தந்தை காந்தி!
நீல. பகவன்
தரணி போற்றுங் காந்தியாம்
சிந்தை என்றும் மகிழவே
சிறந்து வாழ்ந்த காந்தியாம்!
யந்திரம்போல் ராட்டையை
இயக்கி நின்ற காந்தியாம்!
இந்தியாவின் விடுதலை
இசைத்துத் தந்த காந்தியாம்
அன்பே நமக்குப் போதுமே!
அகிலம் ஆளும் ஆயுதம்
என்று சொன்ன காந்தியின்
எழிலார் முகமும் சாந்தியே!
அன்று சிறைக்குச் சென்றவர்
அடியும் உதையும் பெற்றவர்
குன்றம் அசையு மாயினும்
கொள்கை மாறாக் காந்தியே
ஏசு புத்தர் போலவே
எழுந்தார் இந்த ஏந்தலே!
வீசும் நல்ல ஒளியுடன்
விளங்கு பரிதி போலவே!
மாசிலாத மனமுடை
மாத வத்தின் பிறப்பினர்!
தேசம் போற்றும் உத்தமர்!
தேர்ந்த கல்வி வித்தகர்!
உலகில் உள்ள மக்களின்
உள்ள மென்னுங் கோவிலில்
உறைந்து வாழ்வர் என்பதை
தெள்ளு தமிழ் மொழிதனில்
தெளிந்து சொன்ன வள்ளுவர்
கள்ள மில்லா மொழிபெறும்
கருத்துக் காந்தி வடிவமே!
நீல. பகதீசுவரன்
மழலைகள் ஆசிரியர் குழு
என் படைப்புகள்
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













