சமயபுரம் மாரியம்மன்
நீல. பகவன்
பவானி அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருப்பதிகம்
காரணமாய்க் கண்ணுதலே! காதலுறத் - தாரணியில்
ஆரணம் என்கவிதை ஆண்டருளும் பூரணனே
காரணிந்த மேனியினைக் காட்டு.
நூல்
அன்னை அனுதினம் ஆண்டெனை ஆதரிக்கஉன்னைப் ப்ணிதல் உகந்ததே - என்னை
எளிவந்து காக்க இதுதருணம் என்றும்
ஒளிதந்தென் உள்ளத் துறை!
ஆதாரம் வேறறியா அற்பச் சிறுபிறவி
பாதார வித்தம் பணியவே - கோதைநீ
ஆதிபரா சக்தியே! அண்டங்கள் யாவையுமே
நீதியென நீயுருட்டி நில்!
இம்மை மறுமை இரண்டிற்கும் ஈத்துலக்கும்
அம்மை அறியாத வாறில்லை - வெம்மை
தணிப்பவளே! தாயே! தனிவாள் எடுத்தே
துணிப்பவளே தூன்பமெனுந் தூண்!
ஈறிலா ஈசற் கிணியவளே! ஈண்டுனது
பேருரைக்கும் பெற்றியதோ? பேரழகே! - கூறிடுவாய்
சாதித்தாய் கண்ணபுரம் சாய்த்தாய் சமயபுரம்
நீதித்தாய் நின்றருள்வாய் நேர்!
உண்ணாக் குழந்தைக்கும் ஊட்டுவாய் ஞானப்பால்
கண்ணிற் கிமையாக்க் காப்பாற்று - மண்ணில்
காகம் பிறந்தாடுங் கண்ணபுர மேடை
பிரம்பு பிறந்தாடும் பின்!
ஊரெங்கும் ஊறிவரும் ஊரணியாய் உன்னுள்ளம்
பாரெங்கும் பேரருளாற் பாலிக்க - மாரியம்மா
தில்லை வனத்தெல்லை விட்டுத் திரும்பம்மா
முல்லை முறுவலிள முத்து!
எண்ணிநான் ஏங்கிடவோ? ஏழை இனியமனம்
புண்ணிலிடு கோலாய்ப் புலம்பக் - கண்ணபரப்
பூணுமணி யாரணப் பூரிப்பே! பூதலத்தில்
ஆணிப்பொன் ஆரணங்கே ஆள்!
ஏடா யிரங்கோடி ஏதா யினும்பாடி
'ஏடா' எழடா எனப்பணி; - வாடாத
அந்தரத் தேவர் அடிபணியுஞ் சுந்தரி
வந்தருளைத் தந்தருள வா!
ஐயமிலா நன்னெஞ்சால் ஐயை அருளென்றேன்
மையிடுங்கண் வாளாகும் வேலாகும் - கையோளிர்வில்
சங்கங் கபால்முஞ் சார்ந்தொருவாள் கொண்டவளே!
சிங்கமிசைச் சிந்துரமே செல்!
ஒருசிறைக் காதனணி ஒங்குயர் வானப்
பெருமதியாய் மாறிப் பிறக்க - அருள்நிதியே
நாட்டுவாய் குலத்தை! நாடெங்குத் தானதிரக்
காட்டுவாய் காலமேலாங் காத்து!
ஒங்காரி நாரணி! ஓடிவா! பூரணி!
ஆங்கார நீலிதீ யாடிவா! - பாங்காகக்
கண்காணி கங்காளி கௌரி மகமாயி
புண்பட்ட நெஞ்சின் புணை!
ஓளதா ரியந்தரும் ஆனந்த நல்வடிவே
பௌவமாய்ப் பாரெங்கும் பாலிப்பாய் - மௌவலுடன்
தேமதுரத் தூயதமிழ்த் தாமமது நாமமுற
மாமழையே! மாமணியே! வா!
மழலைகள் ஆசிரியர் குழு
என் படைப்புகள்
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














