Favorites

AKR Consultants
Achalam.com
Young Poet.org
ACOE.co.in
Ruralseva.com
Healthcareall.org
RCC pipes.com
Brahmin Today.org
Kalakad.org
CIT76.com
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
Peopleofindia.net
kavithai kuyil
Pillaiyar
Thamiz Thenee
Positive Anthony

CIT India.com
Airomatic Systems
KTVR.com
Nilacharal.com
Societal Support
Tamilunltd.com



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites


வெளியே

தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com

  Website Dedicated to Education of Children

Tamil-English bilingual webmagazine
 Children of today are the future Leaders     Bring out the child in you
Learn to Produce Tamil contents in ALL Windows applications
Enable unicode And Set Unicode Encoding to view Tamil contents

We use     Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications - the Easiest and Fastest
Tamil Transliteration Software.
menu bar

மழலைகள்






 



டூல்ஸ்

நடராஜன் கல்பட்டு



Fall

குழந்தைகளே,

ஒரு நாப்பத்து நாலு வருஷங்களுக்கு முன்னாடி ஒரு நாள் நான் ஒருத்தர் வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கே ஒரு விளக்கு எரியலே. அந்த வீட்டுலே ரெண்டு பையங்க எஞ்சினியரிங் படிச்சவங்க. அதுலெ ஒத்தன் அப்பொ அங்கெ லீவுக்கு வந்திருந்தான். நான் அவனெக் கேட்டேன், "ஏண்டா நீதான் எஞ்சினியராச்சே. இந்த லயிட்டெ சித்தப் பாக்கக் கூடாதா?"ன்னு. அவன் பதில் என்ன சொன்னன் தெரியுமா? "இதெல்லாம் எஞ்சினியர் வேலை இல்லே. எல்க்ட்றீஷியனோட வேலை"ன்னு. ஒரு ஃப்யூஸான பல்பை மாத்தறத்துக்கு நாம எலெக்ட்றீஷியனைத்தான் கூப்பிடணும்னு இருந்தோம்னா வாழ்க்கைலே ரொம்பவே கஷ்டப் பட வேண்டி இருக்கும். அதுவும் வெளி நாடுகள்லெ வேலைக்குப் போனப்புறம் சின்னச் சின்ன வெலைக்கெல்லாம் ஆளைக் கூப்பிடணும்னா கெட்டுப் போன சாமான் என்ன வெலையொ அதெவிட அதிகமா வர ஆளுக்குக் கொடுக்க வேண்டி இருக்கும். இப்பொ இந்தக் கதையெ படிச்சுப் பாருங்கோ.

டீ. ஐ. வொய். மேன் (மேனியாக்?)

"சார் வாங்க. இன்னிக்கு நாம நம்ம பூத உடல்லேயே ஒரு ஸ்பெஷல் விசிட் போயிட்டு வரலாம்" என்றார் உமாபதி ஒரு நாள்.

"ஸ்பெஷல் விசிட்டா? எங்கே" அப்படி என்ன விசேஷம் அங்கே?" என்றேன் நான்.

"எனக்குத் தெரிஞ்ச ஒரு டீ.ஐ.வொய். மேன் வீட்டுக்குப் போயிட்டு வரலாம் வாங்க."

"டீ. ஐ. வொய். மேனா? அப்படின்னா யாரு அது?"

"இது தொ¢யாதா ஒங்களுக்கு? டீ.ஐ.வொய். மேன்னா, டு இட் யுவர்செல்·ப் மேன். தன் வீட்டுக்கு வேணுங்கர சின்ன சின்ன வேலைகளே தானே செஞ்சுக்கர ஆளு. அது எலெக்ட்றிகல் வேலையோ, பைப் பேரோ, தச்சு வேலையோ இதுக்கெல்லாம் வெளி ஆளைக் கூப்பிடாமல் தானே செஞ்சுக்கறவர் தான் டீ.ஐ.வொய். மேன். அமெரிக்கா, ஆஸ்திரேலியாலெ எல்லாம் இந்த மாதி இன்ட்றெஸ்ட் உள்ளவங்களுக்கு ட்ரெய்னிங் குடுக்கறத்துக்குன்னே பெரிய ஹார்ட்வேர் ஸ்டோர்கள்லே க்ளாஸஸ் நடத்தறாங்க."

