Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all


உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்




Tamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

Easiest and Best

மழலைகள்






Bookmark this page
தையும் மெய்யும்.. - Hope
ஜெயஸ்ரீ ஷங்கர்





             

வனிதையவள் நெஞ்சம் பாடும் கல்யாணராகம்
தை பிறந்தால் வழி பிறக்கும் தாரகம் கேட்டுக் கேட்டே,
ஒவ்வொரு தையும் ஓசைப்படாமல் அவளைக் கடக்க
தேவதையாய் இருந்தவள் தேய் நிலவாய் ஆனபோதும்
பெற்றவரின் ஆதங்கம் அனைத்தும் ஆசிர்வாதமாய்.
இந்த தையிலாவது வழி பிறக்குமா?
வானம் பார்த்த பூமி போல் காத்திருந்தாள்
கல்யாணமாலைக்காக!

லட்சியமாய் சொந்த மனையில் வீடொன்று கனாக்கண்டு
பூமி பூஜை போட்டு கையோடு கடனுக்கும் பூஜை போட்டு
வாஸ்துவும் பஞ்சாங்கமும் பக்கவாத்தியங்களாய்
கல்லும் மண்ணும் சிமெண்டும் செங்கல்லும் மூச்சாக பேச்சாக
காணும்போதே கனவுபோல் எழுந்து நின்றது கட்டிடமாய்
மாதங்கள் சென்றாலும் காத்திருந்தோம் புதுமனை புக
புண்ணியகால நன்னாளாம் தைத் திருநாள் வரவிற்காய்.

வருஷமெல்லாம் மண்ணெடுத்து குழைத்து மிதித்து பானை செய்து
அடுக்கி வெச்சு அழகு பார்த்தேன் கண்ணம்மா
விற்றிடுவேன் பானை எல்லாம் பொன்னம்மா,
பொங்கல் வரவுக்காக காத்திருக்கேன் செல்லம்மா,
நம் விதியை மாற்றி வாழ வைப்பாள் தையம்மா.

படிப்பு முடித்து பட்டம் பெற்று
வேலைக்காக அலைந்து திரிந்து
சோர்ந்து போன மனசுக்குள்ளே - உத்தியோக ஆசை
உருமாறிப்போனபோது வந்தது ஆசை,
இந்தத் தை பிறந்தால் வழி பிறக்கும்.
ஜோசியரின் வாக்குப் படி
சொந்தமாய் தொழில் புரிந்தால்? எந்தன்
நினைப்பு பிழைப்பைக் கெடுக்காமல், அந்த நினைப்பே
என் முதலாளி ஆசைக்கும் முகவரி தந்தது இன்று
அதன் ஆரம்ப பூஜைக்கு தை பிறக்கக் காத்து நிற்குது.

சொத்துக்களை கைமாற்றி திரைப்படமாய் அதையும் மாற்றி
பெயர்போன நாயகனுக்கு பெயர் வாங்கித் தந்திடவே
"கைபேசியில் நீ நேசி" தரமான திரைப் படத்தை
பூஜை போட்டு ஆரம்பித்து தடங்கல் யாவும் தகர்த்து
சுருண்டு தகரப்பெட்டிக்குள்ளே காத்திருக்குது
பொங்கலுக்கு புது ரிலீசாய்
தலை எழுத்தை மாற்றிடுமோ
தை மகளின் தனிக் கருணை!

மாதமும் பிறந்தது மகிழ்ச்சியும் பொங்குது
மந்திரமாய் மனங்கள் யாவும் தையினை நம்புது
கால காலமாய் மனசுக்குள்ளே விதைத்து விட்ட வித்து இது
வழி வழியாய் வந்தும் வழக்காய் மனம் நம்புது
ஒவ்வொரு மனசின் ஆசைக்கும் பிரார்த்தனைக்கும் பஞ்சமில்லை,
நேரத்தையே மாற்றித் தரும் தைக்கு தோல்வி தர நெஞ்சமில்லை.

ஜெயஸ்ரீ ஷங்கர்

மழலைகள் ஆசிரியர் குழு



             




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants