மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
என். சுரேஷ்
|
குட்டிச் சிறுகதைமுனிவர் ஒருவர் தான் உண்ணும்போதெல்லாம் பக்கத்திலேயே ஒரு கின்ணம் நிறைய தண்ணீரும் அதனருகில் ஒரு ஊசியையும் வைத்துக்கொண்டே உணவை சாப்பிட்டு வந்தார்.என்றாவது ஒரு நாள் முனிவர் அந்த ஊசியைத் தின்று கிண்ணத்திலிருக்கும் தண்ணீரை விழுங்கி விடுவார் என்று எதிர்பார்த்தான் புதிதாக சேர்ந்த சீடன் ஒருவன். ஆனாலது நடக்கவே இல்லை. நாட்கள் வாரங்கள், மாதங்கள் பல கடந்தன. சஸ்பென்ஸை அடக்க முடியவில்லை சிஷ்யனால். ஒரு நாள் முனிவரிடமே அந்த ரகசியத்தை கேட்டுவிட்டான். முனிவர் சொன்னார்: "நமக்கு கிடைக்கும் உணவு வெறும் திடப்பொருளல்ல. அது பிரசாதம். பலர் உழைப்பின் பலன். ஒருவேளை நான் உண்ணும்போது உணவிலிருந்து ஒரே ஒரு பருக்கை தவறி விழுந்தால் கூட, அதை இந்த ஊசியால் எடுத்து அதை இந்த தண்ணீரில் கழுவி உண்ணலாம் என்பதே என் நோக்கம். ஆனால் இதுவரை அந்த தேவை ஏற்படவில்லை. இந்த பிரசாதத்தை இதுவரை வீனடிக்கவுமில்லை" அன்பு குழந்தைகளே, இந்த கதை நமக்கு என்ன பாடம் தெரிவிக்கிறது என்று மின்னஞ்சல் இடுங்கள். நல்ல இரண்டு பதில்களுக்கு அங்கிள் பரிசுகளை அனுப்புகிறேன்.. பிறகென்ன... உடனே பதிலிடுங்க்ள்.... சந்தோஷமுடன் உங்கள் இணைய அங்கிள் என் சுரேஷ்
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |