தாயென்று கும்பிடடி பாப்பா
- சின்னச் சின்னப் பாட்டு
நீல. பகவன்
சின்னச் சின்னப் பாட்டு
சின்னச் சின்னப் பாட்டுசிறுவர்ப் பாடும் பாட்டு
அன்னை தந்த பாட்டு
அமுதத் தமிழின் பாட்டு
கண்ணைக் கண்ணைக் காட்டு
காலை நீயும் நீட்டு
பண்ண மைந்த பாட்டு
பாடி யாடு கேட்டு
உண்ணும் போதும் பாட்டு
உறங்கும் போதும் பாட்டு
எண்ணும் போதும் பாட்டு
எழுதும் போதும் பாட்டு
சின்னச் சின்னப் பாட்டு
சிறக்கும் தெய்வப் பாட்டு
உன்னை என்னைக் காக்க
உதவும் தெய்வப் பாட்டு
குழந்தை உள்ளம்
குழந்தை யுள்ளம் என்றுமேகூறும் மகிழ்வில் ஒன்றுமே
குழலை யாழை வென்றிடும்
குதலை மொழியைச் சொல்லுமே
மழலை கேட்டு மக்களின்
மனதில் மகிழ்வு பொங்கவே
உழலும் துன்ப நினைவுகள்
ஓடித் தானே போகுமே
கவலை இல்லை மனதினில்
களிப்பு மிஞ்சிக் கொஞ்சுமே
தவழும் மழலை கேட்கவே
தவமுஞ் செய்ய வேண்டுமே
குழந்தை யுலக மென்றுமே
கொஞ்சிக் கொஞ்சி மகிழுமே
அழகில் அழகு தோன்றிட
அன்பு, தெய்வ மாகுமே
அம்மா
அம்மா அம்மா என்னம்மாஅன்பாய் வளர்க்கும் செல்லம்மா
பொம்மை தந்த பொன்னம்மா
பூவை தீயுஞ் சூட்டம்மா
குறும்புகள் என்ன செய்தாலும்
குறைகள் ஏதுஞ் சொல்லாமல்
குறுநகை புரிந்தே வருவாயே
கொஞ்சிக் கொஞ்சி மகிழ்வாயே
கவலை உன்னில் இருந்தாலும்
களிப்பாய் எந்தன் முகங்கண்டால்
குதலை மொழியில் உனைநானே
கூறு கின்றேன் நீ தெய்வம்
அம்மா அம்மா என்னம்மா
அறிவைத் தந்தே அனுதினமும்
எம்மைக் காக்கும் எழிலம்மா
எனக்கு வழிகள் காட்டம்மா
தம்பி
தம்பி தம்பி தமிழ்ப்பாட்டுதாயகம் மகிழும் அதைக்கேட்டு
வம்பும் வாதும் நீ கேட்டு
வாடாது முகத்தில் மகிழ்வூட்டு
கொள்ளை கொள்ளும் உனதுள்ளம்
கூறும் மொழியில் மனந்துள்ளும்
கள்ள மில்லா முகத்தழகில்
கறந்த பாலின் நிறந்தெரியும்
ஆடும் ஆட்டம் உனதாட்டம்
அனுதினம் பார்க்க மனநாட்டம்
ஆடா திருத்தால் மனவாட்டம்
அன்பே உன்னை விடமாட்டோம்
பாடி யாடி நீ சிரித்து
பயந்தரு மறிவு நூல் விரித்து
நாடும் நல்லவர் வழியறிந்து
நானிலம் போற்றச் செயல்புரிவாய்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||


















