பனிச் சரிவில்
பார்வமணி
அன்புக் குழைந்தைகளே,
நம் முன்னோர்கள் சில பழக்க வழக்கங்களை எற்ப்படுத்தி வைத்துள்ளனர். இதைப் பலபேர் கடைப்பிடிப்பதில்லை. கடைப்பிடிப்பதால் நன்மையே தவிர, தீமையில்லை.
அப்படி ஏற்ப்பட்ட வழக்கத்தில் ஒன்று
1. வெளியில் போகும் பொழுது போய் வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு போகணும். கதவைச் சாத்திவிட்டுப் போகணும்.
இதைக் கடைப்பிடித்த ஒரு சிறுவனின வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுக்குக் கூறுகிறேன்.
பெரு நாட்டில் மிக உயரமான் மலையில் (Andean Glacier) அண்டியன் என்று அழைக்கைப்பட்ட க்லேஸியர் (சறுக்குப் பனிக்கட்டி ஆறு) உண்டு. அந்த மலையின் அடிவாரத்தில் பள்ளத்தாக்கில் ஒரு கிராமம். ஜனவரி 10, 1962ஆம் நாள் சாயந்திரம் 6-13 மணிக்கு பெரிய இடியோசை போன்ற சப்தம் கேட்டது. அண்டியன் க்லேஸியர் தகர்ந்து பெரிய பனிச்சரிவை (Avalanche) ஏற்படுத்தி விட்டிருந்தது. கிராமத்து ஜனங்கள். உயிர் தப்ப உடைமைகளை விட்டுவிட்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். அவலான்சியின் வேகம் மணிக்கு 96 கி. மீ. 12 வயது சிறுவன் ஜோ ஹில்ரியோ வாஸ்க்யெசும் அவன் மாமாவும் வீட்டை விட்டு வெளியே ஒடினர். அப்பொழுது, ஜோ கதவை மூடாமல் வந்து விட்டோமே என்று திரும்பிப் போய்க் கதவை மூடினான் (அவன் மாமா வெளியில் செல்லும் பொழுது கதவை மூடிவிட்டுத்தான் போக வேண்டும் என்று சொல்வாராம்). அதற்குள் அவலான்சி அந்தக் கதவையும் சிறுவனையும் விட்டு விட்டு வீட்டைப் பாலாடைக் கட்டியைச் சீவுவது போல் அடித்துக்கொண்டு போய்விட்டது.
மாமாவின் அறிவுறையைக் கடைப்பிடித்தது இவன் உயிரைக் கப்பாற்றிற்று.
"I was here when the avalanche hit," says 12 year-old Jorge Hilario Vasquez of Huarascucbo. Hearing the roar of the approaching oblivion, Jorge and his Uncle CarJos ran out of the house. "But Uncle Carlos always tells me to shut the door when I go out," Jorge recalls, 'I remembered and hurried back." The avalanche sliced the house like cheese, but left Jorge and the door unharmed.
ஆகையால் குழைந்தகளே, பெரியவர்கள் ஏற்படுத்திய பழக்க வழக்கங்களை அலட்சியம் செய்யாதீர்கள். அவை நம் நன்மைக்குத்தான்.
உயிர் தப்பிய சிறுவன் ஜோவின் படத்தை இணைத்துள்ளேன்.
குறிப்பு:-மூன்று மிலியன் டன் தகர்க்கப்பட்ட பனிக்கட்டி 22,205 அடி உயரத்திலிருந்து 7 நிமிடத்திற்குள் அடிவாரத்திற்கு ஓடி 3000 பெருவியர்களை பலி வாங்கி விட்டது (National Geographic issue June 1962).
பார்வமணி
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














