நாம் தொழும் கடவுளர்
ஆசூரி இராஜகோபாலன்
விநாயகர்
வேழ முகத்து கணபதி
வேதம் போற்றும் குணநிதி
குமரன் அண்ணன் கஜபதி
குறைகள் தீர்க்கும் தவநிதி
தொந்தி கொண்ட குலபதி
தேவர்க் கெல்லாம் அதிபதி
பணிந்து பெறுவோம் நல்மதி
பாதம் துணையே நற்கதி
கண்ணன்
கண்ணன் நல்ல மாயன்
வெண்ணெய் உண்ட வாயன்
மக்கள் போற்றும் ஐயன்
மாடு மேய்த்த ஆயன்
இன்பம் சேர்க்கும் தூயன்
யசோதை பெற்ற சேயன்
பாண்ட வர்க்கு நேயன்
பக்தர் கள்ச காயன்
கர்த்தர்
மேரி அன்னன் பாலர்
மேலோர் தந்த தூயர்
மகிமை மிக்க மேய்ப்போர்
மாதா கோவில் நாயகர்
பாரம் சுமந்த தூதர்
பாவம் போக்கும் நாதர்
படிப்பாய் பைபிள் வேதம்
பணிவாய் யேசு பாதம்
முகமது நபி
குணத்தில் இமயக் குன்றவர்குரான் நூலில் நின்றவர்
பொம்மான் அல்லா என்றவர்
ரம்சான் நோன்பில் வென்றவர்
மெக்கா, மதீனா சென்றவர்
முகமது நபிகன் என்பவர்
இஸ்லாம் சமயம் தந்தவர்
இதய வாசல் திறந்தவர்
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














