தாய்மொழி
வெற்றிவளவன்
உலகமெங்கும் ஒரே மொழி
உலகத்தில் உதித்த நாளில்
சிசுவாய் செவியில் கேட்ட மொழி
பூவுலக வாழ்வு தனில்
முதன் முதலாய் கேட்ட மொழி
தாலாட்டுப் பாடல் வழி
தாயின்குரல் கேட்ட மொழி
நாவசைத்து நல்லவற்றை
மழலையிலே கொஞ்சும் மொழி
கல்விக்கூடம் சென்றேதான்
அகரம் முதலாய் கற்ற மொழி
ஈடில்லாத சிறப்புகளை
பெற்றமொழி அன்னை மொழி
அன்னை தந்தை ஆசான் வழி
உள்ளந்தனில் உறைந்த மொழி
அயல்நாட்டு சிந்தனையும்
சிந்திக்கும் சிந்தை மொழி
கனவுதனை காண்பதுவும்
கற்றுணர்ந்த அன்னை மொழி
சினத்தினிலும் சிதறிவரும்
சிறப்புப் பெற்ற சீல மொழி
அன்புதனை உய்த்திடவே
கொஞ்சுகின்ற கிள்ளை மொழி
ஆபத்திலும் அலறுவதே
அன்று கற்ற அன்னை மொழி
ஆண்டவனை அழைப்பதுவும்
ஆய்ந்துணர்ந்த அறிவு மொழி
அனைத்தும் அந்த அன்புமொழி
அனைவருக்கும் ஒரே மொழி
எல்லாச் சிறப்பும் பெற்ற மொழி
அனைத்தும் அந்த அன்னை மொழி
சிசுவாய் செவியில் கேட்ட மொழி
பூவுலக வாழ்வு தனில்
முதன் முதலாய் கேட்ட மொழி
தாலாட்டுப் பாடல் வழி
தாயின்குரல் கேட்ட மொழி
நாவசைத்து நல்லவற்றை
மழலையிலே கொஞ்சும் மொழி
கல்விக்கூடம் சென்றேதான்
அகரம் முதலாய் கற்ற மொழி
ஈடில்லாத சிறப்புகளை
பெற்றமொழி அன்னை மொழி
அன்னை தந்தை ஆசான் வழி
உள்ளந்தனில் உறைந்த மொழி
அயல்நாட்டு சிந்தனையும்
சிந்திக்கும் சிந்தை மொழி
கனவுதனை காண்பதுவும்
கற்றுணர்ந்த அன்னை மொழி
சினத்தினிலும் சிதறிவரும்
சிறப்புப் பெற்ற சீல மொழி
அன்புதனை உய்த்திடவே
கொஞ்சுகின்ற கிள்ளை மொழி
ஆபத்திலும் அலறுவதே
அன்று கற்ற அன்னை மொழி
ஆண்டவனை அழைப்பதுவும்
ஆய்ந்துணர்ந்த அறிவு மொழி
அனைத்தும் அந்த அன்புமொழி
அனைவருக்கும் ஒரே மொழி
எல்லாச் சிறப்பும் பெற்ற மொழி
அனைத்தும் அந்த அன்னை மொழி
oOo
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||












