Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all

    என்னைப் பற்றி

Bookmark this page



Favorites

Picture Puzzles

Achalam.com
AKR Consultants
Young Poet.org
RCC pipes.com
Brahmin Today.org
ACOE.co.in
Ruralseva.com
Healthcareall.org
Kalakad.org
CIT76.com
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
Peopleofindia.net
Astrotimers.com
EducationalService.net
tamilliterature.net

kavithai kuyil
Pillaiyar
Thamiz Thenee
Positive Anthony

CIT India.com
Airomatic Systems
KTVR.com
Nilacharal.com
Societal Support
Tamilunltd.com
Mgl Authors



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites


வெளியே

Grandpa Cheenu
தமிழ் அநிதம்
Positive Anthony
Mazalais Blog
Tamil Software
தமிழ்த்தேனீ
மீராம்பிகை
கீதா சாம்பசிவம்
காலனை வென்றவன்
அன்புடன் அருணா
நிலாச்சாரல்
They Link Us
Learn Tamil
Tamil University
Cultural India
தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com
Digital Flash Clock
Vrishin Vigneshwar


Tamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

மழலைகள்








 

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்
நீல. பகவன்


ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர் அருளிய

ஸ்ரீ கணேச பஞ்சரத்தினம்

முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்தி ஸாதகம்
கலாதரா வதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசபாசு நாசகம் நமாமி தம் விநாயகம்

மாதுமை பெற்ற மகிழ்வதனால்
மழகளிராக வந்தவனே!
மோதகம் கரத்தில் ஏந்தியதால்
மோனமும் மகிழ்வுங் கொண்டவனே!
போதகத் திருமாமுகத்தவனே!
பூசைகள் புரிவோர் யாவருக்கும்
நாதனே துதிக்கை தூக்கித்தான்
நாளும் முக்தியருள்பவனே!
சந்திரக் கலையைத் தரித்தவனே!
சந்ததம் உந்தன் சரிதமதை
வந்திவண் கூறும் அடியவரை
வாழ்த்தி வாழ வைப்பவனே!
சிந்தா குலங்கள் தீர்த்திடவே
சீர்மிகு தலைவன் தானாகி
அந்தமில் அரசே கஜாகரன்தன்
அந்தகன் ஆனாய் கணபதியே!

நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமஸ் ஸ¤ராரி நிர்ஜரம் நதாதிகாப துத்தரம் ஐ
ஸ¤ரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

தன்னை வணங்கும் தரமறியார்
தம்மைப் பயத்தால் தானழுத்திப்
பின்னர் வணங்கும் பேறளித்தே,
பிழைகள் போக்கும் பெருமனத்தோய்
என்றும் ஏத்தும் அமரரையே
எதிர்க்கும் அசுரர் குலமழிய
வென்றாய் வெற்றி விநாயகனே
விளங்கு தேவர்க் கதிபதியே!

எதையும் வேண்டா எளியோர்க்கும்
எதையும் அளிக்கும் ஏரம்பா
புதையல் போன்ற பொருள்சேரப்
புகலும் அதிதே வதைநீயே

புதைகொள் மதத்த, வேதகணம்
போற்றி வணங்கப் பெறுவாயே?
இதையிவன் எழுத இவன்முன்னோர்
எழுதிய கருத்தும் இதுதானே?

சண்டிகே சுரரும் அவர்மேலாய்ச்
சர்வே சுரர்க்கும் மேலாக
உண்டெனக் கூறும் உயர்பொருளாய்
உலகின் மூல காரணனே!
பண்டுளோர் புரமே மாயமென்பர்
புரத்தின் மேலாம் பரம்பொருளே
அண்டி னோர்க்கே அபயகரம்
அளித்தே காக்குங் கணபதியே!

ஸமஸ்த லோகசங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம்
தரேதரோ தரம்வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

ஈரேழ் உலக மக்களுக்கும்
இன்பம் அளிக்க வல்லவனே!
சீரே துமிலா கஜாசுரனைச்
சீறிப் பாய்ந்தே வதஞ்செய்தாய்!
பேரா தரிக்கும் பெருமானே
பேருல கைநின் பெருவயிற்றுள்
தீரா இன்பப் பெருக்குடனே
தினமும் தாங்கிக் காப்பவனே!
அழகிய ஐரா வதம்போன்றே
அமைந்த முகத்தோய் அனுதினமும்
பொழியுங் கருணை மாமுகிலே
பொலிவார் புகழ்சேர் பூங்கரத்தோய்
மொழியிற் செயலில் முறையறியா
மூடர் தமக்கும் முன்னிற்பாய்
தொழுவோர்க் கிரங்கி மனமகிழத்
துணையாய் வருவாய் கணபதியே!

