மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
ஆகிரா
|
சின்னச்சின்ன நாய்க்குட்டி
சிங்கார நாய்க்குட்டி வண்ண வண்ண நாய்க்குட்டி வாலை ஆட்டும் நாய்க்குட்டி பொன்னைப் போன்ற வண்ணமும் பொலிவுமிக்க வதனமும் மின்னல்போலத் துள்ளிடும் மேனி கொண்ட நாய்க்குட்டி காலைக்காலை சுற்றிவந்து பாலைப்பாலைக் கேட்டிடும் பாலைத் தட்டில் ஊற்றிவைக்க வாலையாட்டிக் குடித்திடும் காலைமாலை வேளையில் காற்று வாங்கச்சென்றிடும் காற்றுவாங்கி வந்தபின்னர் சோற்றைக் கேட்டு நின்றிடும் நல்லநல்ல நாய்க்குட்டி நயமுடைய நாய்க்குட்டி நாக்கை நாக்கை நீட்டிடும் மூக்கைமூக்கை நக்கிடும் கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொஞ்சுமெந்தன் நாய்க்குட்டி என்னுடைய சித்தப்பா எனக்குத் தந்த நாய்க்குட்டி |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |