தாயென்று கும்பிடடி பாப்பா
- புனிதன் காந்தி வாழ்கவே
செபரா
காந்தி என்னும் நாமந்தன்னைக் கசிந்துருகிச் சொல்லுவீர்!!
சாந்தி கிட்டும் நாளும் என்று சங்கநாதம் செய்குவீர்!!
இத்தரையில் மானுடம்தான் இன்னவிதமாகவே,
இருக்க வேண்டும் என்று சொன்ன இதயமென்றும் வாழ்கவே!!
காந்தி என்னும்
தவறு செய்வதியல்பு எனினும் தானுணர்ந்த மனிதனே,
தன்னில் தெய்வம் காண்பானென்ற தவப்புதல்வன் வாழ்கவே!
பிறரை வருத்த விழையும் போக்கு (இங்கு) பெருகி வரும் நாளிலே,
தன்னை வருத்தி (அவர்) தவறுணர்த்தும் தலைவன் சொல் அஹிம்சையே!
காந்தி என்னும்
சத்தியந்தான் வாழ்க்கையென்று சாத்வீக முறையிலே,
இத்தரைக்கு எடுத்துணர்த்த இசைந்த தெய்வம் காந்தியே!!
நித்தமுமே உலகு போற்ற (நம்) நினைவில் நிற்கும் மூவராம்;
புத்தன் ஏசு அவர் தன்னோடு புனிதன் காந்தி வாழ்கவே!!
அன்புடன்
செபரா
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














