெற்றுச் செல்ல வந்தீருக்கிறீர்களா? நான் என்ன செய்ய வேண்டும். ஆணையிடுங்கள், செயது முடிக்கிறேன் என்று அரசர் மிகவும் பணிவோடு கேட்டார்.
கம்மல்கள் வேண்டும்
உதங்கர்: நான் குருகுல வாசம் முடிந்து நேராக இங்கேதான் வருகிறேன். குருதட்சணை கொடுக்க வேண்டும். குருதட்சணைக்கு உகந்த அந்தப் பொருள் இங்கேதான் இருக்கிறது. அதைத் தங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு செல்லத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன்.அரசன்: அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்னிடம் எதை எதிர்பார்த்து வந்திருக்கிறீர்கள்? (என்று மிகவும் பணிவோடு கேட்டர் மன்னன்.)
உதங்கர்: உன்னிடம் உள்ள ஒரு பொருள் எனக்கு வேண்டும்,
அரசன்: என்ன பொருள்?
உதங்கர்: கண்டிப்பாகத் தருகிறேன் என்று சொன்னால், என்ன பொருள் தேவை என்பதைக் கூருகிறேன்.
அரசன்: கண்டிப்பாக்த் தருகிறேன். எதைக் கேட்டாலும் தருகிறேன். இல்லை என்று சொல்லவே மாட்டேன். தங்களுக்குப் பொருள் கொடுப்பதை நான் மிகவும் பெருமையாகவும் பாக்கியமாகவும் கருதிகிறேன். தயங்காமல் கேலுங்கள்.
உதங்கர்: உன் மனைவியின் காதுகளில் இருக்கின்ற கம்மல்கள் வேண்டும். இதைத் தான் நான் குருதட்சணையாகக் கொடுக்கவேண்டும். அதற்காக நீங்கள் இதை எனக்குக் கொடுக்க வேண்டும்.
அரசன்: அப்படியா, மிக்க மகிழ்ச்சி. முனிவர் பேருமானே, இருக்கின்ற பொருளைப் பார்த்துக் கேட்டீர்கள். என் மனைவி அந்தப்புரத்தில் அருக்கிறாள். அவள் காதுகளில் கம்மல்கள் அணிந்து கொண்டிருக்கிறாள். தாங்களே நேரில் சென்று கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.
உதங்கர்: மிக்க நன்றி, நான் சென்று வருகிறேன் (என்று கூறிவிட்டுச் சென்றார்.)
அந்தபுரத்திற்குச் சென்று அரசியாரைத் தேடிப்பார்த்தார். அங்கு அரசியாரைக் காணவில்லை. அந்தப்புரத்தில் எங்குத் தேடினாலும் அரசியார் அங்கு இல்லை. என்ன செய்யலாம் என்று எண்ணிக்கொண்டே வேகமாக வெளியே வந்தார். மன்னனிடம் சற்றுக் கோபமாகக் கேட்டார்.
உதங்கர்: கம்மலே இல்லை என்று சொலொலியிருக்கலாமே!.
அரசன்: ஏன்? என்ன நடந்தது?
உதங்கர்: இன்னும் என்ன நடக்க வேண்டும்? அந்தபுரத்தில் அரசியார் இல்லையே.
அரசன்: தாங்கள் சரியாகப் பார்த்திருக்க மாட்டீரகள். அரசியார் அங்கேதான் இருக்கிறார்.
உதங்கர்: நான் சரியாகப் பார்த்துவிட்டேன். அரசி அங்கு இல்லை.
அரசன்: முனிவரே! இப்பேது தான் எனக்குப் புரிகிறது. நீங்கள் ஆச்சாரமாக இல்லை என்று. ஆச்சாரம் தவறியவர்கள் கண்ணுக்கு என் மனைவி தெரிய மாட்டாள். நீங்கள் ஆச்சாரம் தவறியுள்ளீர்கள். அதனால்தான் அங்கே என் மனைவி இருந்தும் தங்கள் கண்களுக்குத் தெரியவில்லை.
உதங்கர்: ஆமாம் ஆமாம். குரு காரியம் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற செயல்கள் அனைத்தையும் மறந்து போய்விட்டேன். வழியில் சாணத்தை உண்டுவிட்டு வந்தேன். சந்தியாவந்தனம் செய்யவில்லை. உண்மையிலேயே நான் ஆச்சாரம் தவறியுள்ளேன். மன்னியுங்கள் மன்னா. இதோ நான் சென்று எல்லா கடனகளையும் முடித்துக்கொண்டு ஆச்சாரமாக வந்து அரசியாரைப் பார்க்கிறேன்.
வேளியே சென்ற உதங்கர் குளித்துவிட்டுக் காலைக் கடன்களை முடித்துவிட்டு சந்தியாவந்தனம் செயதுவிட்டு அரண்மனைக்கு ஆச்சாரமாக வந்தார்.
எனவே அரசியார் அரண்மனை வாயிலேயே நின்று கொண்டு வரவேற்றார். உதங்கர் கேட்கும் முன்பே கம்மல்களைத் தயராகக் சுழற்றி வைத்துக்கொண்டு இருந்தார்.
நீங்கள் கேட்ட கம்மலகள் இதோ இருக்கின்றன. எடுத்துச் செல்லுங்கள் என்று கூறிக் கொடுத்தாள். கம்மலைப் பெற்றுக் கொண்ட சந்தோஷத்தில் உதங்கர் உடனே புறப்பட்டார்.
அரசர்: முனிவரே சற்று நில்லுங்கள். இந்தக் கம்மல்களைக் கீழே வைக்கக் கூடாது. வைத்தீர்களனால் தட்சகன் என்ற பாம்பு இவ்றைக் கவ்விச் செறுவிடும். மிகவும் கவனமாக எடுத்துச் செல்லுங்கள் என்று மன்னர் பணிவேடு வேண்டினார்.
உதங்கர்; "வேண்டாம். வேண்டாம் எனக்கு மிகவும் நேரம் ஆகிவிட்டது. நான் உடனே செல்ல வேண்டும். சாப்பிட நேரமில்லை. இப்போது என்னைப் போக அனுமதிக்க வேண்டும்.
அரசன்: இல்லை இல்லை தாங்கள் சாப்பிடாமல் செல்வதை என்னல் அனுமதிக்க முடியாது. உணவு உண்டு விட்டுத்தான். செல்ல வேண்டும்.
உதங்கர்: சரி உணவு உண்கிறேன். சீகிரம் உணவு போடு. (உணவு பரிமாறப்படுகிறது).
உண்ணுகிற நேரத்தில் உணவில் ஒரு தலைமுடி இருந்துவிட்டது. இதைக் கண்டவுடன் உதங்கர் வெகுண்டு எழுந்தார். மன்னா, என்னை வேண்டும் என்றே நீங்கள் அவமானப்படுத்தி விட்டிர்கள்.
அரசன்: என்ன முனிவரே, என்ன நடந்தது?
உதங்கர்: இது என்ன (கொபத்தின் உச்சியில் இருந்த முனிவர் முடியைக் காட்டி 'இது என்ன?' என்று கேட்டார். மன்னன் புரிந்து கொண்டான். தவறான செயல் நடந்துவிட்டதை எண்ணி முனிவரிடம் மன்னிப்புக் கேட்டான்.)
உதங்கர்: இல்லை வேண்டுமென்றே என்னைச் சாப்பிடச் சொல்லி அவமானப்டுத்தி விட்டாய். உனக்கு நான் சாபம் கொடுக்கப் போகிறேன்.
அரசன்: முனிவரே அவசரப்படாதீர்கள். இது தவறாக நடந்துவிட்டது. மன்னியுங்கள். (என்று பலமுறை வேண்டினார். அரசர். எவ்வளவோ வேண்டியும் முனிவர் மன்னிக்க மறுந்துவிட்டார்.)
உதங்கர்: "இல்லை.மன்னிக்க முடியாது. சாபம் கொடுக்கப் போகிறேன். இரண்டு கண்களும் உனக்குத் தெரியாமல் போக்ட்டும்."
முனிவர் சாபம் கொடுத்துவிட்டதால் மன்னனும் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.)
அரசன்: "அப்படியா நானும் உங்களுக்குச் சாபம் கொடுக்கிறேன். எப்பொழுதும் உங்களுக்கு திருமணம் ஆகாமல் போகட்டும்."
உதங்கர்: மன்னா, என்ன இது? எனக்குச் சாபம் கொடுத்து விட்டிர்கள். நான்கு நாட்களுக்கு முன்தான் என் குருநாதர் திருமணம் செய்து கொண்டு நலமுடன் வாழுமாறு எனக்கு ஆசி கூறினார். இதற்குள் இப்படிச் சாபம் கொடுத்து விட்டிர்களே. சரி நான் என் சாபத்தை விலக்கிக் கொள்கிறேன், அரசன்: "மிக்க மகிழ்ச்சி மனிவரே நான் தங்களுக்கு அவசரப்பட்டு சாபம் கொடுத்துவிட்டேன். இந்த சாபத்தை விலக்கிக் கொள்ளை இயளாதே" என்று கூறி வரிந்தினார்.
அரசியாரிடம், "அரசியாரே நான் சென்று வருகிறேன்" என்று கூறி விட்டுப் புறப்பட்டார் உதங்கர்.
திரும்பி வரும் வழியில் மாலை நேரம் வந்துவிட்டது. சந்தியாவந்தனம் செய்யாததால்தான் அரசியார் கண்ணுக்குத் தெரியவில்லை. இது போல் இன்னும் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதால் சந்தியா வந்தனம் செயவது மிகவும் முக்கியம் என்று எண்ணினார் உதங்கர்.
கம்மல்களைத் துணியில் கட்டி ஒரு மரக்கிளையில் தொங்கவிட்டார். குளிப்பதற்குக் குளத்திற்குச் சென்றார்.குளித்துக் கொண்டு இருக்கும்பொது காற்று பலமாக அடித்தது.
மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த துணியானது கீழே விழுந்தது. தயாராக இருந்தா அரசியார் கூறிய தட்சகன் என்ற அந்தப் பாம்பு துணி மூட்டையைக் கல்விக் கொண்டு ஓட்டம் பிடித்தது. இதைப் பார்த்து விட்ட முனிவர் குளத்திலிருந்து கரையேறி வேகமாகப் பாம்பைத் துரத்திச் சென்றார். வேகமாக் ஓடிய பாம்பு நாகலோகத்தில் போய் விழுந்தது. இவரும் நாகலோகம் போய் விழுந்தார்.
இந்த நேரத்தில் பாம்பு முனிவருக்கு ஒரு சாபம் கொடுத்தது. நாகலோகத்தில் இருக்கும் யாரும் முனிவர்க ண்ணுக்குத் தெரியாமல் போகட்டும் என்றது. எங்குப் பார்த்தாலும் யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை முனிவருக்கு.
கொஞ்ச நேரம் சுற்றும் முற்றும் பார்த்தார், ஒருவரும் இல்லத்தைக் கண்டு திகைப்படைந்தார். முனிவர் தூரத்தில் இரண்டு பெண்கள் கண்ணுக்குத் தெரிந்தார்கள். கருப்பு, நூலும், சிவப்பு நூலும், முறுக்கிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் சென்று "தட்சகன் என்ற பாம்பு இந்தப் பக்கம் வந்தா" என்று கேட்டார். அவர்கள் பதில் கூறவில்லை. குருதட்சணை கொடுப்பதில் சிக்கல் ஏறப்ட்டாதே. நான் உயிரோடு இருந்து என்ன பயனென்று கூறிக்கொண்டு தற்ற்கொலைக்கு முயற்சித்தார். அந்த நேரத்தில் அவருக்கு அருகில் ஒரு அழகான குதிரை மீது வந்து நின்றான் ஒருவன்.
