Favorites

AKR Consultants
Achalam.com
Young Poet.org
ACOE.co.in
Ruralseva.com
Healthcareall.org
RCC pipes.com
Brahmin Today.org
Kalakad.org
CIT76.com
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
Peopleofindia.net
kavithai kuyil
Pillaiyar
Thamiz Thenee
Positive Anthony

CIT India.com
Airomatic Systems
KTVR.com
Nilacharal.com
Societal Support
Tamilunltd.com



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites


வெளியே

தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com

  Website Dedicated to Education of Children

Tamil-English bilingual webmagazine
 Children of today are the future Leaders     Bring out the child in you
Learn to Produce Tamil contents in ALL Windows applications
Enable unicode And Set Unicode Encoding to view Tamil contents

We use     Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications - the Easiest and Fastest
Tamil Transliteration Software.
menu bar

மழலைகள்






 



ரனாஸ்மி வீட்டு ரஹஸ்யங்கள்

நடராஜன் கல்பட்டு



Art

கார்டூனிஸ்ட் வீட்டில் கலவரமா?

1-7-06

"சார், சீக்கிரமா வாங்க. ரனாஸ்மி வீட்டுலே எதோ ப்ராப்ளம்னு என் மனசுக்கு படுது. போய் பாத்தூட்டு வந்துடுவொம்" என்று என்னை அழைத்தார் உமாபதி. உடனே கிளம்பினேன் நானும்.

குப்பு தெரு அஞ்சாம் நம்பர் வீட்டிற்குள் இருந்து ஒரு சத்தம். பாவி பாவி! மாடா ஒழச்சேன் அவனுக்காக, பாவி!

"யாரென்னா பாவின்னு திட்டின்றுக்கேள்?

அதாண்டி, அந்த வெள்ளக்காரப் பாவியைத் தான் திட்டின்றுக்கேன். ஸீட்டக் கிழிச்சுட்டாண்டி."

"ஏன்னா, கம்பெனி அவனுதுன்னேள். அப்போ அங்கே இருக்கற மேஜை நாற்காலி எல்லாம் அவனுதுதானேன்னா? அப்போ சீட்டக் கிழிக்க அவனுக்கு உரிமையில்லையா என்ன? இப்போதான் தெருவுக்குத் தெரு 'ஸோஃபா நாற்காலி ரிப்பேர் செய்ய்யப்படும்'நு போர்டு போட்டுண்டு ஈ ஓட்டிண்டு இருக்காளே. அதுலெ ஒத்தனெ கூப்பிட்டு ரிப்பேர் பண்ணிண்டுட்டாப் போச்சு. இதுக்கு ஏன்னா இவ்வொளோ பதட்டப் படறேள்?" இது சஹதர்மிணியின் சமாதான வார்தைகள்.

"மக்கு, மக்கு! ஸீட்டக் கிழிக்கறதுன்னா வேலைலேருந்து தள்றதுடீ."

"எதுக்குன்னா தள்ளினா? நீங்கதான் கம்பெனிலெ பெரிய எஞ்சினீர்ன்னு சொல்லின்றுப்பேளேன்னா."

"ஆஃபீஸ் டயத்துலெ கம்ப்யூடர்லே படம் போட்டுண்டு இருந்தேண்டி. கழுகுக்கு மூக்குலெ வேர்க்கும்பாலே, அந்த மாதிரி எங்கே இருந்தோ திடீர்ன்னு வந்தான், 'வாட் ஆர் யூ டூயிங்க் இன் ஆஃபிஸ் டயம்?'னான். 'கம் டு மை ரூம்'னான். போனா சீட்டேக் கிழிச்சுட்டாண்டி."

ஏன்னா, எஞ்சினீர்ன்னா படம் போடுவாளேன்னா, பெரிய பெரிய காகிதத்துலே? படம் போடறது என்ன தப்பாம்?"

நான் போட்டுண்டு இருந்தது ஃபேக்டரி பில்டிங்க் படமோ, எந்த மெஷின் எங்கெ வரணும்ங்கற படமோ இல்லேடி. நம்ம ஃபாமிலி சைட்டுக்கு ஒரு கார்டூன் போட்டுண்டு இருந்தேன்."

ஃபேமலி சைட்டா? நமக்கு ஒரு வீடு மட்டும் தானேன்னா இருக்கு? சைட்டு வாங்கினதாச் சொன்னதே இல்லயே நீங்க? எப்போன்னா வாங்கினேள்? இந்த விஷயத்தே வெட்டிங் டே ஸர்ப்ரைஸ் கிஃப்டாச் சொல்லணும்னு இருந்தேளா?"

"மண்டு, மண்டு! நான் சொல்லிண்டு இருப்பேனேடி, தூள்பட்டு, தூள்பட்டு சைட்டுன்னு. பல ஊர்லே இருக்கற நம்ம சொந்தக்கராள் எல்லாரும் வம்பு பேசிக்கற ஒரு இணய தளம்னு. அதுக்குதாண்டி ஒரு கார்டூன் படம் போட்டுண்டு இருந்தேன். ''

"அந்த வெள்ளக்காரன் கெடக்கான்னா. அவன் கம்பெனி இல்லேன்ன என்ன? ஊர்லெ வேரே கம்பெனியேவா இல்லே?"

"நான் பண்ணிக் காட்ட்றேன் பாருடீ. படம் போட்டே பெரிய ஆளா ஆகிக் காட்டறேன் பாரு. ஷங்கர், ஆர்.கே. லக்ஷ்மன் இவா பேரோட என் பேரும் வரப்போரது பாருடீ."

ஏன்னா, அப்படிப் பெரிய ஆளா வரவரைக்கும் சாப்பாட்டுக்கு என்னன்னா பண்றது?

"அதான் நான் இதுக்கு முன்னாடி இருபத்தஞ்சு வருஷம் ஒரு கவர்மென்ட் ஆஃபீசுலே குப்பை கொட்டிண்டு இருந்தேன் இல்லயா? அதுக்குத் தான் பென்ஷன் பணம் தராளேடீ. அது போதும் நமக்கு."

"ஆண்டவா, இப்படி ஒரு சோதனையா?

"ஏய், ஒரு பேபர் கொண்டு வாடீ."

அன்றைய ஹிண்டு பேப்பரைக் கொண்டு வந்து கொடுக்கிறாள் மிஸஸ் ரனாஸ்மி.

"ஆண்டவா! இப்படி ஒரு ஜடத்தை என் தலெலே கட்டிட்டுப் போயிட்டாரேடி ஒங்க அப்பா."

"அப்பா கட்டலேன்னா. நீங்கதான் கட்டினேள் என் கழுத்துலே தாலிய."

"இப்போ யார் கட்டினாங்கறது தான் ரொம்ப முக்கியம் போ. வேலைக்கு மனுப் போடப் பேப்பர் கொண்டு வான்னா படிக்க ஹிண்டு பேப்பரைக் கொண்டு வந்து தரா."

"ஏன்னா நான் ஒண்ணு சொல்லட்டுமா?"

"என்னடி சொல்லு."

"நீங்க என்ன மக்கு, மண்டு, மடச்சி, முட்டாள், அதிபுத்திசாலின்னு எப்படி வாணா கூப்பிடுங்கோ. எனக்கு அதைப் பத்திக் கவலை இல்லே. ஏன்னா எனக்குத் தெரியும் இப்படியெல்லாம் நீங்க என்னைக் கூப்பிடறது என் மேல இருக்கற ஆசைலதான்னு."

"டீ வாண்டாண்டீ இந்த ஆபத்தான விளையாட்டு, வேலைல இல்லாத போது ஒரு பையன வெச்சிண்டு குடும்பம் நடத்தறதே கஷ்டம். அதுலெ இன்னொண்ணுக்கு அடிபோடாதேடீ."

"போங்கோன்னா."

"சரி வாங்க சார், போயிட்டு ஒரு மூணு நாள் கழிச்சு வந்து பாக்கலாம்", என்றார் உமாபதி. 'உமாபதி சொல்லைத் தட்டதே'ன்னு யாரும் எனக்குச் சொல்லித் தரவில்லை. ஆனால் அது எப்பொதுமே நான் கடை பிடிக்கும் ஒரு கொள்கை. ஆகவே திரும்பினேன் என் வீட்டிற்கு.

4-7-06

மூன்று நாள் கழிந்த்தது. "சார்" என்று உமாபதியின் குரல் கேட்டதுமே, "இதோ வந்துட்டேன்" , என்று கிளம்பினேன் சட்டையை மாட்டிக்கொண்டு. நடந்தோம் நாணு (நாரயணஸ்வாமியின் மற்றொரு பெயர் இது) வீட்டை நோக்கி..

"சார், பொஸ்ட்" .

"ஏய் போய்ப் பாருடீ, ஏதோ போஸ்ட் வந்திருக்கு".

"இதோ வந்துட்டேன்னா".

அடுத்த சில வினாடிகளில் ரனாஸ்மியின் வீட்டு வாசல் கதவு திறக்கிறது. ரனாஸ்மியின் மனைவி வாசலில் கிடந்த லெட்டெரை எடுத்துக்கொண்டு மறைகிறாள்.

"பாத்தையாடீ. நான் தினச்சந்திரன் ஆஃபீசுக்குப் போட்ட லெட்டெருக்கு உடனே பதில் வந்துடுத்து". கவரை ஆவலுடன் பிரித்துப் படிக்கிரார் ரனாஸ்மி.

அன்புள்ள ஐயா,

தங்கள் விண்ணப்பம் கிடைத்தது. மிக்க நன்றி.

எங்கள் தினசரியில் சென்ற மாதம் ப்ரசுரித்த ஒரு கேலிச் சித்திரத்தில் ஆத்திரமடைந்த ஒரு கட்சித்தலைவரின் அன்புத் தம்பிகள் எங்கள் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதில், இருந்த நான்கு மெஷிங்களில் மூன்று முற்றிலுமாகவும் ஒன்று சிறிதளவும் பாழாகி விட்டது. அவற்றைப் பழுது பர்த்து மீண்டும் வேலை செய்ய வைக்கும் தகுதி உள்ள எஞ்சினியர்களைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். தங்களுக்கு அந்தத் தகுதி இருந்தால் கிழே கொடுக்கப்பட்டுள்ள தொலை பேசியில் தொடர்பு கொள்ளவும்.

கை ஒப்பம்: வெண்ணிலா
(ஆசிரியர், தினச்சந்திரன்)

பின் குறிப்பு: ஓரு தடவை தவறு செய்து நாங்கள் கற்றுக்கொண்ட பாடத்தினால் இனி தினச்சந்திரனில் கேலிப்படங்களை ப்ரசுரிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

"அவன் கிடக்கறான்னா, சுண்டைக்காய் பேப்பர் காரன். அந்தப் பேப்பர் இல்லேன்னா வேறே பேப்பரேவா இல்லே? நீங்க படிக்கர ஹிண்டு பேப்பருக்கு எழுதிப் போடுங்கோன்னா".

"சரிடீ. இப்பவே பண்றேன் அதை. ஓரு பேப்பரும் பேனாவும் கொண்டு வா".

இந்தத் தடவை ஒரு வெள்ளைக் காகிதமும் பேனாவும் கொண்டு வந்து கொடுக்கிராள் ரனாஸ்மியின் மனைவி.

"உமாபதி சார். ஓரு சின்ன சந்தேகம்".

"என்ன சார்?"

"ரனாஸ்மியின் மிஸஸ், ரனாஸ்மியின் மனைவி, ரனாஸ்மியின் சஹதர்மிணின்னு சொல்றது கொஞ்சம் கஷ்டமா இருக்கே. அவங்க பேரு உங்களுக்குத் தெரியாதா?"

"ஆங். தெரியுமே. நாணு சம்சாரம் பேரு கூட ணூலதான் முடியும். ஆங். நினவுக்கு வந்திடிச்சு. ரேணுன்னு பேரு. சரி இப்போ நாம போயிட்டு ஒரு மூணு நாலு நாள் கழிச்சு வந்து பாக்கலாம் வாங்க".

நகர்கிறோம் நாங்கள்.

8-7-06

குப்பு தெரு அஞ்சாம் நம்பெர் வீடு எங்களுக்கு உள்ளூர்க் கோவில் போல ஆகிவிட்டது. நாங்கள் இருவரும் அடிக்கடி சென்று வரும் இடம் அதுதானே?

இன்று அந்த கோவிலில்:

"சார் போஸ்ட்".

"ஏய், ரேணு போய்ப் பாருடீ. லெட்டெர் வந்திருக்கு போல இருக்கு".

கதவு திறக்கிறது. கண் இமைக்குமுன் கடிதம் மறைகிறது வீட்டிற்குள்.

கவரைத் திறந்து படிக்கிறார் ரனாஸ்மி.

"டியர் சார்,

தேங்க் யூ ஃபார் யுவர் லெட்டெர் ஆஃப் 4-7-06.

வி ஹேவ் ஸ்டாப்ட் பப்ளிஷிங்க் கார்டூன்ஸ் இன் அவர் டெய்லி சின்ஸ் த்ரீ இயர்ஸ், ஏஸ் வி டு நாட் விஷ் டு இன்கர் தி ராத் ஆஃப் பாலிடிஷியன்ஸ் அண்ட் லூஸ் கவெர்மென்ட் அட்வெர்டைஸ்மென்ட்ஸ். நார் டு வி ஹேவ் சஃபிஷியன்ட் ஆர்ம்ட் ப்ரொடெக்ஷன் ஃபோர்ஸ் டு கார்ட் அவர் ப்ரெஸ் அண்டு ப்ராபர்டி இன் தி இவென்ட் ஆஃப் எனிதிங் அன்டுவொர்ட் ஹேப்பனிங்க். ஹென்ஸ் வி ரிக்ரெட் வி ஆர் நாட் ஏபெள் டு டேக் அட்வன்டேஜ் ஆஃப் யுவர் ஆஃபர்".

"இவன் இல்லாட்டி என்னடீ. நான் உலக அலவுள போய்க் காட்டறேன் பாரு".

"ஊலக அளவிலயா? அப்படின்னா?"

"சொல்றேன் கேளு. ஐக்ய நாடுகள் சபையோட ஒரு அங்கம் யூனிஸெஃப் யூனிஸெஃப்னு இருக்கு".

UNICEF - image: Wagtech

"அது சரின்னா. எதுக்கு ரெண்டு வெச்சிருக்கா. ஊலகம் பூராவுக்கும் ஒண்ணு போறாதாமா?"

"உனக்குப் புரியாதுடீ. புரிய வைக்கவும் முடியாது. ஓரு வழக்குக்காகச் சொன்னேன் யூனிஸெஃப் யூனிஸெஃப்னு ரெண்டு தரம்."

"சரின்னா. அவா மேல கேஸ் போடப்போறேளா? ரொம்பச் செலவாகுமேன்னா."

"வழக்குன்னா கோர்டு வழக்கு இல்லடீ. பழக்கம். சில சமயம் ஒரு வார்தைய ரெண்டு ரெண்டு தரம் சொல்லுவா இல்லயா? அந்த மாதிரி டீ."

"ரெண்டு ரெண்டு தரம்னா நாலு தடவை சொல்லுவாளா? அது என்னன்னா புது வழக்கமா இருக்கு?"

"ஐயோ உனக்குப்புரிய வைக்க முடியதுடீ."

"எனக்குப் புரியாட்டா பரவா இல்லே. மேல சொல்லுங்கோ."

"உலக அளவுலே குழந்தைகள் நலன கவனிக்கரத்துக்காக ஏர்படுத்தினது தான் யூனிஸெஃப்ங்கறது. அதுக்கு அனுப்பப் போறேன் பாரு ஒரு லெட்டெர்."

"சரின்னா. அப்படியே செய்யுங்கோ."

"சார், பதில் வர இன்னும் ஒரு மாசத்துக்கு மேல ஆகும். வாங்க போயிட்டு அப்புறமா வரலாம்", என்று உமாபதி அழைக்க, அவருடன் திரும்பினேன் வீட்டுப்பக்கம்.

9-8-06

"சார் வரீங்களா, யூனிஸெஃப்லேருந்து என்ன பதில் வந்திருக்குன்னு பாத்தூட்டு வரலாம்" என்று அழைத்தார் உமாபதி. கிளம்பினேன் நானும்.

"போஸ்ட்" என்ற குரல் கேட்டதுமே, "இருடீ, ரேணு. இந்த தடவை நானே போய் எடுத்துண்டு வரேன்."

கையில் லெட்டெரை எடுத்ததும், "ஆஹா, வந்தூடுத்துடீ லெட்டெர் யூனிசெஃப் லேருந்து", என்றபடி லெட்டெரை படிக்க ஆரம்பித்தார் ரனாஸ்மி.

"டியர் சார்,

வி ரிசீவ்ட் யுவர் லெட்டெர் ஆஃப் 8-7-06. அட் தெ மோமென்ட் வி ஹேவ் நோ ஃபண்ட்ஸ் ஃபார் ப்ரொட்யூசிங்க் கார்டூன்ஸ் ஃபார் சில்ட்ரன். வி ஹேவ் ரிட்டன் டு தெ ஸெக்ரெடரி ஜெனெரல் ஆஃப் யுனைடெட் நேஷன்ஸ் ஃபார் அலாட்மெண்ட் ஆஃப் ஸ்பெஷல் ஃபண்ட்ஸ் ஃபார் திஸ் பர்பஸ். வென் திஸ் ஈஸ் ரிஸீவ்ட், வி ஷெல் அட்வைஸ் யு அண்ட் அட் தட் டைம் யு குட் எகைன் ரைட் டு அஸ், இன் கேஸ் யு ஹேவ் தெ எபிலிடி டு ப்ரொட்யூஸ் கார்டூன்ஸ் அண்ட் சீரியல்ஸ் லைக் டாம் அண்ட் ஜெர்ரி, ஆர் ஷ்ரெக் ஆர் ஹேரி பாட்டெர்.

தேங்க் யு ஃபார் தெ இன்டெரெஸ்ட் யு ஹேவ் ஷோன் இன் தெ வெல்ஃபர் ஆஃப் தெ சில்ரென் ஆஃப் தெ வொர்ல்ட்.

ஸயிண்ட் எக்ஸ் ஒய் இஃஜட்

ஃபார் அம்பஸெடர் அட் லார்ஜ்
யூனீஸெஃப்

டீ, நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இந்தk கார்டூன் போடர வேலையெல்லாம் நமக்குs சரிப்பட்டு வராது. பேசாமெ வெறே ஏதாவது ஒரு எஞ்சினீயரிங்க் கம்பனிக்கு அப்ளை பண்ணப்போறேன்."

"செய்யுங்கோன்னா. உங்களுக்குத்தான் தெரியும் எது சரின்னு. ஏன்னா பெரிய படிப்பெல்லம் நீங்கதான் படிச்சிருக்கெள். நான் ஒண்ணு சொல்லட்டுமா?"

"சொல்லேண்டி."

"புதுக் கம்பெனியிலெயாவது இந்த தூள்பட்டைத் தூக்கி தூர வெச்சிட்டு ஆஃபிஸு வேலையெ மட்டும் செய்யப் பாருங்கோன்னா."

"சரிடீ, அப்படியே செய்யரேன். ஒண்ணு சொல்லட்டுமா? நீ ஜாஸ்தி படிக்கலேன்னாலும் ஒனக்கு ரொம்பவே அறிவு இருக்குடீ."

"ஏன்னா, என்ன வேணும் இப்போ உங்களுக்கு? ரொம்பவே ஐஸ் வெய்க்கறேளே. சுடச்சுட முந்திரிப் பக்கோடாவா, இல்லே கத்திரிக்கா பஜ்ஜியா? கூட என்ன காஃபியா இல்லே மசாலா டீயா?"

கார்டூனிஸ்ட் வீட்டில் திரை விழுகிரது. "இனி நமக்கென்ன இங்கே வேலை?" என்று உமாபதி சொல்ல நகர்கிறோம் இருவரும்.

Your Feedback


Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required




Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday