ஒரு குடைக்கீழ் உலகம்
கவிஞர் முத்து இராமமூர்த்தி
ஒருக் குடைக்கீழ் உலகம்
நிலத்தினைத் துணித்த தாலே
கூறெனும் தீவு நூறாய்
குவலயம் உடைந்து நிற்க
சாறெனும் மனித நேயம்
சகத்தினில் மறைந்த போது
போரெனும் பேயின் கைகள்
போட்டதோ கோடித் துண்டு!
வேற்றுமை ஆயி ரங்கள்
விளைத்திடும் பிரிவி னைகள்
கூற்றென உலக ழிக்கும்
கொடுமைகள் மலிய லாமோ?
தேற்றிட உலக மக்கள்
தொடர் பினைப் பெருக்கி வைத்துப்
போற்றிடும் உறவு கொண்டால்
பொருள்பெறும் அருளும் அன்பும்!
உள்ளங்கள் ஒன்ற வேண்டின்
உறவெனும் பாலம் வேண்டும்!
வெல்லும்கல் உறவின ஆணி
வேர்களே தொடர்பு தானே!
கோள்ளும் அத்தொடர்பு ஓங்கின்
குவலயம் செழிக்கும்! நாமும்
அள்ளும் கல் மகிழச்சி வெள்ள
அலைகளில் மிதப்போம்! உண்மை!
புள்ளின நாறை அன்னம்
புறாவுடன் மேகக் கூட்டம்
உள்ளமரம் கடலில் தோன்றும்
உணர்வெனும் அலைகள் சேர்த்துச்
சொல்லிடும் செய்தி ஏந்தி
சுகம்தரும் தூதாய்ச் சென்ற
சொல்லரும் கவிதைக் காட்சி
சுவைத்திட இன்பம் கோடி!
தாளினில் உள்ளம் கொட்டி
தன்னையே எழுத்தில் காட்டி
பாலமாய் உள்மி ணைக்கும்
பெருமைசால் கூதச் சேவை,
சாலவே விரைந்து சேதி
சேரவே உதவும் தந்தி,
மேலுறும் 'டெலக்ஸின்' மேன்மை,
மேதினி காக்க அன்றோ?
விலையிலா காலத்தோடு
வென்றிட தூரத் தையும்
பலனுற எண்ணைச் சுற்றிப்
பேசிட தூரப் பேசி!
வலையெனும் கம்பி இன்றி
வழங்கிட 'ஒயர்லெஸ்' என்றே,
மலையெனக் குவியும் மாந்தர்
மதிவினை பொறிகள் என்னே!
நாட்டுளோர் கலத்தில் வாழ்
நிகழ்ச்சிகள் அலைக ளாக
வீட்டினைத் தேடிப் பாய்ச்சும்
வானொலி வண்மை போற்றி,
காட்டிடும் உருவத் தோடு
களித்திட நிகழ்ச்சி பூத்துத்
தோட்டமாய் மணம்ப ரப்பும்
தொலைக்காட்சி மாண்பு என்னே!
'ஆப்பிளாய்' விண்ணில் வைத்த
அரும்பெரும் செயற்கைக் கோள்கள்
பாப்புகழ் பண்பா டெங்கும்
பரப்பியே மணக்க, பாரில்
மாப்பெரும் சேவை செய்து
மன்பதைக் குதவும் என்றால்
காப்பியம் பாட வெல்லும்
கனிவுறும் மானு டந்தான்!
தகவலாம் தென்றல் வீசித்
தொடர்புகள் பெருகின், நாமும்
சுகமுற ஒன்றாய் வாழ்வோம்!
சொர்க்கமாய் ஒளிரும் ஞாலம்!
அகமகிழ் அரிய காட்சி
அமைந்திட வல்ல தான
வகைமிகு பொறிகள் மேலும்
வளர்கவே வையம் வாழ!
வரமெனத் தகவல் தந்து
வாழ்த்திடும் தேவ தைகள்
உரம்மிகும் கைக ளாலே
உலகினைத் தழுவு மானால்
நிறம்தரும் வேற்று மையின்
நெடுந்துயர் கூட போக்கி
தரமிகும் வழ்க்கை கண்டு
தரணியோர் காலம் வெல்வர்!
பேதமை நீக்கி மக்கள்
பிணைத்திடத் தொடர்பு கொள்ளும்
சாதனம் நிறைத்து வைத்து
சரித்திரம் படைப்ப ராயின்
வேத்னைப் பேய்கள் மாய்ந்து
வையமே ஒருகு டைக்கீழ்
சாதனை ஆட்சி கானும்!
சமத்துவ மாட்சி தோன்றும்!
சென்னை வானொலி 8-1-1983





Your Feedback









