தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- தமிழ் மொழி
வெற்றிவளவன்
தமிழ் மொழி
தமிழர் தம் தாய் மொழி;தரணி புகழ் தமிழ் மொழி!
செந்தமிழ் நாட்டுச் சீலமொழி;
செழிப்புடனே வளர்ந்த மொழி!
பாண்டிய நாட்டின் தலை மொழி;
சங்கம் வைத்துத் தழைத்த மொழி!
புலவர் பலரைத் தந்த மொழி;
புரவலர் கேட்டுப் புகழ்ந்த மொழி!
பாரதியாரின் பாட்டு மொழி;
பாரத விடுதலை கீத மொழி!
வள்ளுவரால் சிறந்த மொழி;
திருக்குறளும் பிறந்த மொழி!
பஞ்ச காப்பியம் வந்த மொழி;
அணியாய் அவற்றை அணிந்த மொழி!
அகிலம் போற்றும் அன்பு மொழி;
ஆன்றோர் புகழும் அறிவு மொழி!
எல்லாப் புகழும் பெற்ற மொழி;
என்றும் வாழும் இனிய மொழி!
உலகுக் கெல்லாம் உயர் மொழி;
தமிழே எங்கள் உயிர் மொழி!
oOo
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||
| Designed and maintained by AKR Consultants | |||||||













