அம்மா - குழந்தைகள்
ஆசூரி இராஜகோபாலன்
அம்மா
அம்மா என்றும் நம்தெயவம்அறிந்த உண்மை நற்தெயவம்
சும்மா என்றே யெண்ணாதே
சேர்ந்து கேலி பண்ணாதே
நோயும் நொடியும் வந்தாலும்
நேசம் கொள்வாள் அம்மாவே!
வாயும் வயிறும் சுமைந்தெம்மை
வளர்க்கும் தெய்வம் அம்மாவே!
அழகாய் கதைகள் பலசொல்லி
அறிவை நன்கு வளர்த்திடுவாள்
பழகும் விதத்தை பண்பாக
படித்துப் படித்துக் காட்டிடுவாள்
அன்பாய் உணவை ஊட்டிடுவாள்
அணைத்து அடித்துத் திருத்திடுவாள்
தெம்பாய் உலகில் நாம் வாழ
தெரிந்த தெயவம் அம்மாவே!
எங்க பாப்பா
எங்க வீட்டுப் பாப்பாபார்த்த தெல்லாம் கேப்பா
சோறும் தின்ன ஏய்ப்பா
சிறிய திண்டி கேட்பா
மிட்டாய்க் காரா வாப்பா
அவளுக் கொன்று தாப்பா
காசு இல்லே போப்பா
நாளைக் கேநீ வாப்பா
நல்ல பிள்ளை
பள்ளிக் கூடம் சென்று
பாடம் கற்று நன்று
நல்ல பிள்ளை என்று
நடக்க் வேண்டும் நின்று
பேரைப் பெற்று இன்று
பெருசு பதவிக் குன்று
உயர வேண்டும் வென்று
நாமெல் லோரும் ஒன்று
சின்னப் பெண்ணே
சின்னப் பெண்ணே நில்லு
எங்கே போறே சொல்லு?
பள்ளிக் கூடம் செல்லு
படித்து வாழ்வில் வெல்லு
துள்ளிப் பாடு பள்ளு
தமிழின் சுவையை அள்ளு
தீய வற்றைத் தள்ளு
தேர்ந்து நல்லதைக் கொள்ளு
மழலைகள் ஆசிரியர் குழு
என்னைப் பற்றி
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||

