குதிரையின் மேலிருந்தவன்"தாங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன வேண்டும்?' என்று உதங்கரைப் பார்த்துக் கேட்டான்.
உடனே தற்கொலை முயற்சியைக் கைவிட்டு நடந்ததை எல்லம் சொன்னார் உதங்கர்.
அவன் நாக லோகத்து மனிதன் என்பதால் அவனுக்கு எது எதுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தது. எனவே நன்றாக யோசித்தான்.
முனிவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணியவன், "இந்த குதிரையின் காதில் ஊதுங்கள்" என்று முனிவரிடம் சொன்னான்.
முனிவர் அவன் சொல்படியே குதிரையின் காதில் ஊதினார். ஊதிய உடனே நாகலோகம். பூலோகம் முதலான எல்ல உலகங்களும் மிகப்பெரிய சத்தம் (இடி ஓசை) கேட்க ஆரம்பித்துவிட்டது.
நாகங்கள் எல்லாம் இந்த சத்தத்தை உடனே நிறுத்த வேண்டும்.
வாகரி என்ற பாம்புகளின் தலைவி விஷயத்தைத் தெரிந்துகொண்டு தட்சகனை அழைத்து உடனே விரந்து சென்று முனிவரிடம் கம்மலைக் கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்டுக்கோள் என்று சொன்னது.
வாசுகியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அந்த தட்சகன் என்ற பாம்பும் விரைந்து சென்று அவ்வறே முனிவரிடம் கம்மலைக் கொடுத்துவிட்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. முனிவரும் கம்மலைப் பெற்றுக்கொண்டார்.
இக்கட்டான் சூழ்நிலையில் தனக்கு உதவிய அந்த குதிரை வீரனுக்கு நன்றி சொன்னார், உதங்கர்.
கம்மல்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டவர் நாகலோகத்திலிருந்த்னு பூலோகத்திறகுச் செல்லும் வழி தெரியாமல் திகைத்தார். எப்படி பூலோகம் செல்வது என்று அந்தக் குதிரை வீரனிடமே கேட்டார். இவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று மீண்டும் நினைத்து அந்தக் குதிரைவீரன் வேளியே வருவதற்கு உரிய வழியைக் கூறினான்.
"இந்த குதிரையின் மீது அமர்ந்துகொண்டு குதிரையின் காதுகளில் 'ஓம்' என்ற ஒலியை எழுப்புங்கள்" என்று சொன்னார்.
முனிவருக்கு அவ்வறே குதிரையின் மீது ஏறிக்கொண்டு குதிரையின் காதுகளில் ஓம் என்ற ஒலியை எழுப்பினார்.
ஒலியை எழுப்பிய உடனே அந்தக் குதிரை வேகமாகப் பறந்து பயிலக முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தது.
மிகவும் மகிழ்ச்சியடைந்த முனிவர் கம்மல்களைத் தாயிடம் கொடுத்துவிட்டு ஆசி பெற்றுக்கொண்டு, குருநாதரிடம் சென்று விவரத்தைச் சொன்னார்.
கம்மல்களை எடுத்துக்கொண்டு வரும் வழியில் நாகலோகத்தில் நடந்த எல்லாவற்றையும் சாணத்தை உண்டதையும் பயிலவ முனிவரிடம் சொன்னார்.
இந்தக் கம்மல்களைக் கீழே வைக்காதீர்கள். வத்தீர்களானால் தட்சகன் என்ற பாம்பு எடுத்துச் சென்றுவிடும் என்று தன்னுடைய அனுபவத்தை எடுத்துக் கூறிவிட்டு குருபத்தினியிடமும், குருவிடமும் ஆசிபெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்.
குருதட்சனை கொடுப்பதில் தான் எத்தனை தடங்கல்கள் பார்த்தீர்களா?
வை. ராஜேந்திரன்
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||

















