பொதுக்கவி
தமிழ்த் தேனீ
இதோ “பொதுக்கவி“
சந்தத் தமிழ்க் கவிதைத் தரணியாண்டதமிழ்ப் பாட்டி அவ்வை அவள்
கந்தன் கருணையால்
கயிலாயமும் ஆண்டாள்
தமிழ் ஆண்டாள்,
தமிழ் மண்ணாண்டாள்.
கருங்காலிக் கட்டைக்கு, கோணாத கட்டாரி
கதலித் தண்டுக்கு உருகுமாம் என்றுரைத்து
மூவேந்தருக்கும் ஏழுலகுக்கும் கட்டுப்படாத
தமிழ் ஆண்டாள், தமிழ் மண்ணாண்டாள்
கந்தன் கருணைக்கு உருகி
கயிலாயமும் ஆண்டாள்,
வாலிபமே வயோதிகமாய்
தமிழே மூச்சாய் தமிழ்க் கம்பூன்றி,
இந்த மண்ணூன்றி கயிலாயம் சென்றடைந்தும்
தமிழ்க் கம்பு, தமிழ்க் கரும்பு தரணி ஆண்டது.
ஆத்தி தமிழ் மகுடம்சூடி தமிழாண்ட
தரணி மாது கயிலாயமும் ஆண்டாள்
கொன்றை வேந்தன் தனை
இன்றை வேந்தன் வரை சொல்லி
கயிலாயம் சென்றடைந்த அந்த
தமிழ்ப் பாட்டி திருப்பதம் பணிந்து
தமிழ் வழி நடக்க
புதுக்கவி படைக்க வந்த, புதுக்கவி
அல்ல, அல்ல பொதுக்கவி நான்.
வார்த்தெடுத்த கவிதைகளில்
வார்த்தைகளை விதைக்க வேண்டும்
செதுக்கிய சிலைகளெல்லாம்
சிற்பமாக மாற வேண்டும்
எழுதுகின்ற எழுத்தெல்லாம்
கவிதையாக மலர வேண்டும்
விற்பனர் உள்ள அவையில்
விருதுகள் பெற வேண்டும்,
விலாசம் வேண்டும் எனக்கொரு
விலாசம் வேண்டும்
மணிமகுடம், மலர்க்ரீடம், பட்டயங்கள்
விருதுகளை ருதுவாக்கும்
தகுதி வேண்டும் !!!
புதுக்கவி படைக்க வந்த, புதுக்கவி
அல்ல, அல்ல பொதுக்கவி நான்.
யாப்பெடுத்து, சீர் அமைத்து அசை,
தளை, தொடை, எனும் இலக்கணம்
சமைத்து பா புனைய வந்த கவி அல்ல
நான் மனதின் பாதிப்பு அப்படியே சொல்ல
வார்த்தைகளைக் கோர்த்து
கருத்துக்களைச் சேர்த்து
புதுக்கவி படைக்க வந்த புதுக்கவி
அல்ல அல்ல பொதுக்கவி நான்
விலாசம் வேண்டும், எனக்கொரு
தமிழ் விலாசம் வேண்டும்
நானிலம் போற்றச் செயல்புரிவாய்
Your Feedback
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















