-
ஒன்றை விட்டொன்று பற்றேல்
- நடராஜன் கல்பட்டு
பட் டாடை தனையுடுத்தி
நின்றிருந்தாள் நிலா மடந்தை
தன் எழில் பொங்க.
மங்கை முகத்து மரு தன்னை
முயல் எனக்கொண்டதோ
என்றும் பாய்ந்திடும் கழுகெனக்
கவ்வியதே கார் மேகம்.
கல் நெஞ்சக் கருங் குரங்கே
மக்கள் மனம் குளிர்ந்திடவே
மழை தருதல் உன் வேலை
செய்துவிடு அவ்வேலை சீராக என்நாளும்
விட்டொழிப்பாய் வெண்ணிலவு பற்றுதலை இக்கணமே.
நல்வழி நடத்தல் மறந்து
முள் வழி நடப்பதேனோ
செய்துவிடு பிறர்க்குதவி
சென்றடைவாய் நற்கதியே.
நடராஜன் கல்பட்டு
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














