சின்னப் பையா!
என்.வி. சுப்பராமன்
நம் நாடிது!
சின்னப் பையா சின்னப் பையா சேதி கேளடாநம்ம நாட்டின் பெருமைதனை எண்ணிப் பாரடா!
நல்லவர்கள் வாழும் இந்த நாட்டைப் பாரடா
வல்லவர்கள் வாழ்ந்திருந்த நாட்டைப் பாரடா!
அரியவர்கள் சேர்த்து வைத்த செல்வம் கேளடா
பெரியவர்கள் வைத்துச்சென்ற சொத்தைப் பாரடா!
வள்ளுவரும் வள்ளலாரும் பிறந்த நாடிது
தெள்ளுதமிழ் இலக்கியங்கள் மலர்ந்த நாடிது!
ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்ந்த நாடிது
பாரதியும் வால்மீகியும் வளர்ந்த நாடிது!
அண்ணல் காந்தி அமரர் நேரு இருந்த நாடிது
அகிம்சை என்னும் தத்துவத்தைத் தந்த நாடிது!
அறிவியலும் ஆன்மீகமும் சிறந்த நாடிது
இலக்கியமும் இதிகாசமும் பிறந்த நாடிது!
நம்ம நாட்டின் பெருமைதனை எண்ணி மகிழ்ந்திடு
என்று மிந்த சுதந்திரத்தைப் பேணிக் காத்திடு!
-- என்.வி. சுப்பராமன், சென்னை.
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