அகிஞ்ச நார்த்தி மார்ஜனம் சிரந்த நோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸ¤ராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோல தான வாரணம் பஜே புராண வாரணம்

வணங்கும் அடியார் தமைவாட்டும்
வறுமை, துன்பம் வேரறுப்பாய்!
மணக்கும் மறையின் மாறாத
மகத்துவம் அறிந்தே துதி செய்வோர்
இணக்கத் திற்கே இயல்புடனே
இன்பம் அளிக்கும் இளங்களிறே!
கணமும் பூத கணங்களையே
காக்குங் காரார் கணபதியே!

திரிபுர மெரித்த திறனுடையான்
தினமகிழ் வறுநல் திருமகனே!
புரிபெரும் போரில் புல்லசுரர்
புலம், குலம் அழித்த போர்க்களிறே!

கரிபோல் எருமை தனிலூரும்
காலன் கணக்கைக் கடந்தடியார்
புரியும் பூசை ஏற்றிந்த
பூதலம் காக்கும் புண்ணியனே!

விளங்கு விசையன் போன்றோர்தம்
வில்லின் ஆற்றல் விரிவு பெறக்
களத்திற் காட்டுந் திறனுக்கே
காரணனான கணபதியே!
அளக்க லாகா மதநீரை
அருவியாக நிதம் பொழிந்தே
களகம் ஊர்ந்த கணபதியே!
களிக்கும் நெஞ்சிற் கதிபதியே!

நிதாந்த காந்த தந்தகாந்தம் அந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீந மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்தகம்

தந்தத் தழகே தனியழகு
தகுபல் வரிசை மிகஅழகாம்
அந்தகனுக்கும் அந்தகனாம்
அரந்திரு மகனே அகத்தினிலே
சிந்தித் தறிய இயலாத
சீராம் வடிவச் செந்தூரமே!
வந்த வினையும் வருவினையும்
வாடிப் போக வந்தருளே!
பிறப்பிறாப் பற்ற பெருமானே
பிழையறி யாத ஞானியரின்
அறந்தளிர் தருவாம் இதயமதில்
அறிந்தினி தமர்வாய்! அறியதொரு
குறிநெறி காட்டுங் குணக்குன்றே!
கொம்பில் ஒன்றைக் கொம்பொடித்தே
அறத்தின் சாறாம் பாரதத்தை
அளித்தனை வாழ்த்தி வணங்குவனே!

நூற்பயன்

மஹா கணேச பஞ்ச ரத்ன மாத ரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ர பாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேச்வரம்
அரோக தாம தோஷதாம் ஸ¤ஸா ஹிதீம் ஸ¤புத்ரதாம்
ஸமா ஹி தாயரஷ்டபூதி மப்யுபைதி ஸோசிராத்

காலை எழுந்து கருத்துடனே கணேச பஞ்ச ரத்தினத்தைச்
சீலஞ் சிறக்கச் செயல்சிறக்க சிந்தித் துரைத்துத் தியானிக்கக்
காலம் மாறுங் கடுந்துயரம் கணத்தில் மாறும் கனுவுறுநல்
மூலப் பொருளாங் கணநாதன் முன்னின் றருள்வான் முயல்வீரே!

விரைவில் பிணிகள் விலகிவிடும் விளங்கு குற்றம் விடுபடுமே!
வரையுங் கவிதை வளம்பெருகும் வழிவழி வாழ்வில் நலம்பெருக,
உரைக்க உயர்வாம் புத்திரரால் உண்மையில் நன்மை உண்டாகும்!
நரைதிரை அணுகா நீண்டாயுள், நாடுஞ் செல்வ நிறைவுளதே!

நீல. பகதீசுவரன்

மழலைகள் ஆசிரியர் குழு என் படைப்புகள்



             



Your Feedback


Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required




Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday