மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 
மழலை மொட்டு       ஆசூரி இராஜகோபாலன்

 

உள்ளே
 இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management



வெளியே

தமிழிலக்கியம்
தமிழிதழ்கள்
தமிழ்மணம்
நிலாச்சாரல்
சுரதா.காம்
தேன்கூடு
தினமலர்
தினகரன்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services

காஞ்சி கம்பன் கழகம் மற்றும் சிந்தனா அமைப்புகளில் உறுப்பினரான ஆசூரி ராஜகோபாலன் அவர்கள் ஆசிரியப் பணியில் சிறு குழந்தைகளுக்குக் கல்வி புகட்டி, அதிலுள்ள சுகத்தை முழுமையாக உணர்ந்தவர். யாம் பெற்ற இன்பம் இவ்வுலகமும் பெறவேண்டி அவர் குழந்தைகளுக்காக எழுதிய மழலை மொழிப் பாடல்களின் தொகுப்பு புத்தக வடிவில் "மழலை மொட்டு" எனும் பெயரில் 6-10-2007 அன்று சிந்தனா அமைப்பின் தலைவர் டாக்டர் C.K. இராமன், எம்.ஏ.,எம்.எல். அவர்களால் வெளியிடப்பட்டது. தமிழ், சமஸ்க்ருத, ஆங்கில ஆன்மீக சொற்பொழிவாளர் இராமாயணம் சீனிவாசன் ஐயா அவர்கள் விழாவுக்குத் தலைமை ஏற்றார். இவ்விழாவில் புலவர் நீல. பகவதீஸ்வரன், அவரது மருமகன் இளைய பகவதீஸ்வரன், புலவர் முத்து. இராமமூர்த்தி, மழலைகள்.காம் ஆசிரியர் ஆகிரா மற்றும் பலர் பங்கேற்றுப் பேசினர். இந்நூலைப் படித்த சான்றோர்கள் அவர் மேல் எழுதிய கவிதைகளை இங்குக் காண்க.

இராமாயணம் ஐயா அவர்களின் வாழ்த்து

பாடுவது எல்லாம் பாட்டாகாது
பாலர்க்குப் பாடுவதுதான் பாட்டாகும்
தேடுவது எல்லாம் கிடைப்பதில்லை
தேடாமல் இருப்பதும் வீணேயாகும்
நாடுவது யாவும் நல்லதாயின்
நானிலம் சிறப்பாய் உயர்வெய்தும்
பாடுவது தொழிலில்லா ஆசூரி
பாடியது பயனுள்ள பாட்டாகும்

தெள்ளுத் தமிழ்க் கலைவாணர்
தெளிவாகத் தந்துள்ள பாடல்கள்
உள்ளம் புகுத்த உணர்வூட்டி
உத்தமராய் சிரார்களை ஆக்கிவிடும்
வெல்ல வாழ்வினில் வழிகாட்டும்
வெந்துயர் வாராமல் பாதுகாக்கும்
சொல்ல நினைத்ததைத் தளராமல்
சொல்லிடும் பாங்கு சுவையாகும்

சின்னவர் முன்னேற வழிகாட்டி
சிலபல கவிதைகளை ஒன்றுசேர்த்து
இன்னமுதாய் அளித்திட்ட இராசகோபால்
இனிதே மேலும் தொடர்ந்திடுக
எண்ணமெலாம் நிறைந்து இருந்திடவே
எளிதான கவிதைகளைப் படைத்திட்டீர்
சின்னவர் இறைவனின் தாள்பணிந்து
சிறப்பான வாழ்வுபெற வாழ்த்துவனே.

இராமாயணம் சீனிவாசன்

 

பாராட்டு மடல் - புலவர் நீல பகவன்

அருந்தமிழ் மூதாட்டி ஔவைபாடல்
அகம் தனிலே நிரம்பிடவே அமுதமாகப்
பொருந்துகிற முறைதனிலே குழந்தைப்பாடல்
புதியவழி காட்டிநமைப் பொலியவைத்தார்!
அருவியெனக் கவிபொழிய அடுத்துவந்தார்
அமரகவி பாரதியார்! அவரைப்போல
பெரும்புகழால் கவிமணியும் பாடல்சொன்னார்
பேரழகு வள்ளியப்பா பிழிந்தெடுத்தார்!

