கண்ணனும் பாரதியும்!
என்.வி. சுப்பராமன்
கடவுளாகக் கண்டவர்
கண்ணன் தந்த கீதையை
வேதமாக ஏற்றவர்!
பாரதியார் கண்ணனை
சேவகனாய்க் கண்டவர்
தோழனாக ஏற்றவர்
தாயாகக் கொண்டவர்!
அரசனாக ஏற்றவர்
ஆண்டானாக நினைத்தவர்
சீடனாகப் பார்த்தவர்
சற்குருவாய் ஏற்றவர்!
குறும்பு செய்யும் பிள்ளையாய்
குறைவிலாது மகிழ்ந்தவர்
குழந்தையாகக் கண்டவர்
குல தெய்வமாக மதித்தவர்!
தன்னைப் பெண்ணாக்கி
காதலனாய்க் கண்டவர்
கண்ணனையே பெண்ணாக்கி
காதலியாய்க் கொண்டவர்!
காக்கையது சிறகினிலும்
விறகிலுள்ள தீயினிலும்
பார்க்கும் மரங்களிலும்
கண்ணனையே கண்டவர்!
காயினது புளிப்பினிலும்
கனியினது இனிப்பினிலும்
காற்றினுள்ள குளிரினிலும்
கண்ணனையே கண்டவர்!
-- என்.வி. சுப்பராமன், சென்னை.
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||












