கந்தனா? கண்ணனா?
இசை நிகழ்ச்சியில் குழந்தைகள் பாடவும் உடன் ஆடவும் விழைந்தால், இதனைப் பாடலாம், ஆடலாம். நல்ல பாடலாசிரியர் இதற்குத் தக்க ராகம் அமைக்கலாம். அனுபல்லவியினை இரு முறை பாடலாம். கமகங்கள்/நிரவல்கள், அவரவர் கற்பனா சக்தியினைப் பொறுத்தது.
கனவில் வந்தவன், கந்தனா? கண்ணனா?
கனவில் வந்த குழந்தை, கந்தனா அல்லது கண்ணனா எனத் தெளியாத ஒரு தாயின் மனம், தன் கனவில் கண்ட குழந்தையின் குணாதிசியங்களைக் கருத்தில் கொண்டு, இது கந்தனென்றும், கண்ணனென்றும் மாற்றி மாற்றிப் பாடலாகப் பாடுகிறது. முடிவில் கந்தனாயிருந்தால் என்ன, கண்ணனாயிருந்தால் என்ன, அது இறை
வடிவம்; தனது கனவில் வந்த புண்ணியத்தைப் பாடிப் பாடி மகிழ்கிறது. நனவில் என்று அந்தப் புண்ணியம் வாய்க்கும்? என்ற கேள்வியுடன் முடிகிறது. இதன் அடிப்படையில் இத்தொகுப்பு அமைகிறது.
இப்பாடல் நாட்டிய வடிவாக மாற்ற ஏற்றபடி அமைக்கப்பட்டிருக்கிறது.
கண்ணனாக ஒரு குழந்தையும், கந்தனாக ஒரு குழந்தையும் வேடமிட, கனவு காணும் தாயாக (ஒருவரோ அல்லது இருவரோ) நாட்டியமாக நல்ல பாவங்கள் காட்டி ஆடுவதாக, என்னால் மனக்கண்ணில் காண முடிகிறது.
கேளுங்கள்