ஷட்பதி தோத்திரம்
புலவர் நீல. பகவன்
பாற்கடல் தனிலே பாம்பணை மீதிலே
நீரென நினைந்தே கானல் வெளியில்
உயிர்க்குலம் தழைக்க உதவிட எனக்கே
2. திவ்யதூனீ மகரந்தே பரிமள
உண்மை அறிவே ஆனந்தம்
3. ஸத்யபி பேதாபகமே நாத
நீயும் நானும் வேறாக
4. உத்த்ருதனை நகபிதனுஜ
இந்திர னுடனே பிறந்தவனாய்
5. மத்ஸ்யாதி பிரவதாரை ரவதார
அறப்பணி என்றே தொடர்வனவாய்
6. தாமோதர குணமத்திர சுந்தர
கல்யாண குணங்கள் யாவையுமே
சம்சாரக் கடலைக் கடைகின்ற
7. நாரயண கருணாமய சரணம்
நாரண கருணை மழைபொழிய
ஆதிசங்கரர் அருளிய ஷட்பதி தோத்திரம்
சமய விஷய ம்ருக த்ருஷணாம்!
பூத தயாம் விஸ்தாரய
தாரய ஸம்ஸார ஸாகரத:!
பள்ளி கொண்டருளும் பரந்தமா!
ஆர்க்குங் கடலாம் ஐம்புலன் அடங்கியே
அபயம் அளிப்பாய் அருளாளா!
போர்க்குணம் உளவென் புத்தீ மாற்றியே
புன்னகை புரியும் பூபாலா!
நேர்த்தி யானதாம் நினைவுகள் அளித்தே
நிம்மதி அருள்வாய் நாரணனே!
நித்தந் தேடி அலைந்தேதான்
நீரதைக் காணா நிலையினில் தளர்ந்தே
நிர்கதி அடையும் மனினம் போல்
(நிலைதலைந் தயரும் மானினம் போல்)
சீரிலா எந்தன் செயல்களை மாற்றியே
சிறப்பினைத் தருவாய் ஸ்ரீதரனே!
காரிரு ளாகும் கவலைகள் கலைந்திட
கதிரொளி ஆவாய் கேசவனே!
உளத்தினில் அன்பே பெருகிடவே
பயிர்க்குலம் வாழப் பயன்படு மழைபோல்
பக்குவம் அளிப்பாய் பரந்தாமா!
இயல்பதே உலகில் இறப்பும் பிறப்பும்
இருப்பினும் பிறவிக்கடல் கடக்க
உயர்வற உயர்நலம் உடையவ உன்னருள்
உள்ளொளி யாக உதவுகவே!
பரிபோக ஸச்சிதானந்தே!
ஸ்ரீபதி பாதார விந்தே பவபய
கேதச் சிதே வந்தே!!
உறுதிப் பொருளாம் ஸ்ரீபதியே
விண்ணகக் கங்கை விரிதேனை
வியன்மழை யாகப் பொழிமுகிலே
எண்ணற் கரிதாம் நறுமணத்தை
வழங்கும் கமலத் திருவடிகள்
கண்ணிற் கண்டால் இனியேது
கலக்கும் பிறவித் துன்பமதே!
தவா ஹம்ந மாமகீனிஸ்தவம்!
ஸாமுத் ரோஸிதரங்க கவசன
ஸமுத் ரோன(ந) தாரங்க!!
நிலைக்கும் பேதம் அகன்றாலும்
நீயே யுடையான் யானுடைமை
நித்தம் நிலைக்கும் உண்மையிதே
நீயில் லாமல் நானில்லை
நினை வில்லாமல் நிகழ்வில்லை
ஆயர் குலத்து மாமணியே
அறிந்தேன் நின்றன் அருளாலே
அலையில் லாமல் ஆழ்கடலே
அமைதியாய் இருக்கும் கடலின்றி
அலைகள் எங்கே உருவாகும்
அலைகள் எலலாங் கடலுக்கே
நிலையாய் உடைமை யாவதுபோல்
நீல வண்ணக் கண்ணாநீ
விலை மதிப்பில்லாத் தெய்வமதால்
விதித்தனை என்னை நினக்காக!
தனுங் குலா மித்ரச்ச திருஷ்டே!
திருஷ்டே பலதி ப்ரபவதி ந பவதி
கீம் பவதிரஸ்கார!
தீராக் கர்வம் அழித்தனையே
கோவர்த் தனமாம் கிரிதனையே
குடையாய் விரித்தாய் கோவிந்தா
வாமன வடிவில் வந்திங்கே
வாழ்வினை அளித்தாய்! இந்திரனே
தேவர் தலைவன் எனமீண்டும்
தேரும் பதவி தந்தனயே!
இருந்து அடங்கா மாவலியைத்
தந்திரம் மேன்மைத் தவவவியால்
தாழங் குடைசேர் வாமனனாய்
முந்திய வினைகள் முடிவதற்கே
முகூர்த்தம் வைத்து அடக்கினையே
மந்தையாய் மாடு மேய்த்தனையே
மதுரை மன்னா மணிவண்ணா!
வதார வதா ஸதா வஸூதாம்!
பரமேஸ்வர பரிபால்யோ
பவதா பவதாப பீ தோஹம்!!
அவதா ரங்கள் பலவெடுத்தே
சிறப்பினை அளித்த ஸ்ரீதரனே
செகத்தினைக் காக்க மீனாகப்
பிறந்து காத்த பெரியோனே
பேதை எனக்கோ இனியுகில்
பிறப்பிறப் பில்லாப் பெரும்பயனைப்
பெரிதும் வழங்கி அருள்வாயே!
வதனார விந்த கோவிந்தா!
பலஜலதி மதந மந்தர ப்ரமம்
தரமபநய த்வம்மே!!
கருத்தாய்க் கொண்டு தாமரைபோல்
மெல்லியல் புடனே மிளிர்முகமும்
மென்னகை புரிய உலகெங்கும்
செல்லற் கரிய ஜீவன்கள்
சுகமாய் வாழக் காப்பாற்றும்
வல்லவ! தாமோ தரன்நீயே
வழங்கும் வளமே கோவிந்தா!
மந்தார மலையாம் மாதவனே!
நம்பிக்கை யுடனே நினைத்தொழவே
நலிவதை நகர்த்தும் யாதவனே!
வெம்பிடும் வாழ்வில் யமபயமே
விலக்கிட வேண்டும், வேதாந்தக்
கொம்பிலே பழுத்த நறுங்கனியே
கோகுலம் காத்த கோவிந்தா!
கரவாணி தாவ கௌசரணென்!
இதி ஷட்பதி மதீயே வதன ஸரோஜே
ஸதா வஸது!!
நாளுங் கரங்கள் குவிக்கி்ன்றேன்
ஆரணத் தேவா ஷட்பதியாம்
அலங்கல் அணிவாய் தந்தமெலாம் (பற்களெலாம்)
தோரணம் கமல வாய்தனிலே
தும்பியா குமிந்தத் தோத்திரமே
பாருள மட்டும் பயன்தருமே!
பச்சை மாலே நயம்பெறுமே!
Your Feedback
Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz









Submit your articles
Free Software Every Day
Submit Artwork
Happy
Birthday



