தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- செந்தமிழ்
நீல. பகவன்
செந்தமிழ்
செந்தமி ழேநல் செந்தமிழே!சிந்தை யுறைந்த செந்தமிழே!
முந்தையர் மன்னர் மூவரவர்
முடியில் நிலைத்த செந்தமிழே!
வந்தவர் யாரும் வாழ்த்திடவே
வாழ்வில் உயர்ந்த செந்தமிழே!
இந்தநல் நாட்டில் இளமையுடன்
என்றும் வாழுஞ் செந்தமிழே!
சிலம்பைக் காலில் அணிந்தவளே
சீர்மணி மேகலை இடையழகே!
வலக்கை இடக்கை வளையலென
வளயா பதியே! நறுங்கழுத்தில்
இலகுஞ் சிந்தா மணியேதான்!
இனணயாம் காதில் குண்டலங்கள்!
நலமாய் விளங்க, நாளெல்லாம்
நயந்து பணிவோம்! செந்தமிழே!
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














