Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  என்னைப் பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
காயத்ரி





வென்றிடத்தான் வாழ்க்கை!

எவரெஸ்டைக்கண்டு ஏங்கியது ஒரு காலம்.
இன்றோ அதன் மேல் படபடக்கிறது வெற்றிக்கொடி!
தொட்டுவிடத்தான் சிகரங்கள். தொட்டு விடு!

ஓட்டப்பந்தயத்தில்தான் எத்தனை தடைகள்?
ஒருமுகப்பட்டால் அத்தனையும் தூள்.
தாண்டிடத்தான் தடைகள். தாண்டி விடு!

முட்களைக் கண்டு சுணங்கி விடாதே
முனைப்பாய் ரோஜாக்களை மட்டும் தேடு.
சூடுவதற்குத் தான் மலர்கள் சூடி விடு!

இன்னல்களை மீறி பீறிட்டு வரும்
இனிய இசைதான் வாழ்க்கை.
இசைப்பதற்காகத்தான் இசை. இசைத்து விடு!

அடிமைத் தளையில் சிக்கி சோர்ந்து விடாதே.
ஆர்ப்பரித்துஎழு அலை கடலாய்.
ஆளப்படுவதற்கே ராஜ்ஜியங்கள். ஆண்டு விடு!

வேதனைத் தழலில் சிக்கி சோர்ந்து விடாதே
வீறு கொண்டு எழுந்து பறி வெற்றிக் கனியை.
வென்றிடத்தான் வாழ்க்கை. வென்று விடு!

பாகம்பிரியாள்.

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button