மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

மகேஷும் கிரிக்கெட்டும்

என். சுரேஷ்

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management
Tamil short story about boys playing cricket

குட்டிச் சிறுகதை

ஆறு சிறுவர்கள் சேர்ந்து கோடை விடுமுறை நாளொன்றில் மதியம் இரண்டு மணிக்கு மேல் கிரிக்கெட் விளளயாட ஆரம்பித்தார்கள். விளையாட்டினிடையே, மகேஷ் என்ற ஒருவன் வீசியெறிந்த பந்தை ராஜகோபாலன் என்ற இன்னொரு சிறுவன் ஓங்கி அடிக்க அது போய் எதிர் வீட்டு கண்ணாடியை உடைத்தெறிந்தது.

உடனே, எல்லா சிறுவர்களும் பயத்தால் ஓடிவிட்டனர்.. ஆனால் மகேஷ் மட்டும் தைரியமாக அந்த வீட்டை நோக்கி நடந்து சென்றான். அழைப்பு மணி அடித்ததும் அந்த வீட்டின் மூத்தவர் கதவைத் திறந்து வெளியே வந்து " என்ன தம்பி... இந்த ஜன்னல் கண்ணாடியெல்லாம் இப்படி உடைந்து கிடக்கிறதே... பாத்து, பாத்து! உன்னோடெ காலிலே குத்தப்போகுது" என்று சொல்லிக்கொண்டே மகேஷை அந்த அங்கிள் அவரது அன்புக் கரங்களால் தூக்கியெடுத்து வரவேற்பு அறையில் ஒரு சோபாவில் அமரச்செய்து ஓடிப்போய் ஐஸ் வாட்டர் எடுத்து வந்து " தம்பி இதை குடி" என்று அன்புடன் மகேஷிடம் அமர்ந்தார்.

"இவ்வளவு அன்பான இந்த அங்கிள் வீட்டு கண்ணாடியை நான் உடைத்தேனே" - என்ற கவலையில் மகேஷ் தன்னை அறியாமல் அழ ஆரம்பித்தான்.

"அங்கிள், உங்கள் வீட்டு கண்ணாடியை நான் தான் உடைத்தேன், சாரி, அங்கிள் என்று எழுத்து கூட்டி அழுதுச் சொன்னான் மகேஷ்.

என்ன நடந்தது என்று அந்த அங்கிள் விசாரித்த போது.. கிரிக்கெட் மட்டையால் பந்தை அடித்தது ராஜகோபாலன் தான் என்றும், ஆனால் கண்ணாடி உடையக்கண்டு அவனும் மற்றவர்களும் ஓடி விட்டார்கள் என்றும் புரியவந்தது.

தான் சரியாக பந்தை எரியாததால் தான், தனது நண்பன் ராஜகோபாலன் அப்படி வேகமாக பந்தை அடிக்க வேண்டின நிர்பந்தம் வந்தது என்ற குற்ற உணர்வின் தாக்கத்தால் மகேஷ தன்னை பார்க்க வந்துள்ளான் என்று அந்த அங்கிள் புரிந்து கொண்டார்.

" எங்க அப்பாவிற்கு சம்பளம் கிடைத்ததும் இந்த கண்ணாடி மாற்றப்படுவதற்கான பணத்தை கொண்டு வந்து தருகிறேன், அங்கிள்.. என் மீது கோபப்படாதீர்கள், தயவாக மன்னியுங்கள்" என்று மீண்டும் கவலையாக சொன்னான், மகேஷ்.

"எல்லோரும் ஓடி விட்டார்களே... நீ மட்டும் ஏன் வந்தாய். நான் உன்னை திட்டுவேன் என்ற பயம் உனக்கு வரவைல்லையா" என்ற கேள்விக்கு... " அங்கிள்.. தவறு செய்த நான் உங்களின் எந்த தண்டனை வாங்கவும் தயாராகத் தான் வந்தேன், என்று மகேஷ் சாந்தமாக பதில் சொன்னான்,

"தம்பி, மகேஷ்...நான்காவது வகுப்பில் படிக்கும் இந்த உன் சிறு வயதிலேயே இவ்வளவு உண்மையுள்ளவனாகவும், மற்றாவர்களுக்காக கவலைப்படுபவனாகும் இருக்கும் உன்னைக் கண்டு நான் மகிழ்கிறேன், பெருமைப்படுகிறேன்" என்று பாராட்டின அங்கிள், "மகேஷ், நான் உனக்கு எந்த தண்டனையும் வழங்கமுடியாது. இந்த கண்ணாடிக்கான செலவை நானே பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்லி மகேஷின் தோள்களை செல்லமாய் தட்டி மீண்டும் பாராட்டினார்.

ஒரு முத்தத்தையும் ஒரு சாக்லைட்டையும் கொடுத்து அன்போடு அவனின் வீட்டுக்கு அனுப்பி விட்டு " டா டா " என்று சொல்லி.. உடைந்து கிடந்த கண்ணாடித் துண்டுகளை எடுத்து தறையை சுத்தப்படுத்தத் துவங்கினார், அந்த அன்பு அங்கிள்.

Books of N. Suresh
Blog of N. Suresh

YOUR FEEDBACK FOR THIS STORY

Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Your Feedback for this story
editor@mazhalaigal.com