மரங்கள் நடுவோம்
புலவர் N.V. சுப்பராமன்
11 நிறைய மரங்கள் நட்டு!
மழைதனைக் கொடுத்துதவும் நம்பு
வெய்யில்தனைக் குறைத்துவிடும் தம்பி - அது
வெப்பத்தினை தணித்துவிடும் தம்பி!
ஆலகால விடத்தைத் தின்ற
நீலகண்டன் செயலைப் போல
தீய வாயு தன்னை ஏற்று
தூய காற்றைத் தருகுதே!
இலைகள், மலர்கள், இனிய கனிகள்
இயைந்து கொடுக்கும் மரங்களே
பறந்து திரியும் பறவைகட்கு
பரிந்து கொடுக்கும் கிளைகளே!
மனிதன் வீடு கட்டி வாழ
மகிழ்ந்து தரும் தன் உடலையே
மரத்தைக் காக்க வேண்டுமே
மனிதன் சிறப்பாய் வாழவே!
சற்றும் தளர வேண்டாமே
முற்றும் மரத்தைக் காக்கவே
சுற்றுப் புறத்தைக் காப்பமே
சுகமான வாழ்வைத் துய்ப்பமே!
நிறைய மரங்கள் நட்டு
நிதமும் நீரை வார்த்து
நன்கு வளரும் வரைக்குமே
நலமாய்க் காத்து வாழ்வமே!
Your Feedback
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||