"அப்படியா? வாங்க அவரெப் போய்ப் பாப்போம். நாம கூட ரெண்டொரு விஷயம் கத்துக்கலாமோ என்னமோ."

சென்னைப் புற நகர்ப் பகுதியில் ஒரு தனி வீடு. கேட்டிலிருந்து பார்த்தால் வீட்டின் ஒரு பகுதியே தெரிகிறது. மீதிப் பகுதி காடு போல வள்ர்ந்துள்ள செடி கொடிகளால் மறைக்கப் பட்டுள்ளது. கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே சென்று காலிங்க் பெல்லை அழுத்த, வயதான ஒருவர் வந்து, "யாரு வேணும் உங்களுக்கு?" என்று கேட்டுக்கொண்டே கதவைத் திறக்கிரார்.

"ஒங்களைப் பார்க்கத் தான் வந்திருக்கோம்" என்று ஒரே குரலில் இருவரும் சொல்கிறோம்.

"என்னையா? எங்கிட்ட என்ன இருக்கு பாத்துப் பேச? உள்ளே வாங்கோ."

உள்ளே செல்கிறோம் பொ¢யவருடன்.

வீடு பெரிய வீடுதான். வாசல் வெராண்டாவைத் தாண்டி உள்ளே போனால் சுமார் இருபத்தஞ்சடிக்குப் பதினஞ்சடியில் ஒரு ஹால். அதில் ஒரு பக்கம் ஸோ·பா செட், கா·பீ டேபிள். மற்றும் இரண்டு டேபிள்கள். ஓன்றின் மீது ஒரு லேப் டாப் கம்ப்யூடர், ப்ரின்டெர் இவை. ஒரு பக்கம் சுவற்றில் ஒரு ஷோ கேஸ். அதனுள் பல பொம்மைகள். மற்றொரு பக்கம் இரு வால் யூனிட்டுகள். ஓன்றில் பழய புஸ்தகங்கள். மற்றொன்றில், டீவீ, சவுண்ட் சிஸ்டெம் இவை. ஓரளவுக்கு நீட்டாகவே காணப் பட்டது.

"எங்கிட்ட என்ன இருக்கு பேசறதுக்கு?" மீண்டும் கேட்கிறார் பெரியவர்.

"நீங்க ஒரு டீ.ஐ.ஓய். மேன் இல்லியா? அதான் ஒங்களப் பாத்து நாலு விஷயம் கத்துக்கலாம்னு வந்தோம்" என்றார் உமாபதி.

"அப்படியா? ரொம்ப சந்தோஷம்."

"ஒங்களப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன். நீங்க எப்படி ஒரு டீ.ஐ.ஓய். மேனா ஆனீங்க?"

"அது... எங்க வீட்டுலே எங்க அப்பா, அண்ணாக்கள் எல்லாருமே சின்னச் சின்ன ரிப்பேர் வேலைகள், எலெக்ட்றிகல் வேலை, பைப் ரிபேர், சைகிள் ரிப்பேர்னு இப்படி ஏதாவது ஒண்ணு செஞ்சிண்டு இருப்பா. அதைப் பாத்து தான் நானும் கத்துண்டேன்."

"அந்த மாதிரி வேலையெல்லம் செய்யறதுக்கு வித விதமா டூல்ஸ் வெணுமே?"

"ஆமாம். டூல்ஸ் நெறயவே வேணும். எங்க அப்ப நெறயவே டூல்ஸ் வெச்சிண்டு இருந்தா. நான் வேலைக்குப் போக ஆரம்பிசதும் எந்த ஊருக்குப் போனாலும் நான் விசிட் பண்ணறது ஹர்ட்வேர் ஷாப்தான். அங்கே எனக்கு உபயோகமா இருக்கும்னு தோணறத வாங்கிடுவேன். ஊருலேந்து வர சொந்தக்காரங்களும் எனக்குக் கொடுக்கற கி·ப்ட் டூல்ஸாத்தான் இருக்கும். இப்போ எங்கிட்ட நெறயவே டூல்ஸ் சேந்துருக்கு."

"ஆமாம் சின்னச் சின்ன வேலைகளுக்கெல்லாம் வெளி ஆளெக் கூப்பிடாமே நீங்களே ஏன் செஞ்சுக்கணும்னு நெனைக்கிறீங்க?"

"சொல்லட்டுமா? வெளி ஆளுங்க செய்யற வேலைலே எனக்கு கொஞ்சம்கூட த்ருப்தி இருக்கறது இல்லே."

"ஏன் அப்படி சொல்றீங்க?”

"சொல்றேன் கேளுங்க. மொதல்ல வர ஆளுங்க சரியான டூல்ஸ் கொண்டு வறதில்லே. கைலே ஒரு பைலே ஒரு ஹேமரும் கட்டிங்க் ப்ளையெர்ஸ¤ம் தான் இருக்கும். ஒரு ஸ்க்ரூவெய் டயிட் பண்ணனும்னா கூட ஹேமராலே அடிச்சுதான் உள்ளே இறக்குவாங்க. அப்படி அடிச்சு இறக்கினா திரும்ப கழட்டறபோது ஸ்க்ரூ ட்ரைவெராலே திருப்பினா சும்மா சுத்திண்டே இருக்குமே ஒழிய கழண்டு வராது. அது மட்டுமா? அப்படி அடிக்கறச்சே பக்கத்துலே எது மேலையாவது அடிபட்டா அது ஒடையும். இந்த மாதிரி ஆட்களை எங்க சித்தப்பா 'ஹேமர் மெகேனிக்னு' கேலியா கூப்பிடுவார்."

"அப்படி அவங்க அடிக்கறபோது 'அடிக்கதேப்பா. அப்படி அடிச்சு ஸ்க்ரூவே உள்ளே இரக்கினா அது டைட்டா புடிக்காது. பக்கத்துலே இருக்கற ஏதாவது ஒண்ணு மேல அடிபட்டு ஒடஞ்சுடப்போறதுன்னு' சொன்னா, 'அது ஒண்ணியும் ஆவாது சார்'ந்னுவாங்க. ஏதாவது ஒடிஞ்சா 'அது முன்னாடியே விரிஞ்சிருந்துது சார். இப்போ தனியா வந்திடிச்சி'ம்பாங்க.”

"நீங்கதான் நெறய டூல்ஸ் வெசிருக்கேங்கறீங்களே. நீங்க கொடுக்கறதுதானே சரியான டூல்ஸை?"

"நெறய தடவே கொடுத்திருக்கேன். ஆனா அதுலேயும் சில ப்ராப்ளம் வரது."

"என்ன ப்ராப்ளம் வரது?"

"கொடுக்கற டூல்ஸை சரியா உபயோகிக்கறது இல்லே. போன வாரம் பாருங்க ஒரு ஆளு டொய்லெட் க்லொசெட் ரெண்டே ·பிக்ஸ் பண்ண வந்தான். வந்தவன் கையிலே ஹேமரும் கொரடும் மட்டுந்தான் கொண்டு வந்திருந்தான். க்லாசெட்டை பிக்ஸ் பண்ணறத்துக்கு ஸ்க்ரூ ட்ரைவரை உபயோகிக்காமே ஹேமராலே அடிக்க ஆரம்பிச்சான். ஒரு அடி குறி தப்பி பீங்கான் க்லாசெட் மேல விழுந்தா ஒடஞ்சுடப் போறதேன்னு எங்கிட்டே இருந்த ஒரு பெரிய நல்ல ஸ்க்ரூ ட்ரைவரைக் கொடுத்தேன். கீழ வேலை முடிஞ்சதும் மாடிலே ஒரு க்லாசெட்டை பிக்ஸ் பண்ணப் போனவன் அந்த ஸ்க்ரூ ட்ரைவரே வெச்சே மொசைக் தரைய ஒடெச்சிருக்காம் போல இருக்கு. அந்த ஆளு போனப்பறம் தான் பாத்தேன் அந்த ஸ்க்ரூ ட்ரைவெரே. அதோட டிப் கம்ப்ளீட்டா பாழாப் போச்சு."

"ஒங்க டூல்ஸ்ஸே குடுக்கறேங்கறீங்களே அதெல்லாம் எப்பொவும் திரும்பி வருமா?"

"அதுவும் நிச்சயமில்லே. ஒரு தடவே வேலிய சரியா கட்டறத்துக்காக ஒரு ஆள் வந்தான். கட்டற கம்பிய துண்டு துண்டா வெட்டறத்துக்கு கஷ்டப் பட்டுண்டு இருந்தான். சும்மா இருக்கக் கூடாதா நான். 'இப்படிக் கஷ்டப்படறயே, இதாலே வெட்டு'ன்னு எங்கிட்டே இருந்த ஒரு கட்டரைக் கொடுத்தேன். போறச்சே கட்டரும் அவன் கூடவே போயிடுத்து.

ஒரு பயிப் ரிப்பேர் பண்ண பக்கத்து வீட்டுக்கு ஒரு ப்ளம்பர் வந்தான். 'சார் ஒங்ககிட்ட இருந்தா அட்ஜஸ்டபள் ஸ்பேனர் குடுங்கன்னான். சரின்னு குடுத்தேன். அந்த ஆளெ அப்பறம் நான் பார்க்கவே இல்லே.

கேட்டு ரிப்பேர் பண்ண வந்தவனுக்குக் கொடுத்த பெரிய ஹேமர் ஒண்ணு கேட்டு வழியாவே போயிடுத்து. இதுக்கெல்லாம் காரணம் வர வொர்கர்ஸ் மட்டுமில்லே. என்னோட முந்தரிக்கொட்டைத் தனமும் ஞாபக மறதியும்தான்."

"வெளி ஆளுங்க வந்து வேலை செய்யறதுலே திருப்தி இல்லேன்னு சொன்னீங்களே. அது ஒங்களோட டூல்ஸ் போயிட்றதுங்கறதுனால மட்டுமா இல்லே வேரே ஏதாவது காரணமும் இருக்கா?"

"இருக்கு. போன வாரம் பாருங்க ரெண்டு டாய்லெட் க்லாஸெட்டே பிக்ஸ் பண்றத்துக்கு ஒரு கன்ட்றேக்டொரேட ஆளுங்க வந்தாங்க. டைல்ஸ் பிக்ஸ் பண்ண வந்த ஆள்கிட்டே, 'லெவெல் சரியா இல்லே போல இருக்கே. தண்ணி தேங்காம போகுமான்னு' கேட்டாக்க, 'லெவல் கரீக்டா இருக்குங்க. நீங்க நாளைக்கு தண்ணி உட்டுப் பாருங்கன்னு' சொன்னார். மறு நாள் தண்ணி உட்டா அங்கங்கே தங்கறது. அது மட்டும் இல்லே. க்லாஸெட் பிக்ஸ் பண்ண ஆளுகிட்டே 'ப்ளஷ் டேங்க்லேருந்து வர பயிப்பே சரியா பிக்ஸ் ப்ண்ணலெ போல இருக்கேப்பா. ரப்பர் வாஷர் சரியா உள்ளே போகலயேன்னு' சொன்னா 'எல்லாம் சரியா இருக்குங்க'ன்னுட்டு போனார். அவர் போனப்பறம் டொய்லெட்டே ப்ளஷ் பண்ணா பைப்பு ஜாயிண்டுலேந்து தண்ணி கொட்டறது. அப்பறம் என்ன. நம்ம வீட்டு மெகேனிக் தான் அத சரி பண்ண வேண்டி வந்தது."

"சார், நீங்க ஒங்க டூல்ஸ் எல்லாம் எங்கே எப்படி வெச்சிறிக்கீங்கன்னு பாக்கலாமா?"

"ஓ, பாக்கலாமே. நான் இந்த வீட்டைக் கட்டினபோது நான் வேலை செய்யறதுக்கு எடமாவும் டூல்ஸ் வெச்சுக்க எடமாவும் இருக்கணும்னு ஒரு தனி ரூமே ப்ளான் பண்ணிக் கட்டி இருக்கேன். வாங்க போய்ப் பாக்கலாம்," என்று சொல்லியபடி எங்களை ஒரு படுக்கை அறை வழியாக அழைத்துப்போகிறார் டீ. ஐ. ஒய். மேன். நாங்கள் கட்டிலைச் சுற்றி ஒரு குறுக்லான இடைவழி வழியாக அவரைப் பின் தொடர்கிறோம்.

திடீரென, "அம்மா" என்ற சத்தம் வருகிறது உமாபதியிடம் இருந்து.

"என்ன சார் ஆச்சு?" என்று நானும் டீ. ஐ. ஒய். மேனுமாகக் கேட்கிறோம்.

"கால்லே நல்லா அடி பட்டுடிச்சு. வெறும் ப்ளாஸ்டிக் பைதானே கீழே கெடக்கு. அதுக்குள்ளே என்ன இரும்புக் கட்டியா இருக்கப் போறதுன்னு கொஞ்சம் கவனக் கொறவா வலது காலே முன்னே எடுத்து வெச்சேன். அடி பட்டுடுத்து. அப்படி என்ன சார் அதுக்குள்ளே இருக்கு கல்லாட்டம்?"

"அதுக்குள்ளே ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து நாலுலே என் மருமான் வாங்கிண்டு வந்த சோனி சவுண்ட் சிஸ்டம் இருக்கு."

"சவுண்ட் சிஸ்டம்னா அழகா எங்கெயாவது மேஜைமேல வெக்கறதுதானே? ஏன் இப்படி பைலே கட்டி கீழே வெச்சிருக்கீங்க?"

"சவுண்டா இருந்தாத்தானே அழகா மேஜை மேல வெக்கலாம்?"

"கெட்டுப் போச்சுன்னா கடேலே கொடுத்து ரிப்பேர் பண்ணி வெச்சுக்கறது தானே?"

"கொடுத்தேன். ஒரு கடேலே இல்லே. ரெண்டு பேர் கிட்டே கொடுத்தேன். ஐனூறு அறணூறு ரூபா தண்டம் அழுததுதான் மிச்சம்."

இந்த சோனி சௌண்ட் சிஸ்டெம் மாத்ரம் இல்லே. அதோ அந்த அலமாரிக்குள்ளே ஒரு 1970 மாடல் அகாய் ஸ்பூல் டேப் ரெகார்டர் இருக்கு. அது மொதல்ல ரெண்டு தடவை கெட்டுப் போனப்ப நான் ஒரு டர்னிங்க் ஒர்க்ஸ¤க்குப் போய் அதுக்கு வேணுங்கற பித்தளே புஷ்ஷே கடெஞ்சு வாங்கிண்டு வந்து போட்டு சரி பண்ணென். மூணாம் தடவே கெட்டுப் போனப்ப கழட்டிப் பாத்தா உள்ளே ஒரு ரப்பர் பார்ட் பொடிப் பொடியா உதுந்து விழுந்துது. கடேலே அந்த பார்ட்டு கெடெக்கெலே.

அந்த பெட் ரூம்லே ஒரு பேனஸானிக் சௌண்ட் சிஸ்டெம் இருக்கு. அதுலே கேஸ்ட்டுலே ஒரு சைடு வேலே செய்யும். ஒரு சைட் வேலை செய்யாது. ரேடியோ வேலை செய்யும். சீ டீ வேலை செய்யாது. ஆனாலும் அதெய் அப்பப்போ உபயோகிச்சிண்டு இருக்கேன்.

“சரியா வேலை செய்யலேன்னா வித்தூட வேண்டியது தானே?"

"விக்கறதா? யாரு வாங்கிக்கறேங்க்றான்? ரெண்டு வருஷத்துக்கு முன்னே வீட்டுலே மூணு கேஸ் அடுப்பு இருக்கே, ஒண்ண வித்தா என்னன்னு கேஸ் ஸ்டவ் ரிப்பேர் பண்ற கடைங்கள்ள கேட்டா 'யாரு சாமி பழய அடுப்பு வாங்கிக்கறாங்க? பத்து ரூபா வாணா கொடுக்கறேன், வெச்சிட்டுப் போங்க'ங்கறான். அந்த அடுப்ப வீட்டுக்குத் திரும்ப கொண்டுவந்து பார்ட் பார்டா பிரிச்சு இரும்பு தனி, பித்தளை தனி, அலுமினியம் தனின்னு வித்ததுலே நூத்தி இருபத்தஞ்சு ரூபா கெடச்சுது."

இந்தப் பேச்சு முடிவதற்குள் 'டூல்ஸ் அண்ட் வொர்கஷாப் ரூமை' அடைகிறோம். அதன் கதவு திறந்துதான் இருக்கிறது. ஆனால் உள்ளே கால் வைக்கக் கூட முடியாமல் எங்கு பர்த்தாலும் கண்டான் முண்டான் சாமாங்கள்.

"ஏன் சார் இப்படி கால் வெக்கே எடமில்லாமெ காயலான் கடையாட்டமா சாமாங்களெப் போட்டு வெச்சிருக்கீங்களே. இது அத்தனையுமா உபயோகப் படர சாமாங்க?"

"அத்தனயுமே உடனே உபயோகப் படக்கூடிய சாமாங்கன்னு சொல்ல முடியாது. திடீர்னு ஒரு நாள் இதுலெருந்து ஏதாவது ஒரு சாமான் உபயோகப்படும். பாருங்க போன மாசம் 'இந்த ஹாகின்ஸ் குக்கர்லே ஹேண்டில்ல இருக்கற க்லிப் வந்துடுத்து. இதே சார்ப் ப்டுத்திக் குடுங்கோன்னா'ன்னா என் சம்சாரம். என் கலெக்ஷன்லேருந்து ஒரு அலுமினியம் ப்ளேட்டே எடுத்து வெட்டிப் போட்டு குக்கரை சரி பண்ணிக் கொடுத்தேன்."

"ஆமாம், இந்த கன்·ப்யூஷன்லேருந்து ஒங்களுக்கு வேணும்கற டூல் எங்கே இருக்குன்னு எப்படிக் கண்டுபிடிப்பீங்க?"

"தாராளமா முடியுமே. என் டூல்ஸ் எனக்குக் கொழந்தைங்க மாதிரி. எது எங்கே இருக்குன்னு எனக்கு நன்னா தெரியும்."

"சார். ஒங்க பிள்ளைங்க வரபோது இந்த அடசெலப் பாத்து 'ஏம்பா இப்படி வீட்டே காயலான் கடையா வெச்சின்றிக்கீங்க'ந்னு கேக்கறதில்லயா?"

"கேப்பாங்க. அடுத்த தடவை நாங்க வரபோது இப்படி இருந்தா எல்லாத்தெயும் தூக்கி வாசல்லே போட்டுடுவோம்பாங்க."

"பின்னெ எப்படி இந்த சாமானெல்லாம் இப்படியே வெச்சிருக்கீங்க?"

"அது ரொம்ப ஈசி சார். அவங்க வரத்துக்கு நாலு நாள் முன்னடி எல்லாத்தெயும் ப்ளாஸ்டிக் பேகுகள்ளே போட்டு கட்டி பரண்லே, அலமாரிக்குள்ளேலாம் வெச்சுடுவேன், கண்லே படாதபடி."

"சார் ஒங்க அனுபவத்துலே மறக்க முடியாத நிகழ்ச்சி ஒண்ணு இருந்தா அதெப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்."

