தாயென்று கும்பிடடி பாப்பா
- நவீன இலக்கியம்
மழலைகள் ஆசிரியர் குழு
இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே,
இயந்திரங்கள் வகுத்திடுவீரே,
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே
கடலில் மூழ்கி நன் முத்தெடுப்பீரே
அரும்பும் வியர்வை நிலத்தில் விழ நித்தம்
ஆயிரம் தொழில்கள் செய்திடுவீரே
என்ற மஹாகவியின் வரிகளுக்கொப்பத் தொழில்கள் பெருகியும்
கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதைகொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
எனும் கருத்துக்கேற்பப் பிற மொழி பேசுவாருடன் உறவு மேம்பட்டும் விளங்குகின்ற சமுதாயத்திலே, காலத்தில் சூழலுக்கேற்பக் கருத்துக்கள் மாறி, அதற்கேற்ப இலக்கண விதிமுறைகளும் தளர்த்தப்பட்டு, தமிழில் கருத்துக்களுக்கும் கற்பனை வளத்துக்கும் அதிக முக்கியத்துவம் தந்து, எதுகை மோனை நயங்களையும், கவிதையின் நடையையும் பெரிதாகக் கொள்ளாமல் உருவாகும் இலக்கியங்களையும் நாம் ஆதரித்து அவற்றின் சுவையையும் அறிவது அவசியமாகிறது.
இதனைக்கருத்தில் கொண்டு நவீன இலக்கியங்கள் பற்றிய கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுக்கவே இப்பகுதி துவங்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையான் பதிகம் - பாகம் 1
HTML FORM
அண்ணாமலையான் பதிகம் - பாகம் 2
HTML FORM
அண்ணாமலையான் பதிகம் - பாகம் 3
HTML FORM
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||












