Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all


உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்




Tamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

Easiest and Best

மழலைகள்






Bookmark this page
சொந்தக்கார்
ஜெயஸ்ரீ ஷங்கர்



சொந்தக்காரர்
சொந்தக்காரில் வந்தாலும் வந்தார்
சங்கரா நீயும் ஒரு கார் வாங்கிடு...
தூபம் கேட்டதிலிருந்து மனசுபூதம்
சாமியாட ஆரம்பிச்சது!
எப்ப வாங்கலாம்? அதை
எப்படி வாங்கலாம்? எதை வாங்கலாம்?
செய்தித்தாளில் செய்தியைத் தவிர
கார் விளம்பரம் தான்
கண்ணில் பட்டது
கம்பெனிக்கு ஒன்றாய்
அதுவா? இதுவா?
இதே பேச்சு தான்
உள்ளும் வெளியும்
நினைப்பு பொழப்பக் கெடுக்கும்ன்னு
நமக்குத் தான்
சொன்னாற் போல
எப்டியாவது கார் வரணும்
குறி சரியாய் காரில் விழ
காயத்ரி மந்திரம் சொல்வது போல்
நித்தம் பத்து வேளையும்
கார் வேணும் மந்திரம்
மந்திரத்திற்குக் கட்டுப்பட்டு
ஒரு நாள் தந்திரமாய்
டாட்டா இண்டிகாவும்
அலங்காரமாய் நுழைய
புதுப்பெண்ணை வரவேற்கும் விதமாய்
ஆரத்தி எடுத்து திருஷ்டி சுற்றிப் போட்டு
ஸ்வீட் எடு கொண்டாடு என
தெருவே இண்டிகாவை அழகு பார்த்தது
மனம் போல் விமர்சனம் செவி கேட்டது
முதல் நாள் காரில் பணிக்குச் செல்ல
முகத்தில் பூரிப்பு மனசுக்குள் தடக் தடக்
வயிற்றில் பட்டாம்பூச்சி பட பட பட பட
கால்மணியில் போக வேண்டிய இடம்
அரைமணி நேரமாகியும் வந்து சேரவில்லை
எப்படியோ ஒரு வழியா
குண்டு குழி ரோடு, அங்கங்கே சிகப்பு விளக்கு
ஆட்டோகாரரின் அட்டூழியம்
அனைத்தையும் தாண்டி
என் இருக்கையைத் தேடி
அமர்ந்தேன் வேலையில்
காரையே மறந்தே போனேன்
எப்பவும் போல் இரவும் நெருங்க
உலாபேசி அழைத்து அழைத்து
வீட்டிலிருந்து குசலம்
அடுத்த கட்டப் போருக்குக் கிளம்புவதாய்
இருட்டுக்குள் ஊர்திகளின் போராட்டம்
வண்ண விளக்குகளும் எதிர் விளக்குகளும்
சரமாரியாய் எதிர்த்து வர
திண்டாடித் திண்டாடி
வீடு வந்து சேர்ந்தால் என்றுமில்லாது
தெருமுனை வரை
வந்து கவலைக் கண்களோடு
ஏகப்பட்ட பயத்தோடும்
நாளையிலிருந்து எப்பவும் போல
பைக்லயே போய்டுங்கோ
என் வயிற்றுப்புளி கரைத்தல்
எனக்குத் தானே தெரியும்!
அதெப்படி இந்த விஷயத்தில்
இருவர் மனமும் ஒண்ணா!
ஆசைப்பட்டு வாங்கிய கார்....
ஸெட்டுக்குள்ளே அடைந்தது!

ஜெயஸ்ரீ ஷங்கர்..

மழலைகள் ஆசிரியர் குழு



             




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants