ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம்
செபரா
அருள்மிகு லலிதாதேவி ஐம்பொன்னாரம்
ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம்
பி3ம்பா3த4ரம் ப்ருது4ல மெளக்திக சோபிநாஸம்!
ஆகர்ண தீர்க்க4 நயனம் மணிகுண்ட3 லாட்4யம்
மந்த2 ஸ்மிதம் ம்ருக3மதோ3ஜ்வல பா2லதே3ஸம்!!
கோவைக் கனியன்ன உதடுகளும்,
அழகு கொஞ்சும் நன் முத்தணிந்த நாசியும்,
காதளவோடிய இரு கண்களும் நீ அணிந்த
காரணத்தால் சிறப்புற்ற குண்டலமும்,
களிப்புடன் எனையாளுமுன் புன்சிரிப்பும்,
கஸ்தூரி கலை மணக்கும் நன்னெற்றியும்,
கமல மலரன்ன முகத்தாள் அருள்மிகு லலிதா தேவி
உனை அதிகாலையிலே கருதினேனே!!
ப்ராதர் ப்4ஜாமி லலிதா பு4ஜகல்பவல்லீம்
ரக்தாங்கு3லீய லஸதாங்கு3லி பல்லவாட்4யாம்!!
மாணிக்ய ஹேமவலயாங்க3த சோபமானாம்,
புண்ட்3ரேக்க்ஷு சாபகுஸமேக்ஷு ஸ்ருணீர்த3 தா4னாம்!!
செந்துளிர் போலும் விரல்கள்: அணிந்த
சிவந்த நன் மோதிரங்கள் மின்ன,
பொன்மணி வளையல்கள் ஒளிர, அழகு
பொலிந்திடும் தோள்வளை விளங்க!
கருப்புவில் அங்குசம் தன்னோடு,
காந்தாள் மலரதுவும் கணையாக் கொண்டாள்:
கற்பகக் கொடி போலும் எந்தாய், லலிதா தேவி
அவளிரு கரங்களை ஆராதிப்பேனே!!
ப்ராதர் நமாமி லலிதா சரணார விந்த3ம்!
ப4க்தேஷ்டதா3ன நிரதம் ப4வஸிந்து4 போதம்;
பத்3மாஸனாதி3 ஸுர நாயக பூஜனீயம்
பத்3மாங்குஸ்த்4வஜ ஸுத3ர்சன லாஞனாட்4யம் !!
அடியார் விருப்பமதுவும் அருளும்;
அருள் புரிந்தவர் செய் பழ வினைகள் நீக்கும்!
நெடியோன் அயன் முதாலா
வானோர் நித்தமும் வணங்கும்!
அடிமலர்தன்னில் கமலமொடு அங்குசமும்
கொடியொடு சக்கரமும் இலங்கும்!
விடியலில் லலிதா தேவியுன் பதம்
விழைந்திங்கு வணங்கும்!!
ப்ராதஸ்துவே பரசிவாம் லலிதாம் ப4வானீம்
த்ரய்யந்த வேத்3யா விப4வாம் கருணானவத்3யாம்!!
விச்வஸ்யஸ்ருஷ்டிவிலயஸ்தி2தி ஹேது பூ4தாம்
விச்வேச்வரீம் நிக3மவாங்மனஸாதிதூ3ராம்!!
மங்கல நாயகியே! மாதேவன் மனமகிழ் தேவியே!
இறைஞானம் ஒன்றாலெங்கள் இதயம் நிறைந்தவளே!!
தங்குலகம்தனைப் படைத்துத்
தானதுவுமாகிக் காத்த தாயே!
மறையதுவும் மனமும் அறியா மகிமையின்
அகில உலகாளும் அன்னையே! அருட்கடலே1
அனுதினமும் லலிதா தேவி உன்நாமம்
அதிகாலையிலே உரைப்பேனே!!
ப்ராதர்வதா3மி லலிதே தவ புண்யநாம
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி!!
ஸ்ரீ சாம்பவீதி ஜக3தாம் ஜனனீ பரேதி
வாக்3தே3வதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி!!
காலையில் மனமதுவும் ஒன்றிக் கருத்தெல்லாம் நீயேயுமாகிக்
காமத்தை வென்றவளே! கமல மலராளே என உந்தன்
நாமத்தை உரைக்கும் அன்பர் நலம் பெற அருளும் தாயே!
மாஹேஸ்வரி சாம்பவி மகிழ்ந்திங்கு உலகாளும் அன்னையே!
ஐந்தெழுத்தின் நாயகியே! அருள் தரும் கலைவாணியென
அன்னையே லலிதா தேவி உன்னருள் அனுதினமும் துதிப்பேனே!!
ய:ச்லோக பஞ்சகமித3ம் லலிதாம்பி3காயா:
செளபாக்4யத3ம் ஸுலலிதம் பட3திப்ரபா4தே!!
தஸ்மை த3தா3தி லலிதா ஜ2டிதிப்ரஸன்னா
வித்3யாம் ச்ரியம் விபுல ஸெளக்2யமனந்த கீர்த்திம்!!
கல்வியொடு செல்வமும்
கருதும் நற்பேறனைத்தும்,
நல்குவது அவள் நாமம்!
நாடும் புகழனைத்தும்,
முன்னின்று அருளுவளே! முகமலர்ந்து
இவ்வைம்பொன்னாரந்தன்னை
நன்னெஞ்சே நீ உரைப்பாய்! நாடி
நாயகி லலிதா தேவி புகழ்தன்னை நாளும்!!
தமிழாக்கம் – செபரா
பதிவு செய்யப்பட்டது. முன் அனுமதியில்லாது எந்த வகைப் பிரதியும் எடுப்பதனைத் தயவு செய்து தவிர்க்கவும்.
S.P. Rama moorthy, Plot No 189, III Main, I Cross, NatesaNagar Chennai 600 092. Ph No 2479 2259
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













