தாயென்று கும்பிடடி பாப்பா
- அழகனின் ஆனந்தக் கும்மி!
செபரா
கும்மியடிப் பெண்ணே! கும்மியடிப் பெண்ணே! எங்கள்
குமரனை எண்ணியேக் கும்மியடி!
நம்மையும் இனி வரும் நாளுமே காத்திடும்
நாதனருள் எண்ணிக் கும்மியடி!!
இன்னரும் தமிழினில் இனியதோர் பண்ணதில்
மன்னவன் பெயர் சொல்லிக் கும்மியடி!!
என்னவன் இளையனை இனிய தமிழ் காக்கும்
இறைவனை எண்ணியேக் கும்மியடி!!
பாலனவனிங்கு பழவினை தீர்த்திடும்
பாங்கினை யாசித்தேக் கும்மியடி
ஆலகாலம் உண்டான் அரனவன் திருமுகன்
அழகன் புகழ் பாடிக் கும்மியடி!!
அருணகிரியோடு, குமரகுருபரர்
அழகு தமிழ் பாடும் நக்கீரர்;
அனுபூதி, அலங்காரம் ஆற்றுப்படை பாடும்
அழகனைப் பாடியேக் கும்மியடி!!
கந்தனை நமை இங்குக் காத்திடும் தெய்வத்தைக்
கருணைக் கடலினைப் பாடி நிதம்
எந்தனையும் ஆளும் இறைவனையே எண்ணி
இதயம் விழைந்திங்கு கும்மியடி!!
அறுமுகன் திருப்புகழ் அனுதினமும் சொல்லியே
ஆனந்தமாகவேக் கும்மியடி!!
சிறுவாபுரி வளர் செல்வக் குமரனைச்
சிந்தனை செய்தே நீ கும்மியடி!!
வானோரும், முனிவரும், வளர்ஞானச் சித்தர்களும்
வணங்கித் துதித்த நம் வேலவனை
ஆனதோர் பிறவியும் அருள் பெற்றுய்யவே
ஆனந்தமாகவேக் கும்மியடி!!
சிவபாலனை எண்ணியேக் கும்மியடி!!
அருள் வேலனைப் பாடியேக் கும்மியடி!!
அன்புடன்
செபரா
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














