Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

   என்னைப் பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
பாரதி வாழுகிறார்
செபரா





Mahakavi Bharathi

எந்நாளும் பாரதி நம் இதயத்தே வாழுகிறார்

பெண்ணடிமை ஒழித்திடுவீர்; உம் பேதமைகள் ஒழியுமென்றார்!
மண்ணிலவர் உரைத்தபடி மாதவளும் ஆளுகின்றாள்!!
அண்ணலவர் தெய்வகவி ஆனதனால் நிகழ்ந்ததன்றோ என
எண்ணுகிற இதயமெலாம் பாரதி எந்நாளும் வாழுகின்றார்!!

தமிழென்றும் உயர்ந்ததென்று இத்தரணியிலே அறிந்திடவும்,
அமிழ்தம் அது இனியதென ஆக்குவதே நம் கடமை!!
நற்றமிழை வளர்த்திந்த நானிலம் அறியச் செய்ய,
கற்றவர்கள் முன்வருவார் பாரதி அக்கருத்தினிலே வாழுகின்றார்!!

தனியொருவருக்கு உணவிலையெனில் தரணிதனை அழித்திடுவோம்!!
இனியேனும் மாற்றுவோம் இழிநிலைமை ஈதென்றார்;
முனிந்தெழுந்தார் முன்வரவே முண்டாசுக்கவி மகிழ,
இனிதின் நிலமையென்பார் மனதில் பாரதி எந்நாளும் வாழுகின்றார்!!

பெண்ணவள் துகிலுரியப் பேதைகளாய்ப் பார்த்ததையும்,
கண்ணனெனும் பெருந்தெய்வம் கைகொடுத்துக் காத்ததையும்,
பண்ணதனில் எளிதாகப் பாமரருக்கும் உணர்த்தியதால்;
மண்ணுலகோர் மனதினிலே பாரதி மகிழ்ந்தென்றும் வாழுகின்றார்!!

கண்ணனைத் தெய்வமாய்க், காலமெலாம் வழித்துணையாய்,
எண்னமெலாம் இனிக்க, ஏற்புடைக் காதலியாய்,
மண்ணில் நற்பணியாற்ற, மனத்தால் நற்சேவகனாய்,
கண்ணிலே நிறுத்தியவர், பாரதி தன் கவிதையிலே வாழுகின்றார்!!

கண்ணனைப் பலவடிவாய்க் கண்டதொரு புலவனவன்,
கண்ணற்ற காலன்தான் கடமைக்குப் பலியாக்க,
மண்ணிலவர் பணிமுடிக்க மற்றொருவர் முன்வந்தார்;
அண்ணலவர் தாசனென்பார் பாரதி அவரெழுத்தினிலே வாழுகின்றார்!!

சாதிகள் இல்லையெனச் சாற்றியவர் சளைக்காது
மேதினியில் அக்கொடுமை (இன்னும்) மேவுகின்ற காரணத்தும்,
வேதனை இது ஒழிய விண்ணதிர முழங்கிடுவாரவர்;
சாதனைகள் படைத்திட்டார் செயலில் சரித்திரமாய் வாழுகின்றார்!!

- இன்னும் வரும் இது இனிய நற்தொடராய்..

அன்புடன்
செபரா

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button