அறுந்த பட்டம்
எனது சகோதரி
Seen in the above picture is my sister K.N.Saraswathi who wrote the below poem on Himility. She passed away on June 20, 2008 at 4-45 PM.
Natarajan
தெள்ளத் தெளிந்த நீல வானம்
தென்றல் வருடும் இள வேனிற் காலம்
ஆங்கே தோன்றியதோர் அழகிய பட்டம்.
கண்கவர் ஊதா அதன் வண்ணம்
மென்மை நீலம் பின்னணியில்
பிரகாச ஊதா முன்னணியில்.
என்னே அப்பட்டத்தின் ஒய்யாரம்
சென்றது மேலும் மேலும் உயரம்
தனக்கு நிகர் யாரே உளர்
பரந்த இந்த வான் வெளியில்
என்றுதான் எண்ணி இறுமாப்புற்றதோ
என்றே தோன்றும் பார்ப்போருக்கு.
எங்கிருந்தோ பாய்ந்தது மற்றோர் பட்டம்
இரத்தச் சிவப்பு அதன் வண்ணம்
நொடிப் பொழுதே ஆயிற்றதற்கு
ஒய்யாரப் பறவையை சாய்த்து வீழ்த்த
என்னே பரிதாபம் ஊதாப் பட்டம்
மளமளவென தலை சாய்ந்தது
தரையை நோக்கி.
ஆங்கோர் தோட்டத்தில் மரமொன்று
அதன் கிளைகளுக்கூடே
அமிழ்ந்ததே ஊதாப் பட்டம்
கூடியது உடனே சிறார்கள் கூட்டம்
போட்டியுடன்தான் அதனை எடுக்க
அத்துமீறி நுழைந்தனர் தோட்டம்
அவர் குறியோ அக்கிழிந்த பட்டம்.
சிறார்க்குக் கிடைத்ததோ
உரிமையாளரின் வாயினின்று
அடுக்கடுக்காய் வந்த வசைச் சொற்கள்
சிறார்கள் திரும்பினர் ஏமாற்றத்துடனே
இந்தக் காட்சியைக் கண்டு கொண்டிருந்த
என் மனத்துள்ளே
எழுந்தது ஓர் எண்ண அலை
இதிலும் ஓர் நீதி உண்டோ.
வான் உயரப் பறந்தாலும்
தான் உயர இருந்தாலும்
தன்னடக்கம் இருப்பின்
தரையில் சாய வேண்டாமே.
ஆசை அடக்காது அத்து மீறின்
வசை கேட்டே நோகுமே நம் மனம்.
நடராஜன்
Your Feedback
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||