"ஒரு தடவே 'இந்த ·பேனெல்லாம் ஒரே அழுக்கா இருக்கே. அதெக் கொஞ்சம் க்ளீன் பண்ணுங்கொளேன்னா'ன்னு என் ஒய்·ப் சொன்னா. அப்போ எங்கிட்டே ஒயரமான ஸ்டூல் இல்லே. அதுனாலே ஒரு ஸ்டீல் கா·பி டேபிளெப் போட்டு அதுமேலே ஒரு சின்ன ஸ்டூலெப் போட்டு ஏறி ·பேனைக் க்ளீன் பண்ண ஆரம்பிச்சேன். அப்போ தோணித்து. ·பேனைக் கழட்டி பெயின்ட் பண்ணிட்டா என்னன்னு.

·பேன் ப்ளேடைக் கழட்டி ஒய்·ப் கிட்டே கொடுத்தேன். அதே வாங்கி கீழே வெச்சுட்டு அவ சாப்படப் போனா. ·பேன மாட்டி இருந்த கொக்கிலேருந்து கழட்டி அத எடது கைலே என் தலைக்கு கொஞ்சம் மேலே புடிச்சிண்டு கீழ எறங்கினேன். அப்போ ரெண்டு ஸ்டூல் போட்டதை மறந்து காலே நேற கீழெய் வெய்க்கப் பாத்தேன். தரெயைக் காணும். அடுத்த செகண்ட் மேல போட்டு இருந்த ஸ்டூல் எதிர் பக்கம் பறக்க நான் தரெயிலே விழ ·பேன் என் தலை மேல விழ வலிலே 'அம்மா'ந்னு கத்தினேன். பக்கத்து ரூம்லே சாப்டுண்டு இருந்த என் மனைவி, 'ஐயோ, என்னான்னா ஆச்சு'ந்னு கேட்டுண்டு ஓடி வந்தா. மெதுவா ஏந்துருந்தேன்.

ஆனா பாருங்க அப்பொவும் ·பேன் என் கைலே.

என் அதிஷ்டம் பாருங்க. அந்த பேன் ஒரு சின்னியோ, ஐ.இ.டபிள்யுவோ, உஷாவோ இல்லே. இருந்திருந்தா அதனோட அடிப் பக்கத்த்லே கூரா இருக்கற நட்டு என் மடைக்குள்ளே போயி அன்னிக்கு எனக்கு கபால மோக்ஷம் ஆயிருக்கும். கொஞ்சம் வலியோட போச்சு. நான் ஆரம்பிச்ச வேலைய பாதிலே உடலே. அந்த ·பேனே டைனிங்க் டேபிள் மேல படுக்க வெச்சு சுத்த வுட்டு பெயின்ட் பண்ணேன். அது மட்டுமில்லே. ஒரு சின்ன ப்ரஷ்ஷாலே பேன் மோடர் ஒடிண்டு இருக்கச்சே நீல பெயின்டால கோடும் போட்டு உட்டேன்."

"ரொம்பவே ஸ்வாரஸ்யமா இருக்கு சார், நீங்க சிரமத்தெப் பாக்காமே சொன்னதெல்லாம். நாங்க வரோம்" என்று கை கூப்பி வணங்கி விட்டு எங்கள் வீட்டை நோக்கி நடந்தோம்.

போகும் வழியில் "உமாபதி சார், நான் இன்னிக்கி புதுசா நாலு விஷயம் கத்து கிட்டேன்," என்றேன்.

மெய்யாலுமா? என்ன கத்துகிட்டீங்க?"

"ஒண்ணு. நம்ம கைலே இருக்கர டூல்ஸை இரவல் கொடுக்கக் கூடாது.

ரெண்டு. வெளி ஆளுங்க வந்து வேலை செஞ்சா பர்·பெக்ஷன் எதிர்பாக்கக் கூடாது.

மூணு. சாமாங்கள் கெட்டுப் போறத்துக்கு முன்னே கடேலே போட்டுட்டு புது மாடல்கள வாங்கிடணும்.

நாலு. ஒடஞ்ச சாமாங்கள் ஒரு நாளைக்கு உபயோகப் படும்னு சேத்து வெச்சுக்கக் கூடாது.”

"ஆமாம். நல்ல பாடம்தான் கத்து கிட்டோம் இல்லே?"

நடராஜன்

Your Feedback


Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required




Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday