கடவுளிடம் நான் கேட்டது........
பழக்கம் அதை மாற்று என்றேன்! இறைவன்
பாவம் (அது) என்னால் ஆகாதென்றான்!!
அழுக்கு அது என்றுணர்ந்தால், மனிதா
அறவே நீ விலக்கு என்றான்!!
ஊனமுள்ளதென் குழந்தை அருள்வாய்! அதன்
உறுப்பழிவு நீக்கு என்றேன்!! இறைவன்
ஆனதன் உடலும் நிலையல்ல; அறிவாய்
அதன் ஆவி பரிசுத்தம் என்றான்!!
பொறுமை எனக்கருள்வாய் என்றேன்!!இறைவன்
பொறுமையது வேதனையின் புரிந்து கொள்ள வேண்டுமென்றான்!!
அருமை அது நீ அறிந்திடவும், அனுபவித்துப் பாரேன் என்றான்!!
மகிழ்ச்சி எனக்கருள்வாய் என்றேன்!! இறைவன்
மனமுவந்தே, அருளுவது எந்தன் பணி
அகமகிழ்ந்து அனுபவிப்பது உன் உரிமையென்றான்!!
வேதனையின் விலக்களிக்க விரும்பிடுவாய் இறைவா என்றேன்!
விழைந்தென்னை அடைந்திடவும், வேதனைதான் படிகள் என்றான்!!
ஆன்மாவும் வளர, எந்தன் ஆண்டவனே உதவு என்றேன்!!
வளர்ப்பது உந்தன் பணி! உதவ வாய்ப்பெனக்குத் தருவாயென்றான்!!
விருப்பத்தின் அருள்வாய், மனம் விழைந்ததும் எனக்கே, என்றேன்!! இறைவன்
வாழ்வது அருள்வேன் உனக்கு! வளம் பெற உயர்வாய் என்றான்!!
அன்புடன் பிறரை ஆளும் அருளது வழங்கு என்றேன்!! இறைவன்
இன்புற வழியறிந்தாய்! இனியுனக்கு வேதனையில்லை!!
நண்பனாய்ப் பிறர்க்கு உழைக்க நாடுவது தானே வரும்!!
மன்பதை போற்ற நாளும் மகிழ்ந்திங்கு வாழ்கவென்றான்!!
இன்றைய நாள் உங்களுடையது!! வேண்டாமென ஒதுக்காதீர்!!
இறைவனை அடிக்கடி அழையுங்கள்!! கூப்பிட்ட குரலுக்கு வரவில்லையென்றால் மறுமுறையும் முயற்சி செய்யுங்கள்!
இன்றைய பிரச்சனைகள் நிறைந்த உலகில், உங்களைவிட அதிகமாக உதவி தேவையுள்ள உங்கள் சகோதர சகோதரிகளுக்கு தற்சமயம், அவன் உதவிக் கொண்டிருக்கலாம்!! பொறுமையுடன் அவர்களும் நலம் பெற பிரார்த்தனைகள் செய்யுங்கள்! பிரார்த்தனைகளால் ஆகாதது எதுவுமில்லை!! இறைவன் விரைவில் உங்களைத் தேடி ஓடி வருவான்!!
தமிழாக்கம் - செபரா