வாழ்க்கை
கவிஞர் முத்து. இராமமூர்த்தி
பூவுலகில் காயாகிக்கனித லுக்காய்!
தேக்கிடலே தேனடையில் தேனீ கூட
தேசத்தில் தினந்தோறும் திரிந்து வாழும்!
நீக்கமற உலகத்தில் நிறைந்தி ருந்து
நிறைவேற்ற சிற்றியிர்க்கும் நோக்க முண்டு!
ஆக்கமுற மனிதரென ஆண்ட வன்தன்
அரும்படைப்பின் நோக்கந்தான் அறிய என்ன?
மண்ணிதிலே மனிதரென மல்ர்ந்து விட்டோம்?
வாழ்க்கையிலே நோக்கமென ஓன்றில்லாது
எண்ணுகிற வழியெல்லாம் எளிதாய்ச் சென்று
இறுதியிலே இறப்பதுதான் இனிய வாழ்வா?
உண்ணுகிற உணவுக்கும் பஞ்சம் இல்லை
உடையாகப் பலவகைகள்! உறையும் வீடோ,
விண்ணகரின் ஒருவடிவம்; வீடுதேடி
விளங்குற வசதியெலாம் விளைக்கும் சொர்க்கம்!
கண்ணெனவே கருததோடு காசு சேர்த்து
கணந்தோறும் பணமொன்றே குறிக்கோளாக
நண்ணுகிற தேவையெலாம் நலமாய்ப் பெற்று
'நாளோட்டல்' உண்மையிலே வாழ்க்கை தானா?
மண்ணிதிலே நோய்நொடிகள் மாய்த்தல் இன்றி
மனைவிமக்கள் குடும்பத்தார் மகிழ்தல் வாழ்க்கை!
எண்ணிடலே குடும்பத்தின் அமைதி ஒன்றே
எந்நாளும் சிலருக்குக் குறிக்கோள் ஆகும்.
நாட்டினிலே யுயர்பதவி பெறுதல் ஒன்றே
நாடுகின்ற நொக்கமென நவில்வார் உண்டு!
கூட்டிடவே கல்வியினால் பெருமை யாவும்
கொள்ளபுகழ் படிப்பாரும் இங்கே காண்போம்
ஏட்டினிலே கற்றிட்ட இனிய கொள்கை
இதமாக எந்நாளும் ஏற்று வாழ்ந்து
பாட்டினிலே இசைபோலப் பாங்காய் நின்று
பாரினிலே தொண்டாற்றும் பலரும் உண்டு!
முக்தியொன்றே நோக்கமென முடிந்த கொள்கை
முனிவர்களாய் வாழ்ந்திடவே முனைவார் உண்டு!
பக்தியுடன் எந்நாளும் பகவானைத்தான
பாடித்தினம் துதித்திடுதல் பலரின் வாழ்வு!
சக்தியுடன் ஆன்மாவின் பயணப் பாதை
சங்கதியை ஆய்ந்தறிதல் சிலரின் நோக்கம்
சிக்கலினை அவிழ்த்திடலே தெளிந்த நோக்காய்
சிந்தையிலே கொண்டிங்கே செய்தால் என்ன?
- 'கவிதை உறவு' இதழ்
Your Feedback
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













