மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

நினைவில் நின்றவை

இணையப் பாட்டி, சீனு தாத்தா

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management

அந்த நாள் ஞாபகம்.....

இணையப் பாட்டி:

தியாகராஜசுவாமிகளின் ஆராதனை நாளில் ஒரு ஆங்கிலேயரும் ஒரு அமெரிக்கரும் பங்கு பெற்றுச் சிறப்பித்தினர், வியப்பாக இருக்கிறதா? வருடம் 1953ல் மிஸ்டர் ஜான் கோட்ஸ் என்பவரும் மிஸ்டர் ஹாரிபவர்ஸ் என்ற அமெரிக்கரும் திருவையாறு உத்சவத்திற்கு வந்திருந்தனர். அவர்களும் பகுள பஞ்சமி அன்று கவேரியில் ஸ்னானம் செய்து நெற்றியில் திருநீரும் குங்குமமும் அணிந்து இடுப்பில் வேஷ்டி தரித்து அங்கவஸ்திரத்துடன் கோஷ்டியில் அமர்ந்துக் கொண்டு எல்லாப் பாடல்களையும் பாடினார்கள். இந்நிகழ்ச்சி முடிந்ததும் அந்த அமெரிக்கர் பவர்ஸ் தானும் தனியாக மேடைக் கச்சேரி செய்ய விரும்புவதாகவும், அன்மதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதில் அவ்ருக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஸ்ரீ ரகுவரப்ரமேய என்று காமபோதி ராகத்திலும் "கீதர்த்தமு" என்று சுருட்டி ராகத்திலும் அந்த மண்டபத்தில் 45000 ஜனங்கள் முன் பாட எல்லோரும் பரவசமானார்கள். அவரின தியாகராஜ பக்தி அவரை மேடையில் ஏற்றிவிட்டது. ஸ்ரீமான் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் அவரை மிகவும் ஊக்குவித்தார்.

அன்புடன் விசாலம்

சீனு தாத்தா:

Mountains - image courtesy: Living wilderness.com

நானும் எனது 'ஒன்று விட்ட' அக்காள் ஒருவரின் மகன், இன்னுமொரு 'ஒன்று விட்ட' அக்காளின் மகன் மூவரும் விடுமுறைக்காக இரண்டாவதாகச் சொல்லப்பட்டவனின் சொந்த மாமன் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அந்த ஊரின் பெயர் திருப்பாப்புலியூர் என்ற ஞாபகம். அதன் ரயில் நிலையம், நான் பிறந்த ஊரான புகலூருக்கும் திருச்சிக்கும் நடுவில் உள்ளது.

அன்று ஞாயிற்றுக் கிழமை. துருதுருவென்றிருந்த எங்கள் மூவருக்கும் ஏதாவது துணிவான செயலில் ஈடுபட வேன்றுமென்ற ஆவல் உந்தியது. அப்பொழுதுதான் எனக்குத் தலைமலையைப் பற்றிய ஞாபகம் வந்தது.

தாத்தா சீனு - Grandfather of mazhalaigal
புகலூர் காவிரிக்கரையின் கிழக்கு திசையில் பார்த்தால் தூரத்தில் வலதிசையாகத் திரும்பிக்கொண்டிருக்கும் காவிரியின் அக்கரையில் இரு மலைகள் தெரியும். முதலில் தெரிவதைக் கொள்ளி மலை யென்றும், அதன் பின்னே இன்னமும் பெரியதாய்த் தெரியும் மலையைத் தலைமலை என்றும் சொல்லுவார்கள். அம்மலைகளின் பல இடத்திலிருந்து வெளிப்படும். ஜ்வாலைகளை (சிலர் 'கொள்ளீமலைப் பிசாசு' என்று கூறுவதை அந்த வயதில் கூட நான் நம்பவில்லை) எனது பள்ளியில் அது 'காட்டுத் தீ' என்று முன்னமேயே விளக்கிவிட்டார்கள். நாங்கள் சென்ற ஊரின் அக்கரையில் தான் தலைமலை இருக்கிறது என்று தெரியவந்ததும் அம்மலையில் ஏறி அதன் உச்சியைத் தொட வேண்டும் என்ற அவா எனக்கு வந்ததும், என் சகாக்களும் அதற்கு உடனே ஒப்புக் கொண்டதனால் காலையிலேயே 'பழைய அன்னம்' உண்டு விட்டுக் கிளம்பினோம்.

கதையை முடியும் வரை சுருக்கி விடுகிறேன்.

தலைமலையின் உச்சத்தில் உள்ள கோவிலுக்குப் போகும் வழி வெகு தொலைவில் மலையின் அடுத்த பக்கத்தில் இருக்கிறது எனத் தெரியவந்தது.. எங்கள் இலட்சியமோ நேர் வழியே முள்ளார்ந்த புதர்கள் சூழ்ந்த குருங்காட்டினைத் தாண்டி உச்சியைப் பிடிக்க வேண்டுமென்பது.

நடந்தோம், நடந்தோம், நடந்து கொண்டேயிருந்தோம், வெரும் வயல்கள்தான்! எங்கள் துரதிர்ஷ்டம் வழியில் ஒரு குக்கிராமம் கூடத் தென்படவில்லை. உச்சி வெய்யலில் வெகுவாக நடந்த எங்களுக்கு மேலே ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாதபடித் தாங்கொணாத் தாகமெடுத்தது. அங்கும் இங்கும் உற்று நோக்கியதில் வயல்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கான ஒரு கிணறு தென்பட்டது. அடியிலிருந்து நீரை எடுப்பதற்குக் கயிறுமில்லை, பக்கட்டுமில்லை. நானும் நீந்தத் தெரிந்த மற்றொருவனும் மெதுவாகப் படிப் படியாக அந்த ஆழமான கிணற்றின் உள்ளே இறங்கித் தண்ணீரில் இருந்துகொண்டே வேண்டுமளவு தாகம் தீரும் வரை நீரைக் குடித்துவிட்டு, நீந்தத் தெரியாத மூனாமவனை மெதுவாக உள்ளே கிடைசிப் படி வரை இறங்கவைத்து ஒருவர் மாறி ஒருவராக் இரு கைகளையும் கூப்பிக்கொண்டு தண்ணீரை மொண்டு நீந்தத் தெரியாதவனின் கூப்பிய கரங்களில் ஊற்றி ஒரு விதமாக அவன் தாகததையும் போக்கினோம்.

பிறகு நடந்தது வெறும் வெட்கப்பட வேண்டிய ஏமாறுதல் ஆயிற்று.

மலை அடிவாரத்திற்கு வந்து தைரியத்தை வளர்த்துக் கொண்டு கரடு முரடான முள்ளார்ந்த அந்தப் புதர்க்காட்டில் ஏறுவது அவ்வளவு சுலபமல்ல என்று அப்பொழுதுதான் நாங்கள் உணர்ந்தோம். ஒரு 200 அடி கூட ஏறவில்லை அதற்குள் களைத்தும் தளர்ந்தும் ஊக்கமிழக்கலானோம். அப்பொழுதே சூரியன் கீழ்வானத்திற்கு வந்து விட்டான். அப்பொழுதே வீடு திரும்பாவிட்டால் பெரும் ஆபத்தில் சிக்கிக் கொண்டு விடுவோம் என்ற பயம் மேலோங்கி, உடனே வீட்டிற்கு நடையைக் கட்டினோம். எப்படியோ வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

இப்பொழுது சொல்கிறேன் நாங்கள் மூவரும் செய்த படுதோல்வி கண்ட வீரச்செயலின் தேதியை: 1948, ஜனவரி மாதம் 30. புஷ்ய பகுள பஞ்சமி, தியாகராஜரின் ஆராதனை நாள். வீட்டில் ரேடியோவில் திருவையாறு உற்சவத்தில் நடந்து கொண்டிருக்கும் கச்சேரிகளைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தால், ரேடியோவில் ஏதொ சோக கீதம் (வாத்தியங்கள் மூலமாக) ஒலிப்பரப்பப் பட்டுக்கொண்டிருந்தது.

பிறகு என்ன நடந்தது எல்லோரும் ஊகித்துக் கொண்டிருப்பீர்கள். அன்று மாலைதான் மஹாத்மா காந்தி அடிகள் ஒரு வெறியனின் துப்பாக்கி குண்டினால் வீர சொர்க்கம் அடைந்தார். அதனால் திதிக் கணக்குப்படிப் பார்த்தால் இன்று தான் காந்தி அடிகளின் சிரார்த்த தினம்.

தியாகப்ரும்மத்திற்கும் காந்தி மகானுக்கும் உள்ள ஒற்றுமை தெரியவருகிறதல்லவா? மேலும் கவனியுங்கள் காந்தி அடிகளும் 'ஹே ராம்!' என்று சொல்லிக் கொண்டுதான் இறைவனடி சேர்ந்தார்.

மிகச் சோகத்துடன்

சீனு
(ஸ்ரீனிவாசன்)

YOUR FEEDBACK FOR THIS STORY
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com