மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
இணையப் பாட்டி
|
பாரதிதாசன்
உங்கள் யாவருக்கும் மஹா கவி பாரதியாரைப் பற்றித் தெரிந்திருக்கும், அவர் கவிதைகளிலே தேன் ஊறும். அவர் கவிதைகளின் மேலே அன்பு கொண்டு அவர் கவிதைகளைப் படித்து இன்பம் அடைந்து தன்னை மறந்த ஒருவர், அவர் மேல் இருக்கும் பக்தியினால் தன் பெயரையே மாற்றி அமைத்துக்கொண்டு விட்டார். யார்? தெரிந்ததா? அவர்தான் திரு பாரதிதாசன் அவர்கள். அவர் தம் கவிதைகளிலே பல புதுமைக் கருத்துக்களைப் புகுத்தி நல்ல புகழும் பெற்றார். புரட்ட்சி மிகக் கருத்துக்களுடன் பல கவிதைகள் வெளிவந்தன. ஆகையால் அவரைப் புரட்சிக் கவிஞ்ர் என்று எல்லோரும் அழைத்தனர். இவர் தாய், தந்தை இட்ட பெயர் கனக சுப்பரத்னம், ஆனால் அவர் பாரதியார் மேல் அளவில்லா அன்பு கொண்டு தன் பெயரை "பாரதி தாசன்" என்று ஆக்கிக் கொண்டார், இவர் தந்தையின் பெயர் திரு கனக சபை, தாயின் பெயர் திருமதி இலக்குமி. இவர்கள் புதுச்சேரியில் இருந்தனர், அப்போது ஸ்ரீ சுப்பிரமண்ய பாரதியார் புதுச்சேரியில் இருந்தார். அந்தச் சமயம் இவருக்கு பாரதியாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. இவர் முதலில் பாடிய பாடல், "எங்கெங்கு காணிலும் சக்தியடா". இந்தப் பாட்டைக் கேட்டுத் திரு பாரதியும் பரவசமடைந்தார் .இவர் தமிழ் ஆசிரியராகவும், பத்திரிக்கை ஆசிரியராகவும் பணி புரிந்தார், திரு பாரதிதாசனின் கவிதைகள் நான்கு தொகுப்புக்களைக் கொண்டவை. "இருண்ட வீடு", "குடும்ப விளக்கு", "அழகின் சிரிப்பு" என்பவையே அவை. இவை மிகவும் அருமையான படைப்புகள். இவர் பல நாடகங்களும் எழுதியுள்ளார், இவரது ஒரு பாடலைப் பார்க்கலாமே.
பிரிவிலை எங்கும் பேதமிலை இந்தக்கவிதையின் சாராம்சம்: இந்த உலகத்தில் இருக்கும் மக்களைப் பார். எப்படிப் பரவி எல்லோரும் உடன் பிற்ந்தோர்போல் வாழ்கிறார்கள். இவர்கள் உன்னுடன் ஒரே குலமாய் ஒன்றி வாழ வந்திருக்கும் ஒரு பெருங்கடல். இவற்றில் மகிழ்ந்து அறிவை விரிவாக்கு ஆழமாக்கு, எல்லோரையும் அன்புடன் அணை, ஒன்றாக இணை, அவர்களுடன் கலந்து விடு, "நான் மானிடச் சமுத்திரம். இங்கு வேற்றுமையும் இல்லை, பிரிவும் இல்லை" என்று முழக்கிடு. எத்தனை அழ்கான கவிதை! குழந்தைகளே, அன்பே பரப்புவோம், அனைவரையும் விசால நோக்கோடு அணைப்போம். அன்புடன் அம்மம்மா . |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |