-
மழை வருது மழை வருது - Rain
- ஜெயஸ்ரீ ஷங்கர்
ஜன்னல் வழியே வேப்பமரம்
தான் உயிரோடு இருப்பதை
காற்றில் தூது அனுப்பி சொல்கிறது.
சிலு சிலு காற்று முகத்தில் பட்டு
எனக்கும் அதுக்கும் உள்ள உறவை
செல்ல வாசனையாய் சொல்ல
இழுத்து சுவாசித்து மரத்தை
கட்டி அணைக்கிறேன்.
அதன் ஸ்பரிசம் தந்த புத்துணர்வு
குயிலே நீ தூங்காதே
அங்கு நம் தோழி
கணினியோடு நமை மறந்து
அவள் காது மட்டும்
உன் குரலுக்குத் தான்
விழித்திருக்கிறது!
குயிலும் உடனே கு கூ குகூ!
மெல்ல மெல்ல
அதன் அன்பு அறைகூவல்
என் மனதுள் எழுந்தாட
கணினி முகத்தை மொய்த்த கண்கள்
ஜன்னல் வழியே வெளியோட
பார்வை பட்ட இடம் எல்லாம் பசுமை
மனித வாசம் புரியாத அறை இது
இயற்க்கை வாசம் வீசுது
என் நிலை கண்ட வானம் கூட
மேகம் கூடி அலையுது வண்ண மயிலாய்
மழை வருது மழை வருது
என் எண்ணம் ஆட சடசட சத்தம் கேட்குதே
இடியும் மின்னலும் கூடியே
மனசுக்குள்ளே மோக தாளம் போடுதே
கோடையை விரட்டிப் பார்க்க
ஆனந்த மழை அடிக்கவே
புதிதாய் ஈரமண் வாடை
நாசியில் துளைக்கவே
உலகத்தையே உறிஞ்சும் ஏக்கம்
கண்மூடி உள்ளிழுக்க
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என் இறைவா
அவர் வரிகள் அற்புதமாய் மெய் சிலிர்க்கும் நேரம்
அந்தி சாய்ந்து ஓயும் நேரம்
வானின் நிறமும் மாறும் நேரம்
மழையினூடே மனதினூடே
அருவி வார்த்தை கொட்டுதே
மழைபோல் வீணாகாது
இங்கே ஒன்று சேர்ந்ததே!
ஜெயஸ்ரீ ஷங்கர்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














