மரங்களைக் காப்போம்
நடராஜன் கல்பட்டு
பட்ட மரத்தின் பரிதவிப்பு
வாயினிக்கும் காய்களென்ன
ஒட்டுமாங் கனிகளென்ன
கொட்டுமாம் புளியுமென்ன
கோடி கோடி கொடுத்திட்டோம்
கூறுமையா உம் பதிலை
சிறகு கொண்ட பறவை பல
வாழுமிடம் எம்மிடையே
பகமை கொண்ட மான் புலியும்
படுத்துறங்கும் எம் மடியில்
கொடுத்து வந்தோம் குளிர் நிழலை
கூறுமையா உம் பதிலை
பசுமரத்தின் பட்டையினை வெட்டுகின்றார் பாரிலின்று
உயிருடனே தோலுரிக்கும் உத்தமரே உரைத்திடுவீர்
குற்றமென்ன யாம் புரிந்தொம் கூசாமல் கூறிடுவீர்
தொலுரித்த மயிலென்றும் தோகைவிரித்தாடாது
பட்டை போன பசுமரமும் பட்டுத்தான் போகுமையா
மரம் காத்த மண் வளமும் நிழல் காத்த நீர் வளமும்
நிமிடத்தில் போய்விடுமே நிச்சயமாய்ச் சொல்லுகின்றோம்
வாயற்ற சீவனை நீர் வாட்டுதலும் முறையன்று
சாய்வுற்ற மரமெல்லம் சாபமிடும் மறக்காதே
நீர் செய்த காரியத்தை நீரேதான் நினைத்துப் பாரும்
தீயவைகள் தோன்றிடுமுன் திருந்திடுவீர் நல்வழிக்கே
மொட்டையான மரமெல்லம் கெட்டகால அறிகுறியே
பட்ட மரம் மரமல்ல பாலைவனம் சோலையல்ல
விட்டு விடும் இத்தொழிலை வீறுகொண்ட இக்கணமே
நட்டு விடும் நன் மரத்தை நாற்றிசையும் யாங்கணுமே
நலமாய்க் காத்து நாள்தோரும்
பட்டால் பாடு பலனுண்டு
நன்றிக் கடனும் எமக்குண்டு
பட்ட கடன் தீர்த்திடவே
நல்ல பயன் யாம் தருவோம்
வெட்ட வெளி வெயிலதனின்
வேதனை இனி யென்றுமிறா
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||

