பிள்ளைமொழி கிள்ளைமொழி வள்ளலாகிப்
பிழையறியாக் குழந்தைகட்கு மழலைசொன்னார்
தெள்ளுதமிழ்க் கவிவாணர் நமதுநண்பர்
திகழிராச கோபாலன் ஆசானாகிக்
கள்ளமிலாப் பிள்ளைகளின் கவனமீர்த்துக்
கவிதையென ஆக்கியதே மழலைமொட்டு!
உள்ளமெலாம் உவந்திடவே உணர்வையூட்டும்!
உண்மைவெறும் புகழ்ச்சியில்லை உயர்ந்தபாட்டே!

ஆரம்பத்தில் பள்ளிதனில் ஆசானானார்!
அடுத்தவரே தலைமையெனும் பேறுபெற்றார்!
ஊரெங்கும் இவர்பாடல் ஒலித்தல்வேண்டி
ஊக்கமது குறையாது உழைத்துயர்ந்தார்
பார்போற்ற நாளேடும் வாரந்தோறும்
பரவுகின்ற ஏடுகளும் பாடல்பெற்றுப்
பேர்பெறவே செய்ததுதான் இவரின்வெற்றி!
பேரருள் ஆளரவர் அமைத்தவெற்றி!

மழலைமொட்டு பிள்ளைகளின் மனதைத்தொட்டு
மகிழ்வோடு மணம்பரப்பும் மலர்களாகும்!
குழலினிது யாழினிது ஆனால்மக்கள்
குதலையதே மிகஇனிது குறளேகூற
அழகுடைய கவிதையிது ஆக்கம்சேர்க்கும்
ஆசூரி பாவேந்தர் ஆகிவாழ்வில்
பொழிகின்ற கவிதைமழை காஞ்சிஎன்ன?
பூவுலகே போற்றட்டும் புகழால்வாழ்க.

வாழ்க வளமுடன்

எழுவது வயதினை எய்திய இளைஞர்
ஒழுக்கமும் கல்வியும் உயர்வுற உடையவர்
அழகிய தமிழ்போல் அனுதினம் வாழ்ந்திட
அழகன் ஆரா அமுதினை இறைஞ்சுமே!

வாழ்த்து மடல் - இளைய பகவதீசுவரன்

அன்பிற் சிறந்த ஆசூரி
அறிவில் வளர்ந்த ஆசூரி
சின்னச்சின்ன வரிகளுள்
செறிந்த கருத்தைப் புகுத்தியே
அன்னை முதல் ஆவினம்வரை
அன்றாட வாழ்வில் இணைந்ததை
சன்னக் குரலின் மழலையர்
சொல்லும் பாட்டாய்த் தந்தாரே!

வேழ முகத்து விநாயகரை
விவிலியம் போற்றும் ஏசுவை
தோழமை கொண்டு நபிகளை
துதித்துப் பாடிப் பணிந்தாரே
ஆழ்வார் பாடிய கண்ணனையும்
அறுவடைத் திருநாள் தன்னையும்
குழந்தை மனதில் பேதமெலாம்
குறைத்து மறையப் பாடினரே

பார்த்த பொருளிலெல்லாம்
பயன் ஒன்றைக் கண்டரே!
சேர்ந்து வாழ்ந்திடக் காகத்தை
சிறந்த காவலாய் நாய்தனை

தேர்ந்த அருளுக்குப் பசுவினை
தித்திக்கும் மொழிக்குக் கிளியினை
பார்தனில் சமத்துவம் காட்டிட
பாங்காய் ரயிலையும் சொன்னாரே!

அஞ்சிலே மனதிலே பதிபவை
அறுபது கடந்தும் நின்றிடும்
நெஞ்சிலே இதனை நிறுத்தி
நீதிகள் பலவும் புகன்றார்
நஞ்செனப் பல்வகைச் செயல்கள்
நாட்டிலே பரவிக் கிடக்க
கொஞ்சும் மழலையர்க்கு இதனினை
கொண்டு சேர்த்தல் நம் கடனே!

குழந்தை இலக்கிய நூல்கள்
குறைந்து வருகின்ற வேளையிலே
பழகும் தமிழில் பற்பல
பாடல்கள் இயற்றித் தந்தாரே
எழுதி அவரும் நமக்கே
இன்னும் பலநூல் தந்திடவே
அழகுத் திருமால் அவருக்கே
ஆயுள் அதிகம் அருள்வாரே!

YOUR FEEDBACK FOR THIS ARTICLE

Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com